உமாபதி சிவாச்சாரியார் அருளிய துல்லிய ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
மகான் உமாபதி சிவாச்சாரியார் அருளிய துல்லிய ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. , 
19.07.2021 , 
திங்கட்கிழமை

1. உண்மைவழி காட்டி மக்களுக்கு
உயர்ஞானம் அருளி இனிதே
நன்மை செய்ய உலகினில் வந்த
ஞானியே ஆறுமுக அரங்கனே

2. அரங்கனே துல்லிய ஆசிதனை
அருளுவேன் பிலவ நள்ளி திங்கள்
வரங்களென சூலதிகதி சோமவாரம்
(பிலவ வருடம் ஆடி மாதம் 3 ம் நாள் , 19.07.2021 திங்கட்கிழமை)
வழங்குவேன் உமாபதி சிவாச்சாரியார் யானும்

3. யானும் உலகநலமுற உரைப்பேன்
உலகமெங்கும் சன்மார்க்க வழி
ஞானமாகப் பரவி தழைக்க
ஞான பூமியாக உலகம் மாறும்

4. மாறுதலும் மக்களிடை ஆற்றலும்
மகான் அரங்க ஞானி தரும்
ஆறுதலும் தரும்பலத்தாலும் கிட்டி
ஆறுமுகனார் வழிபாடெனும் சக்தி

5. சக்திநிலை நிலைத்து நிற்க
சத்தியவான்களாகி கலியுகத்தார்
முக்தி தேடும் ஞானவான்களாகி
முருகப் பெருமான் அருளாசியால்

6. அருளாசியால் முழுமை அடைந்து
அரங்கனுன் வழி ஞானிகளாவர்
அருளாசியால் நல்ல தலைமை
ஆளுமைகளும் ஞானவழி சிறந்து

7. சிறந்து மக்களின் பாதுகாப்பு
சிறப்பான வகை கூடியே
பரந்த உலகம் எங்கிலும்
பாரபட்சம் பேதமிலாத வண்ணம்

8 வண்ணமுடன் சமத்துவ நிலை
வளர்ந்து முழுமை கொண்ட
எண்ணம் வழி தூய்மை கூடி
எங்கும் எல்லாம் சமம் என்றபடி

9. என்றபடி இயற்கை வளமிக்க
எதனாலும் அழிவு அண்டாதபடி
நன்றான ஞான ஆட்சி பெருகி
ஞானிகள் கலியுகத்திலும் உருவாகி

10. ஆகியே ஞானசித்தர் காலமாக
அரங்கன் அவதாரம் புரிந்து
அகிலம் ஆறுமுகனார் வழிவரும்
அமைதிநிறைந்த நல்லுலகமாகி

11. ஆகியே பெருமாற்றம் நிகழும்
அற்புதம் காண கலிவாழ் மக்களே
ஏகியே பிறவழி அலையாது
ஏழாம்படைவீடு நோக்கி வாரீர்
துல்லிய ஆசி முற்றே
-சுபம்மக்களின் பாதுகாப்பு சிறப்பான வகை கூடியே பரந்த உலகம் எங்கிலும் பாரபட்சம் பேதமிலாத வண்ணம் வண்ணமுடன் சமத்துவ நிலை
தொல்லை தரும் காமத்தை தொலைத்தே அருள்செய்த 
வள்ளல் முருகனை வாழ்த்தி வணங்குவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *