மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம்: 1102

முருகப்பெருமான் துணை
துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு

மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம்: 1102

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,

ஓம் சரவண ஜோதியே நமோ நம

05.10.2022, புதன்கிழமை

 1. ஆனந்த ஞான சொரூப அரங்கனே
  அழியாமை தருகின்ற ஞான தேசிகனே
  ஞான வழி உலக மக்களெல்லாம் வந்து
  ஞான லோகம் படைக்க தனித்துவம் தருகின்ற குருராஜனே
 1. அரசனே அரங்கனே உந்தனுக்கு சுப்ரமணியர் யானும்
  அருளுவேன் ஞான அறிவுரை ஆசி
  (சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 18 ம் நாள் 05.10.2022 புதன்கிழமை)
  வரமென உன்வழி மக்கள் கூட்டம்
  வணங்கிவர இந்த வையகத்தில்

 1. வையகத்தில் ஞானிகளாக ஆற்றல் பெறுவது உறுதி
  நம்பிக்கைக் கொண்டு உன் தர்ம வழிகளை
  வழிகளை ஏற்று வணங்கி வருபவர்க்கு
  வல்லமையாக வடிவேலன் என்னருள் கிட்டுவதும் உறுதி
 1. உறுதி தந்து ஞானிகளாக்க
  உன்வழி உலகோரை
  ஆறுமுகன் யான் தேர்வு செய்து வர
  ஓங்காரக்குடில் நோக்கி வருபவர்களெல்லாம்
 1. எல்லோருக்கும் ஞானியாகின்ற வாய்ப்பும்
  இலகுவாக அற்புதத்தின் மகிமையும் வரமும்
  வரமும் அரங்கன் உன்னாலே
  வையகத்தார் கண்டு சிறக்க நேரும்
 1. நேர்மைபட உன்வழி தொண்டாற்றும்
  நிர்வாக ஞான வழி வந்த மக்களெல்லாம்
  பெருமைகொண்ட ஞானவான்களாக மாறி
  பேரருள்பட இந்த கலியில் ஞானிகளாகி சிறக்க நேரும்
 1. ஆகவே அரங்கன் குடில்
  அகிலத்தார்க்கு ஞானம் தருவதோடு
  மிகைபட ஞானிகளாகவே மாற்றும்
  முருகப்பெருமான் என் ஞான சபையாகும்
 1. ஆகவே உலகோர் அனுகிவர
  ஆனந்தம் கூடி அழியாமையோடு
  ஞானிகளாக சிறந்து அரங்கன் வழி
  அற்புதத்தை உலகினில் நடத்த நேரும்
  ஞான அறிவுரை ஆசி முற்றே

-சுபம்-

Ongarakudil annadanam in chennai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *