மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 658

 முருகப்பெருமான் துணை இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கைப்பட எழுதிய நூலாகும் இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும் துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு 

மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 658 

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. ,

18.07.2021, ஞாயிற்றுக்கிழமை

1 தவவாழ்வு கொண்ட அரங்கனே 
தர்மனாக வந்த தேசிகனே
அவதாரம் எடுத்து என் சக்தியாக
அகிலத்தை மாற்றுவேன் என
2 சூட்சும வரம் பெற்றுவந்த குருராஜனே 
அரசனே அரங்கனே உந்தனுக்கு
சுப்ரமணியர் யானும் அருளுவேன்
ஞான அறிவுரை ஆசி
3. தரணியில் உன் தர்மம் மிகுந்துவர
தன்னார்வ தொண்டுகளும் இனிதே
பெருகிவர வருகின்ற இந்த உயர் சக்தி மூலமே
வையகம் அழிவில் இருந்து மீளும்

4. மீளுமப்பா அரங்கன் நீ சொல்லும்
உபதேசங்களைக்கொண்டு மேலான மக்கள் படை
ஞானவழியில் உருவாகி காலமெல்லாம்
ஆறுமுகன் என் நாமஜெபத்தோடு கருணை நிறைந்து மக்கள் படை சிறந்து

5. சிறந்துமே இந்த உலகம் தர்மபலம் கூடி
சிறப்பான அரங்கன் உன் தலைமை ஏற்று
இனிதே மறுப்பின்றி கலியுகம் ஞானயுகமாற்றம்
மாதவசி உன் தொண்டர் படை மூலம் மாற்றம் காணும்

6. காணவே அரங்கன் நீயே கலியின் சிறந்த ஞானி
கருணைகொண்ட அரங்கன் உன் கொள்கையே உயர்ந்த கொள்கை
ஞானமென பலவகையில் தேடி அலைந்து
நம்பகநிலைகாணா வாழும் மக்களே

7. மக்களே ஓங்காரக்குடில் நோக்கி வந்து
வள்ளலாக வாழும் ஞானியாக உள்ள
அரங்கனே ஆக்கமுடன் குருவாக ஏற்று
அருள் தீட்சை ஏற்று அரங்கா முருகா என ஜெபதபம் கூறி வர

8. வருகவே வையகம் மாறும்
வடிவேலன் என் ஞான ஆட்சி உருவாகும்
தர்மபலம் கொண்ட அரங்கனை தொடரதொடர
தரணி பெரும் பாதுகாப்பு மிக்க பூமியாக மாறும்
ஞான அறிவுரை ஆசி முற்றே
-சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *