ஓங்காரக்குடில் உலகினை எப்போது ஆட்சி செய்யும் யுகமாற்றம் எப்போது நிகழும் – மகான் சுப்பிரமணியர் அருளிய அறிவுரை ஆசி நூல்

#முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
#தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

#ஓங்காரக்குடில் உலகினை எப்போது #ஆட்சி செய்யும் யுகமாற்றம் எப்போது நிகழும்

மகான் சுப்பிரமணியர் அருளிய அறிவுரை ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் A.A. தரணிபாலன், #தென்னூர், திருச்சி.
04.05.2020, #திங்கட்கிழமை

கருணையாய் #உருவெடுத்த கலசமுனிப்பிள்ளை
கந்தனின் #அவதாரம் தனக்கு ஆசி
முருகனே #வந்து சொல்வேன் ஆசி வாக்கு
#முருகயுகம் முருகன் ஆட்சி செய்ய ஆசி

ஆசிதனை #அரங்கன் மூலம் அகிலத்திற்கு சொல்வேன்
#அரங்கனே அரங்கத்தை #ஆள்வது திண்ணம்
#மாசற்ற மனத்தோடு குணமும் கொண்ட
#மகாஞானி அரங்கன் என உலகிற்கு சொல்வேன்

சொல்லுகிறேன் வேலவனே சுத்த #வாக்கு
#சுப்ரமண்யம் சுப்ரமண்யம் என்று சொன்னால்
#வெல்லுவான் மரணத்தையும் #கிருமியென்ன
#வேல்வந்து முன்னிற்கும் என் மக்களைக் காக்க

காக்கவே #ஞானசித்தர் காலம் தன்னை
காண்கின்றார் உலக மக்கள் இப்போதானே
#யோக்கியமாய் வாழ வேண்டும் என்பதற்கு
#யோகநெறி ஞானநெறி சாட்சியாகும்

ஆகுமிந்த உலகமதில் #சன்மார்க்கம் தான்
அற்புதமாய் #வெல்வதற்கு காலமாச்சு #மோகம்
கொண்டோர் #முற்றிலும் அழிந்து போவார்
முக்தி சித்தி #எண்ணம் கொண்டோர் வென்று நிற்பார்

நிற்கவே நடக்கின்ற #கிருமி தொற்றால்
நிகழ்த்தவே உலகத்தில் #மாந்தர்கள் மரணம்
உற்றதொரு #புலால் உணவு உண்பதாலே
உலகிற்கு இது #பாடம் இதுவேலன் #வாக்கு

வாக்குபடி #அகத்தியர் முதல் #வள்ளலார் வரையில்
வந்தோர்கள் சொல்வதெல்லாம் #புலால் மறுத்தல்
யோக்கியர்கள் கேட்டார்கள் #ஞானம் பெற்றார்
யோக ஞானம் #இல்லாதோர் புலால் #புசித்தார்

புலால் புசித்தார் #பலியானார் மரணமானார்
புலால் மறுத்தோர் #நீடுவாழ்ந்தார் முக்தி பெற்றார்
புலால் உண்டால் #புலையனவன் ஞானம் காணான்
புலால் மறுத்தால் #ஞானியாவான் முக்தி பெறுவான்

முக்தி பெற #முதற்படியே புலைகொலை நிறுத்தல்
முழுவதுமாய் புலால் மறுத்து #மதுமறுத்து
சுத்தமான சன்மார்க்க #வாழ்வு வாழ்ந்தால்
சுப்பிரமணியன் #தோன்றுவேன் அவரின் முன்னே

முன்னாக #வாசி நடத்தி தருவேன் நானே
#முனைதிறந்து வினை அழிய துணையாய்
நிற்பேன் #என்னையும் காண்பிப்பேன்
#இனத்தையும் காண்பிப்பேன் ஈசனையும் காண்பிப்பேன் இதுதான் உண்மை

உண்மையாய் உலகத்தின் #சுகாதார அமைப்பு
#ஒப்புக் கொண்டார் சைவஉணவே சிறந்ததென்று
#திண்ணமதாய் உலக மக்கள் புலால் மறுக்க
தீர்க்கமாய் #இத்தருணம் ஏற்றதாகும்

ஆகுமிந்த காலத்தில் எங்கள் #நாமத்தை
அகம் மகிழ உருகி சொல்வோர் கிருமி தொற்றில்லா
#தேகபிணி இல்லாது வாழ்வார் இது #சத்தியம்
தேசத்திற்கும் ஆன்மாவிற்கும் #எங்கள் நாமம்

எங்கள் நாமம் #உரமாக அமையுமப்பா
எங்கள் நாமம் #சொல்லிக்கொண்டு புலாலை #மறுத்து
எங்களின் #வழிபாடு செய்பவர்க்கெல்லாம்
இயற்கையும் #தலை வணங்கும் இதுதான் வாக்கு

வாக்குப்படி புலாலை ஒருவன் மறுத்து #விட்டால்
வணங்குமே #அவனையும் உயிர்கள் யாவும்
#சாக்காடும் நெருங்காது மரணமற்று
சன்மார்க்க நெறிநின்று #சித்திநிலை அடைவான்

அடைவதற்கே #ஓங்காரக்குடில் அழைக்கும்
அன்புடனே #அறமுடனே குடில்பணி இருக்கும்
தடையேது #குடில் வந்தால் #ஞானம் காண
தவசிகளின் நெறிமுறையை #உரைப்பது இங்கே

இங்கிருந்தே #சித்தர் மார்க்கம் #சன்மார்க்கம் எல்லாம்
இவ்வுலகமெங்கும் #பரவுதப்பா
இங்கிருந்து செல்வோர்க்கு மரணபயம் இல்லை
இனி வரும் காலத்திலும் இது தொடரும்

தொடர்ந்துமே #அறப்பணியில் ஈடுபடுவோர்க்கு
#தொற்றாது கிருமியும் சுப்பிரமணியர் #வாக்கு
திடமுடனே #எளியோரை நெருங்கிதானே
தீர்க்கமாய் #உணவளிக்க தொற்றாது கிருமி

கிருமியது #வளராது இனி #அழியும்
கிருமியை கொல்லவே நாமம் சொல்வீர்
கிருமியும் நடுங்குமே #அகத்தீசா என்றால்
கிருமியும் நடுங்குமே #முருகா என்றால்

என்றுமே #ராமலிங்கர் நாமம் சொல்ல
எந்த ஒரு கிருமியும் நமை #நெருங்காது
#அன்னம் கொடு ஏழைகளுக்கு அதுவே சேவை
அரங்கனின் #குரல் அதுவே உலகத்தோர்க்கு

உலகோர்க்கு தர்மத்தின் மூலமாக
உரைக்கின்ற #செய்திதான் சுப்பிரமணியன் இன்று
நலமுடனே #பாகுபாடு கண்டிடாமல்
#நாள்நாளும் அன்னமிட வேண்டும் என்றேன்

என்றுமே #பிணி கண்டம் #அண்டாமல் வாழ
என் பிள்ளை அரங்கனின் #வாக்கை ஏற்று
அன்னமதை இடுவோர்க்கு #அருள் பொருள்
அகத்தியனும் மூலரும் #புஜண்டரும் சேர்ந்து

சேர்ந்துதான் போகரும் புலத்தியரும் சிறப்பாக
வள்ளல் பெருமானும் #கிருமியை அழிப்பார்
#சார்ந்திருக்க வேண்டுமே ஞானியர் தம்மை
சண்முகா அகத்தீசா ராமலிங்கதேவா

தேவா என்று சொல்வோர்க்கு #தேவலோகம் திறக்கும்
தேவராவார் தேவர்களின் வரிசையில் நிற்பார்
பாவமும் அண்டாது என் நாமத்தை #சொன்னால்
பாங்காக வாழ்ந்திடுவார் வாழ்வதற்கே

வாழ்வதற்கே உலகமதை #மாற்றுதற்கும்
வந்ததொரு கிருமியுத்தம் அறிய வேண்டும்
ஊழ்வினைகள் #அற்றவர்கள் எங்கள் நாமம் சொல்வோர்
உயிர்க்கொலைகள் #செய்யமாட்டார் எங்கள் நாமம் சொல்வோர்

சொல்ல சொல்ல ஆன்மாவும் #சுத்தமாகும்
ஆழ்ந்திருக்கும் கிருமி தொற்று #மூன்று திங்களுக்குள்
நல்லதொரு #ஞானியர்கள் அருளால் #அடங்கும்
நலமுடனே ஓங்காரக்குடிலில் நடக்கும்

நடக்கின்ற தர்மத்திற்கு #தனம் அளிக்க
#ஞானியாவான் ஞானம் பெற்று நீடு வாழ்வான்
#முடங்காது அவன் வாழ்வு முற்றிலும் மேன்மை
#முழுமையாய் கண்டிடுவான் ஞானம் தன்னை

ஞானியர்கள் #வழிவந்த ஞானியே அரங்கன்
ஞானத்திற்கே வாழ்க்கையை #அர்ப்பணித்தவன்
அரங்கன் ஞானத்திற்கே உயிர் உடலை #தியாகித்தவன்
அரங்கன் ஞானத்திற்காய் உப்பு புளி காரம் #நீக்கி

நீக்கியே உணவு உண்ட #நித்திய ஞானி
நித்தம் நித்தம் அவர் நாமம் #எங்கள் நாமம்
வாக்கிலே வரவேண்டும் #காலைமாலை
வந்துவிட்டால் அவர் காண்பார் #சிவபதத்தை

சிவபதத்தை காண்பதுவும் #எளிதுமல்ல
சிவபதத்தை காண்போர்கள் #சிவத்தோடு சேர்வார்
#சிவம் எங்கே ஆசானின் பதத்தில் தான் இருக்கு
சிவத்தினை அடைவதற்கே #குரு அருள் வேண்டும்

#குரு அருள்தான் #சிவத்தினை காண்பிக்குமப்பா
குரு இல்லா வித்தை #குருட்டு வித்தை
#குருவழியால் சென்றால்தான் #தீவினை நீங்கும்
குருநாமம் சொன்னால் தான் #மரணம் நீங்கும்

நீங்குதற்கு வழியுரைத்தேன் #முருகன் இன்று
#நற்பவி ஓம் சண்முகாய நம என்று பாங்காக
நற்பவி ஓம் அகத்தீசாய நமவென்று பண்புடனே
#நற்பவி ஓம் இராமலிங்காய நம வென்று

நமவென்று சொல்வோர்க்கு #நமனும் இல்லை
நாள்நாளும் #துணிந்து அவர் வாழ்ந்திடலாமே
#இமைப்பொழுதும் விலகாமல் அவரைக் காப்போம்
எங்கள் காலம் #துவங்கியாச்சு இனி நடக்கும்

நடக்கவே #குடிலில் இருந்து #செய்திகள் யாவும்
நானிலமே சென்றுதான் #ஆட்சி செய்யும்
#முடங்காது மகான்களின் ஆட்சி காலம்
முறையோடு துவக்கமாச்சு #சார்வரி ஆண்டில்

ஆண்டுபின் #பிலவ வருடம் காலம் தன்னில்
அரங்கன் #புகழ் உலகமெங்கும் கொடிகட்டிக் கொள்ளும்
#வாகுடனே குடில் தானே #அரசாட்சி செய்யும்
வையகத்தீர் அஞ்சாதீர் #துணிந்து நிற்பீர்

நிற்கவே #புலைகொலை தவிர்த்து தானே
நிம்மதியாய் #சைவ உணவை உண்ணும்போது
உற்றதொரு #எங்களின் பாதுகாப்பை பெறுவீர்
உடலாலும் உள்ளத்தாலும் ஆக்கம் காண்பீர்

ஆக்கமும் #அறிவோடு அறமும் பெறுவீர்
அரங்கனின் #நாமம் சொல்லி வாழ வேண்டும்
#சாக்காட்டை நீக்குவீர் சன்மார்க்கத்தில் நின்று
சற்றுமே #அசையாதீர் எங்கள் வழி வாரீர்

எங்கள் #வழி சிவவழியே அழைக்கின்றேன் வேலன்
இனிவரும் காலமதில் #எங்கள் கொள்கையே வெல்லும்
எங்களின் நாமத்தால் #எதனையும் வெல்லலாம்
எங்களின் நாமம் சொல்லி #இனிதே வாழ்ந்து

வாழ்ந்துதான் #ஞானம் பெற அழைத்தேன் இன்று
வரவேண்டும் #வரவேண்டும் உலக மக்கள்
#ஊழ் போக்க வரவேண்டும் உலக மக்கள்
உலகையும் மாந்தரையும் அரங்கரையும் வாழ்த்தி

வாழ்த்தியே #வேலன் இன்று வாக்குரைத்தேன்
வாழ்த்துகிறேன் #அறப்பணிகள் செய்வோர் தன்னை
வாழ்த்துகிறேன் #குடில்பணி செய்வோர் தன்னை
#வாழ்க வாழ்க என்று சொல்லி சொன்னேன் முற்றே.
-சுபம்

#முருகப்பெருமான் துணை
மகான் #சுப்பிரமணியர் அருளிய யுகமாற்ற நிகழ்வு குறித்த #அறிவுரை ஆசி நூல்:

கருணையே வடிவமாக #வந்துதித்த அகத்தியரின் #பிள்ளையே அரங்கனே முருகப்பெருமான் எனது அவதாரமே ஆற்றல்மிக்க உமக்கு ஆசிதனை முருகப்பெருமான் யானே #நேரில் வந்து ஆசிகளை சொல்கின்றேன் #ஐயா அரங்கனே.

இவ்வுலகினில் #கலியுகம் மாறி முருகப்பெருமான் எமது தலைமையில் #ஞானயுகம் அமைந்திட யாமே நேரில் தோன்றி இவ்வுலகை ஞான #ஆட்சி செய்திட உகந்த வாய்ப்பாய் அரங்கமகான் மூலம் #உலகிற்கு ஆசி தனை அருளுகின்றேன்.

அரங்கமகானே அரங்கமாகிய இவ்வுலகத்தை #ஆள்வது உறுதி உறுதி. #மாசற்ற மனமும், குணமும் கொண்ட மகா ஞானிதான் அரங்கமகான் என உலகிற்கு #ஓங்கி உரைக்கின்றேன் முருகப்பெருமான் யானுமே.

முருகப்பெருமான் யான் உலகிற்கு ஒன்று உரைக்கின்றேன் இது சத்திய வாக்காகும் உலகமக்களே நீங்கள் எம்மீது #பக்தி கொண்டு மனமுருகி “சுப்பிரமண்யம்” “சுப்பிரமண்யம்” என்று சொன்னால் சொல்லுகின்றவர் மரணத்தையும் வெல்வார். அப்படி இருக்க #கிருமிகளால் உங்களை என்ன செய்ய முடியும்? எமது வேல்படை வந்து முன்னிற்கும், எம் மக்களைக் காக்க. ஆதலினாலே மக்கள் காண்பது உலகினில் #ஞானசித்தர் ஆட்சிதானே, உலக மக்களெல்லாம் இப்போது தான், தாங்கள் சென்ற #தீயவழிகளில் இருந்து மீண்டு #யோக்கியமாய் வாழ வேண்டும் என்பதை #உணர்கின்றனர். யோகநெறி, ஞானநெறி வழி சென்றோரெல்லாம் துன்பமில்லாமல் வாழ்வதே இதற்கு #சாட்சியாகும். ஆதலினாலே மக்களே நீங்கள் கடைத்தேறவே எம்மால் #உருவாக்கப்பட்ட சன்மார்க்கத்தினை நீங்களெல்லாம் ஏற்றுக்கொண்டு இந்த துன்பம்மிக்க கலியுகத்தினை வெல்வதற்கு இச்சமயமே #அற்புதமான காலமாகும்.

உலக மக்களே நீங்களெல்லாம் #சன்மார்க்கத்தில் வந்துவிடுங்கள், #தப்பித்து விடலாம் கலியுக பிடியிலிருந்து. அதை விடுத்து #மோகம் கொண்டால் #அழிந்து போவார்கள். நன்னெறி வழி சென்று முக்தி சித்தி அடைய வேண்டும் என்ற இலட்சியத்துடன் #நடப்போர் கலியுகத்தை வென்று சிறப்பார்கள்.

தற்சமயம் உலகில் நடந்து வருகின்ற #கிருமி தொற்றினால் உலகத்தில் மனிதர்கள் #ஏராளமானோர் மரணமடைந்தார். உலகமக்கள் #புலால் உண்பதினால் வந்த #பாவமல்லவா இது. உலகமக்களே ஆறுமுகன் யான் கூறுகிறேன் உங்களுக்கு, இயற்கை அளிக்கின்ற #பெரும்பாடம் இதுவாகும். இது முருகப்பெருமான் எனது வாக்காகும். இந்த உலகினிலே #அகத்தியர் முதல் வள்ளல் #பெருமான் வரை எம்மை பின் தொடர்ந்து வந்த #ஞானியர் கூட்டமெல்லாம் உங்களுக்கு பலவிதங்களில் நீங்கள் கடைத்தேற #முக்கியமாய் கடைப்பிடிக்க வேண்டிய #கொள்கையாய் புலால் மறுத்தலை வலியுறுத்தினர். ஞானிகளின் வார்த்தைகளை கேட்டு நடந்த யோக்கியவான்கள் எல்லாம் #ஞானம் பெற்றார். ஞானிகளின் வார்த்தைகளை #புறம் தள்ளி மதியாமல் நடந்து புலாலை புசித்தோரெல்லாம் #யோக ஞானத்தை இழந்தார். புலால் புசித்தவர் பாவத்திற்கு #ஆளாகி மரணமடைந்தார். புலால் மறுத்தவரெல்லாம் #நீடுவாழ்ந்தார் முக்தி பெற்றார். புலால் உண்பவர்களுக்கு #ஒருபோதும் ஞானம் இல்லை. புலாலை மறுத்தால் அவன் ஞானியாவான் முக்தி பெறுவான்.

#முக்தி பெறுவதற்கு முதற்படியே உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்தலாகும். #மதுவை மறுத்து சுத்தமான சன்மார்க்க வாழ்வினை வாழ்ந்திட்டால், அவர்களின் முன் #சுப்பிரமணியன் யாம் தோன்றி #காட்சி தருவோம். அவர்களுக்கு தகுதியை #உயர்த்தி வாசியையும் நடத்தித் தருவேன். அவர்களது #சுழிமுனையை திறந்து பலபல #ஜென்மங்களிலே செய்த பாவத்தினால் உண்டான கர்மவினைகளையும் போக்கிட துணையாய் நிற்பேன். அவர்களுக்கு என்னையும் காண்பிப்பேன். #எம்மை பின்தொடர்ந்து வந்த, #வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபினரையும் காண்பிப்பேன், ஈசனையும் காண்பிப்பேன் இதுதான் உண்மை.

உண்மையில் உலகத்தின் #சுகாதார அமைப்பானது (WHO) #சைவஉணவே சிறந்தது என்று ஒப்புக்கொண்டார்கள். ஆதலினாலே #உறுதியுடன் உலக மக்கள் புலாலை #மறுத்து விடுங்கள். அதற்கு ஏற்ற தக்க #தருணம் இதுவே. நீங்கள் புலால் மறுத்து சைவ உணவை மேற்கொண்டு ஞானிகள் எங்கள் நாமத்தை #அகமகிழ உருகிச் சொல்வீர்களேயானால் உங்களை கிருமிகள் தொற்றாது. கிருமி #தொற்றில்லாது நோய்களில்லாது அவர்கள் நீடு வாழ்வார்கள். இது முருகப்பெருமான் எனது சத்திய வாக்காகும்.

#தேசத்திற்கும் உங்கள் #ஆன்மாவிற்கும் எங்களது #நாமம் உரமாக அமையுமப்பா. எங்கள் நாமத்தை சொல்லிக்கொண்டு #புலாலை மறுத்து எங்கள் மீது பக்தியுடன் #வழிபாடு செய்து வருபவர்க்கெல்லாம் இயற்கையும் அவர்களுக்கு #தலைவணங்கும் இதுதான் எனது வாக்காகும். ஒருவன் புலாலை மறுத்துவிட்டால் அவனை உலக உயிர்கள் #அனைத்தும் வணங்குமப்பா. அவனை #மரணம் நெருங்காது. அவன் மரணத்தை வென்று சன்மார்க்க நெறி சென்று சித்தி நிலையை அடைவான். #சித்தி நிலை அடையவே உலகோரே உங்களை அழைக்கிறது #ஓங்காரக்குடில். ஓங்காரக்குடிலின் #பணிகளெல்லாம் அன்புடனும் அறனுடனும் இருக்குமப்பா. ஓங்காரக்குடிலை #நம்பிக்கையோடு நாடி வந்தால் உங்களுக்கு தடை ஒன்றும் இல்லையப்பா நீங்கள் ஞானமடைய. தவசிகளின் நெறிமுறையையும், தவத்தையும் #உரைப்பது இங்கேதானப்பா. இங்கிருந்து தான் #சித்தர் மார்க்கமும் #சன்மார்க்கமும் ஞானமார்க்கமும் எல்லாம் இவ்வுலகமெங்கும் பரவுதப்பா. இங்கிருந்து குடில் சார்ந்து #உலகெங்கும் சென்று #தொண்டு செய்பவர்க்கு மரணபயம் என்பதே இல்லையப்பா. இனிவரும் காலத்திலும் இது #தொடருமப்பா. தொடர்ந்து அறப்பணிகளில் #ஈடுபடும் தொண்டர்களே உங்களை எந்தக் கிருமிகளும் #தொற்றாதப்பா. இது சுப்பிரமணியர் எனது சத்திய வாக்காகும். ஆதலினாலே தொண்டர்களே நீங்கள் #எளியோரை நெருங்கி உணவளித்தாலும் உங்களுக்கு கிருமிகள் தொற்றாதப்பா.

உலகினில் கிருமிகள் #இனி வளராது இனி அழிந்து போகுமப்பா. உலக மக்களே கிருமியை #கொல்ல வேண்டுமாயின் ஞானிகளின் நாமங்களை சொல்வீர்களாக. #அகத்தீசா என்று சொல்லி பாருங்கள் #கிருமிகள் #நடுங்குமப்பா, #முருகா என்று சொல்லி பாருங்கள், கிருமிகள் நடுங்குமப்பா, #இராமலிங்க தேவாய நம என்று சொல்லி பாருங்கள் எந்த ஒரு கிருமியும் உங்களை #நெருங்காது. கவலைப்படாதீர்கள் தொண்டர்களே பயப்படாமல் ஏழைகளுக்கு #அன்னம் கொடுங்கள். அதுவே மகத்தான சேவையாகும். அரங்கனின் #குரல் அதுவே உலகத்தோருக்கு. உலகோர்க்கு தர்மத்தின் #மூலமாக சுப்பிரமணியர் யான் உரைக்கின்ற செய்தி தான் இது. இன்று மக்களிடையே பாகுபாடு காணாமல் தினம் #தினம் அன்னமிட வேண்டும் என்கிறேன் சுப்பிரமணியர் யான்.

உலகமக்களே உங்களுக்கு #என்றுமே பிணிகள் வாராமல் #கண்டங்கள் அண்டாமல் பாதுகாப்புடன் வாழ வேண்டுமாயின் என் பிள்ளை அரங்கரின் #வாக்கை ஏற்று #உலகெங்கும் #அன்னதானம் செய்கின்ற #தொண்டர்களுக்கு அருளையும் #பொருளையும் சேர்த்து தருகின்றோம். அகத்திய மகரிஷியும், திருமூலரும், காகபுஜண்டரும் இவர்களுடன் போகரும், புலத்தியரும் சிறப்புமிக்க வள்ளல்பெருமானும் #ஒன்றிணைந்து தொண்டர்கள் செய்கின்ற தர்மத்துடனும் அரங்கரின் தர்மபலத்துடனும் ஒன்றிணைந்து உலகைப் பற்றிய கிருமிகளை முற்றிலும் அழிப்பர். மக்களே

சண்முகா என்று சொல்லி பாருங்கள்.
அகத்தீசா என்று சொல்லி பாருங்கள்.
இராமலிங்க தேவா என்று சொல்லி பாருங்கள்.

ஞானிகளின் நாமத்தை செல்வோர்க்கு #தேவலோகம் திறக்கும் என்பதை உணர்வீர்கள். சொன்னோர் எல்லாம் தேவர்களாவர் தேவர்களில் #ஒருவர் ஆவர்.

#முருகா என்று எனது நாமத்தை சொன்னால் அவர்களுக்கு எந்த பாவமும் அண்டாது, #பாங்காக வாழ்ந்திடுவார் அவரெல்லாம், சிறப்புடன் வாழ்ந்திடுவார். #உலகமக்கள் நன்மையுடன் #வாழ்வதற்கே கலியுகத்தை #மாற்றுவதற்கு வந்ததுதான் இந்த கிருமி #யுத்தம் என்பதை அறிய வேண்டும். ஊழ்வினை அற்றவர்களாகிய எங்களது நாமத்தை சொல்வோரெல்லாம் ஒருபோதும் #உயிர்க்கொலை செய்யமாட்டார். எங்களது நாமங்களை சொல்ல சொல்ல சொல்லுகின்றவர்களின் #ஆன்மா சுத்தமாகும்.

#தற்சமயம் உலகில் பரவியுள்ள கிருமி தொற்றானது #மூன்று மாதங்களுக்குள் ஞானியர்கள் எங்களது அருளால் இவ்வுலகினில் அடங்கிவிடுமப்பா.
ஓங்காரக்குடிலில் நடக்கின்ற தர்மங்களுக்கு #பொருளுதவி செய்திட அவர்கள் ஞானியாவார்கள் ஞானம் பெற்று #நீடுவாழ்வார்கள். அவர்களது வாழ்வு முற்றிலும் மேன்மை அடையும், அவர்கள் முழுமை ஞானத்தை அடைந்திடுவார்கள்.

ஞானியர்களின் #வழியில் அவதரித்த மகா ஞானியே ஆறுமுக அரங்கமகா தேசிகர் ஞானத்திற்காக வாழ்க்கையை #அர்ப்பணித்தவர் அரங்கமகா தேசிகர். ஞானத்திற்காக உயிர் உடலை #தியாகம் செய்தவர் அரங்கமகா தேசிகர். ஞானத்திற்காக உப்பு புளி காரம் நீக்கி @அதிவீர #சைவ உணவு உண்ட நித்திய ஞானி அரங்கமகா தேசிகர். மக்களே தினம் தினம் அரங்கரின் நாமத்தையும் எங்களது நாமத்தையும் அடிக்கடி சொல்லி வரவேண்டும். காலை மாலை என தவறாது #மனமுருகி பூஜை செய்து வர, சிவபதத்தை அவர்கள் காண்பார்கள். #சிவபதத்தை காண்பது எளிதல்ல. சிவபதத்தை கண்டுவிட்டால் அவர்கள் #சிவத்தோடு ஒன்றிணைவார்கள். #சிவம் எங்கே இருக்கின்றது? அறிவீர் மக்களே, அது குருவின் #பதத்தில் இருக்கிறது. சிவத்தினை அடைய வேண்டுமாயின் உங்களுக்கு குரு அருள் கண்டிப்பாக வேண்டும். குரு அருள் மட்டுமே உங்களுக்கு சிவத்தை காண்பிக்கும். குரு அருள் இல்லாமல் சிவத்தை ஒருபோதும் காணமுடியாது.

அதைவிடுத்து குருவின் துணையில்லாமல் #தன்னிச்சையாக செயல்பட்டு சிவத்தை காண முற்பட்டால் #தோல்வி அடைவீர்கள். குரு இல்லாத வித்தை #குருட்டு வித்தையாகும். குருவழியை பின்பற்றி சென்றால் தான் உங்களது #தீவினை நீங்கும். குருவின் நாமத்தை சொன்னால்தான் உங்களை பற்றிய மரணம் உங்களை விட்டு நீங்கும். மக்களே மரணத்திலிருந்து விடுபடுவதற்கு #வழியுரைத்தேன் முருகப்பெருமான் யானும் இன்று கருணையோடு

நற்பவி ஓம் சண்முகாய நம என்று
நற்பவி ஓம் அகத்தீசாய நம என்று
நற்பவி ஓம் இராமலிங்காய நம என்று பாங்குடனும், பக்தியுடனும், பண்புடனும் சொல்லிபாருங்கள். இந்த மந்திரங்களை #நம என்று சொல்லிவிடுங்கள். சொன்னவர்களுக்கு #எமபயம் இல்லை. நாள் நாளும் அவர்கள் துணிச்சலுடன் வாழலாமே. நமவென்று சொல்லி எங்களை அழைத்ததால் #இமைப்பொழுதும் அவர்களை விட்டு நீங்காது ஞானிகள் நாங்கள் காத்து நிற்போமப்பா.

மக்களே உங்களுக்கொரு #நற்செய்தி ஞானிகள் எங்களது #காலம் துவங்கியாச்சு. இனி எங்கள் #ஆட்சியே இவ்வுலகினில் நடக்கும். யுகமாற்றத்தின் #ஞானபீடமாய் உலகினில் ஏற்படுத்திய எமது #ஆட்சி பெற்ற #ஏழாம்படைவீடு ஓங்காரக்குடிலில் இருந்து இனி #செய்திகள் எல்லாம் #உலகம் முழுவதும் சென்று இந்த உலகையே ஆட்சி செய்யுமப்பா. இனி ஒருபோதும் தடையோ #முடக்கமோ ஞானிகளின் ஆட்சியில் வரப்போவதில்லை. எங்களது ஆட்சிக்காலம் #சார்வரி ஆண்டு துவங்கிய தருணமதனிலே இவ்வுலகினில் #துவங்கியாச்சப்பா. இந்த சார்வரி ஆண்டு கடந்து வருகின்ற #பிலவ வருடம் தன்னிலே அரங்கனின் புகழ் உலகமெங்கும் #கொடிகட்டி பறக்குமப்பா. அந்த சமயத்திலே உலகினை ஓங்காரக்குடில்தான், முறையோடு #ஆட்சி செய்யுமப்பா. உலக மக்களே அஞ்சவேண்டாம் #துணிந்து நில்லுங்கள்.

உலகமக்களே நீங்கள் #உறுதியுடன் உயிர்க்கொலை தவிர்த்து, #புலால் மறுத்து, #சைவ உணவை உண்ணும்போது நீங்கள் ஞானிகள் எங்களின் அருள் #பாதுகாப்பை பெறுவீர்கள். உடலாலும் உள்ளத்தாலும் எங்களது அருள்பலத்தால் #ஆக்கம் காண்பீர்கள். ஆக்கமும் ஊக்கமும் அறிவும் அறமும் பெற்று #சிறப்படைவீர்கள். நீங்களெல்லாம் அரங்கனின் நாமத்தை சொல்லி #வாழ்ந்திடல் வேண்டும். சன்மார்க்கத்தில் தொடர்ந்து #நடந்து உங்களை பற்றி தொடரும் மரணத்தை வெல்லுங்கள். சன்மார்க்கத்தின் வழியில் இருந்து சற்றும் #அசைந்து விடாதீர்கள், ஞானிகள் எங்களது வழிக்கு வந்துவிடுங்கள்.

ஞானிகள் எங்களின் வழி #சிவத்தின் வழியாகும். சிவத்தின் வழி வந்திடவே உங்களை #அழைக்கின்றேன் முருகப்பெருமான் யானுமே. இனிவரும் காலமெல்லாம் எங்கள் கொள்கையே உலகை வெல்லும். ஞானிகள் எங்களது நாமத்தின் பலத்தால் எதனையும் #வெல்லலாம். ஆதலினாலே ஞானிகள் எங்களின் நாமம் சொல்லி #இனிமையுடன் வாழுங்கள். ஞானிகளின் எங்களின் நாமத்தை சொல்லி #ஞானம் பெற அழைக்கின்றேன் இன்றுதானே. வரவேண்டும் #வரவேண்டும் உலக மக்களே ஓங்காரக்குடிலிற்கு . ஊழ்போக்கி நலம்பெற வரவேண்டும் ஓங்காரக்குடிலிற்கு உலக மக்களே. உலக மக்களையும் உலகையும் அரங்கரையும் #வாழ்த்தி முருகப்பெருமான் இன்று வாக்குரைத்தேன், வாழ்த்துகின்றேன் #அறப்பணிகள் செய்கின்றோரை, வாழ்த்துகின்றேன் #ஓங்காரக்குடில் பணி செய்வோரை, வாழ்க வாழ்கவென்று உங்களை வாழ்த்தி அருளுகின்றேன் முருகப்பெருமான் யானுமே என அருளாசி கூறுகின்றார் #மகான் சுப்ரமணியர்.
-சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *