குருநாதர் தவத்திரு.ரெங்கராஜதேசிக சுவாமிகள் அவர்களின்
தவச்சிறப்புகள்

வருகிறார் அகத்தீசர்! உலக மக்களை காப்பதற்கு!
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
நாம் அனைவரும் அகத்தியர் குலம்
நமது இறைவன் அகத்தீசன்
நமது வேதம் திருக்குறள்

ஓங்காரக்குடிலாசான் & மகான் அகத்தியர்

“சிவயசிவ சிதம்பர இராமலிங்காய பரப்பிரம்மனே நம”

ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம்,
 "ஒங்காரக்குடில்", துறையூர் - 621 010, 04327-255684 . 

இந்த நூல் தெய்வீகமானது. இதை பாதுகாத்துக்கொள்வது நல்லது. 29.8.2004, ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி, புத்தூர் அகத்தியர் நாடி ஜோதிடர் A.A. தரணிபாலன் வாசித்து அளித்தது.

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க நிறுவனர் குருநாதர் தவத்திரு.ரெங்கராஜதேசிக சுவாமிகள் அவர்களின் தவச்சிறப்புகள் பற்றியும் வருகின்ற 19.9.2004 ஞாயிற்றுக்கிழமை அன்று ஓங்காரக்குடிலில் நடைபெறவுள்ள தீட்சைவிழாவில் கலந்துகொள்பவர்கள் அடையும் நன்மைகள் பற்றியும் 

மகான் அகத்தீசர் தம் சுவடிமூலம் அருளிய அருள்வாக்கு

மகான் அகத்தீசர் ஆசிகாண்டம்

ஞானத்தின் தலைவனே அரங்கா போற்றி 
ஞானத்தை வளர்த்துவரும் தேசிகாபோற்றி 
ஞானத்தின் சூட்சமமே குருவே போற்றி 
ஞானியே உன் திருவடிகள் போற்றி போற்றி 

போற்றியே அகத்தியனும் ஆசிதன்னை 
புகலவந்தேன் பௌர்ணமியில் அரங்காவுமக்கு 
அற்புதத்தின் சிகரமே அரசாவாழ்க 
அகிலத்தின் மாமனிதர் நீதானப்பா 

அப்பனே கோரக்கர் சொன்னதுபோல் 
அகிலத்தில் ஞானசித்தன் நீதான்மைந்தா 
இப்புவியில் வருகின்ற தீட்சைவிழாவும் 
இறைவனும் இரங்குகின்ற பெருவிழாவாகும் 

விழாவதுவும் அன்னதான விழாவாகும் 
வையகத்தில் அஞ்ஞானத்தை போக்கும்விழாவாகும் 
தாழ்வில்லா மாந்தரெல்லாம் திருப்பம்பெற்று 
தர்மம்உணர்ந்து தவமறியும் ஞானவிழாவாகும்

வருகின்ற 19.9.2004 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6 மணிமுதல் துறையூர் ஓங்காரக்குடிலில் குருநாதர் தவத்திரு. ரெங்கராஜதேசிக சுவாமிகள் அவர்களின் 28 ஆம் ஆண்டு தவநிறைவு விழாவும், தீட்சை விழாவும் நடைபெற இருக்கின்றது. 

தீட்சைவிழாவில் கலந்துகொள்பவர்கள் அடையும் நன்மைகள்:

இதுநாள் வரையிலும் ஒருசில ஆன்மீகவாதிகள் அறியமுடியாத ஆன்மீக உண்மைகளை அறிந்துகொள்வார்கள் மேலும் தவம் என்பது ஆசான் அகத்தீசரின் திருவடியை பூஜிப்பதே தவம் என்று அறிந்து பூஜித்து ஜென்மத்தை கடைதேற்றிக் கொள்வார்கள்.

உயிர்கொலை தவிர்த்தும், புலாலை மறுத்தும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும், தாய், தந்தை, மனைவி, மக்கள் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களுடன் அன்புடன் நடந்தும், விருந்தை உபசரித்தும், தினமும் காலை மாலை ஆசான் அகத்தீசர் திருவடியை " ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி " என்று பூஜித்து வருவதே ஜென்மத்தை கடைதேற்றும் என்பதை தீட்சைவிழாவில் கலந்துகொண்டு, ஆசிபெறும் அன்பர்கள் அறிந்துகொள்வார்கள்.

விழாவதுவும் சீவகாருண்யத்தை உணர்த்தும் விழா
வையக மாந்தரெல்லாம் சீவகாருண்யநூலும்
தாழ்வில்லா தீட்சையாக முறையே பெற்று
தரணியிலே பூசைசெய்ய ஞானம்கிட்டும்

ஒருவர் ஜென்மத்தை கடைதேற்றவேண்டுமென்றால் எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் படைக்கப்பட்ட ஜீவர்களிடம் அன்பு செலுத்துவதே இறைவழிபாடாகும் என்பதை அறிந்துகொள்வார்கள்.

எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய இராமலிங்கசுவாமிகள் அருளிய திருஅருட்பாவின் அமுத்கலசமான “ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் நூலே உலக ஆன்மீகவாதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அதுவே ஜென்மத்தை கடைதேற்ற ஒருவழிகாட்டி நூலுமாகும். அந்நூலை ஓங்காரக்குடிலாசான் தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகள் திருக்கரத்தால் பெறுவதே ஞானதீட்சையாகும் என்பது ஆசான் அகத்தீசரின் அருள்வாக்காகும்.

ஞானமோடு தொழில்விருத்தி குடும்பமகிழ்ச்சி
நன்முறையாய் கிட்டிடும்தான் குழவியோகம் (குழந்தை பாக்கியம்)
தனம்செல்வம் பெருக்கத்தோடு ருணமும் விலகும் (கடன்கமை தீரும்)
தாய்தந்தை துணைகளுக்கும் நல்வாழ்வுகிட்டும்

ஓங்காரக்குடிலாசான் தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகள் திருக்கரத்தால் பெறும் தெய்வீகமான ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நூலை தினமும் பூஜித்தும், படித்தும், பின்பற்றியும் வருகின்றவர்களுக்கு ஞானம் சித்திக்கும். குடும்பத்தில் முன்னேற்றமும், பண்புள்ள புத்திரபாக்கியமும் தோன்றும் . மேலும் மேற்கொள்ளும் தொழிலும் சிறப்பாக அமையும். இதுநாள்வரை இருந்த கடன்சுமை நீங்கி செல்வமும் பெருகும். விவசாயமும் நல்லபடி இருக்கும் . மேலும் தன்னைச்சார்ந்த தாய் தந்தை சகோதரர்களும் நன்மை அடைவார்கள்.

கிட்டிடும்தான் கல்விநல் சிறந்தறிவு
கலக்கம்விலகி கழனியேற்றம் ரோகம்விலகும்
(விவசாயத்தில் லாபமும், நோயும் நீங்கும்)
கட்டமெல்லாம் அறுந்தோடும் முனிவர்வாக்கு
(கவலைகள் எல்லாம் நீங்கும்)
கண்டிப்பாய் சித்தியோடு முக்திகிட்டும்

கல்வியில் தேர்ச்சியும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய சிறப்பறிவும் இதுநாள்வரை இருந்த மனக்கலக்கங்கள் நீங்கி, மேலும் தொடர்ந்து தன்னைப் பற்றியுள்ள நோயும் விலகும் மற்றும் இதுநாள்வரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் கதிர்கண்ட பனிபோல் நீங்கிவிடும்.

எனவே வருகின்ற 19.9.2004 அன்று ஓங்காரக்குடிலில் நடைபெறக்கூடிய தீட்சை விழாவில் கலந்து கொள்வதே ஆன்மீகவாதிகளுக்கு பெரும் வாய்ப்பாக அமையும். மேலும் ஆன்மீகத்துறையில் முன்னேற விரும்புகின்றவர்களுக்கு அறியாமை காரணமாக முன்செய்த பாவங்கள் நீங்கும் . ஞானத்தை அறியக்கூடிய சிறப்பறிவும் வீடுபேற்றையும் அடைவார்கள் என்பது ஆசான் அகத்தீசரின் உறுதிமிக்க வாக்காகும்.

முக்தியோடு அஞ்ஞானம் விலகியோடும்
மெய்ஞானம் கிட்டியே வான்கலப்பீர்
தேகத்தில் மாற்றங்களும் பீடைவிலகும்
தீட்சைநூல் உலகமாந்தர் பெற்றறிந்தால்
(ஜீவகாருண்ய ஒழுக்கநூலே – தீட்சை நூலாகும்) . 8

ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் அரிய நூலை ஞான தீட்சையாக ஒங்காரக்குடிலாசானிடம் பெற்று பூஜித்தும் வாசித்தும் வருகிறவர்களுக்கு மும்மலக் குற்றமாகிய காமதேகம் நீங்கி பிரணவ தேகமாகிய ஒளிஉடம்பைப் பெற்று மேலான ஞானவாழ்வை அடைவார்கள் என்பது ஆசான் அகத்தீசரின் வாக்கு.

அறிந்துவிட்டால் சீவனெல்லாம் மகிழுமப்பா
அகிலத்தில் மாற்றங்களும் நிகழும் திண்ணம்
சாற்றிய இவையாவும் தீட்சைவிழாவால்
சௌக்கியங்கள் உண்டுதான் ஆசிபாகம் அடுத்து முற்றே 9 .

– சுபம் –

ஓங்காரக்குடிலில் நடைபெறும் ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்க தீட்சை விழாவிற்குப் பின் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் என்பது ஆசான் அகத்தீசரின் வாக்காகும் . எனவே இவ்விழாவில் கலந்து கொண்டு பெரியோர்களும் தாய்மார்களும் ஆன்மீகவாதிகளும் ஆசான் அகத்தீசரின் அருளாசி பெற்று எல்லா வளமும் நலமும் பெற்று வாழ அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தீட்சைபெற விரும்புகின்றவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

N. நடராஜன் , (அகத்தியர் குலம்) கொள்கை பரப்பாளர்,
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
ஓங்காரக்குடில் , துறையூர் 621 010.04327 – 255784 .

ஆசான் அகத்தீசர் திருவருள் வேண்டி …
S. செந்தில்குமார், (அகத்தியர் குலம்) நிர்வாகி,

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர் 621 010.
04327 – 255584 . வாஞ்சி , துறையூர் . 04327 – 243638

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *