2014 PIRUGUMAHARISHI YOGA SUCHUMA ASI NOOL 21.02.2015

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!

மகான் பிருகு மகரிஷி யோக சூட்சும நூல்
சுவடி வாசித்தளித்தவர் ராஜேந்திரன், M.A., B.Ed.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எஸ் டோல்கேட், திருச்சி. செல் 99655 71837
21.02.2015, சனிக்கிழமை

கலியுக சித்தே அரங்கராசா
கலியுக அவதாரமே ஞானதேசிகா
அழிவிலா பெரும் ஞானம் தரும்
ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமியே

சுவாமியே சுவாமிநாதன் வல்லமை
சூட்சுமமாய் பிரணவக் குடிலில் கொண்ட
சுவாமியே ஏழாம் படை வீட்டின்
சூட்சும மகா சக்தியே தேசிகா

தேசிகனே உன் பெருமை கூறி
தெரிவிப்பேன் யோக சூட்சும நூலை
நேசமுடன் ஜெய சாலின் திங்கள்
நிலமதனில் நவதிகதி காரி வாரம்
(ஜெய வருடம் மாசி மாதம் 9ம் நாள் 21.02.2015, சனிக்கிழமை)

வாரமதில் பிருகு மகரிஷி யானும்
வழுத்திடுவேன் உலக நலம் கருதி
பாரதனில் அனைத்து தீவினைகளை
பாடிடுவேன் முழுமைபட அகற்றி

அகற்றி காக்கும் பொருட்டு
அவதாரம் கொண்ட அரங்கனை
வகைப்பட மக்களெல்லாம் கண்டு
வணங்கி தீட்சை எனும் காப்பு

காப்புதனை அடைந்து நன்கு
கட்டாயம் சைவ நெறிமுறையை
ஒப்பு கொண்டு ஏற்று நடக்க
உலகோர் காக்கப்படுவர் என்பேன்

என்கவே எல்லா திங்களிலும்
ஏழாம்படை வீட்டை முழுமதியில்
இன்பமுற கண்டு வணங்கிவர
இடர்கள் கண்டம் இல்லா வாழ்வு பெறுவர்

பெரும்பேறு அடைய எண்ணி
பொய்யான வழி செல்லும் மக்கள்
வரும் உலகில் நன்மை அடைய
வழிகாட்டும் பொருட்டே இயங்குகின்றோம்

இயங்கவே ஆசான் அரங்கனை
ஏற்பவர்க்கு இனி துன்பமில்லை
தயங்காது பூரண சரணாகதி
தவராஜரிடம் கொண்ட மக்களுக்கு

மக்களுக்கு மரணமில்லை இனி
மறுபிறப்பும் இல்லை இனி என்று
ஊக்கமுடன் சூட்சுமம் கூறி
உடன் அழைக்கின்றோம் மக்களே

மக்களே துறையூர் குடிலில்
மகாசூட்சுமம் மிகுதி உண்டு
ஆக்கமுடன் இன்றே கிளம்பி
ஆறுமுகன் ஏழாம்படை வீடு அடைவீர் யோக சூட்சும நூல் முற்றே.

-சுபம்

முருகப்பெருமான் துணை அகத்தீசனை வணங்கிட :

பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அந்த உயிர்கள் துன்பம் போக்க உதவி செய்வதுமே ஆன்மீகம் என்பதை அறியலாம்.

 வெல்ல முடியாத கலியுகத்தின் மாமாயை வென்று தவயோக ஞானம்தனிலே வெற்றி பெற்று கலியுக சித்தாய் கனிந்து நிற்கின்ற அருள்மிகு ஆறுமுக அரங்கமகா தேசிக தவயோக ஞானசித்தனே! கலியுகத்தினை முடித்து ஞானயுகம் அடைந்து மக்களை வழிநடத்திட வந்துதித்த முருகப்பெருமானின் அவதாரமே! அருள்மிகு ஆறுமுக அரங்கமகா தேசிகனே! மக்களுக்கு அழிவிலாமை எனும் மரணமிலாப் பெருவாழ்வை அளித்து பெருஞானம்தனை அளித்து காக்கின்ற மகா சக்தி வடிவான அருள்மிகு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமியே! சுவாமிநாதனாம் முருகப்பெருமானின் வல்லமைகளை அந்தரங்கத்தினிலே கொண்டு அதிசூட்சுமமாய் ஆறுமுகனார் அமைத்திட்ட ஏழாம்படை வீடாம் துறையூர் ஓங்காரக்குடிலதனிலே அனைத்து சக்திகளையும் சூட்சுமமாய் கொண்டுமே அமைத்திட்ட சுவாமியே அரங்கமகா தேசிக சுவாமியே! உலகை மாற்றிக் காக்கவல்ல ஒரே படைவீடாம் ஆறுபடைவீடுகளுக்கு மேலான ஏழாம்படை வீடாம் ஓங்காரக்குடிலதனின் சூட்சும மகாசக்தியே ஞான தேசிகனே! அருள்மிகு திருமுருக அவதார ஆறுமுக அரங்கமகா தேசிக சரவணஜோதி சொரூபமே ஞானயோகியே! அற்புதம் நிறைந்த உமது பெருமைகளை உலகறியக் கூறியே அரங்கா உமக்கு ஜெய வருடம் மாசி மாதம் 9ம் நாள் 21.02.2015, சனிக்கிழமையான இன்றைய தினமதனிலே யோக சூட்சும நூல்தனையே பிருகுமகரிஷி யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் பிருகுமகரிஷி.
  தீவினைகள் பெருகி கலியின் கோரப்பிடியினுள் அகப்பட்டு தட்டுத்தடுமாறி தருமம் தாழ்ந்து நிற்கின்ற இவ்வுலகினிலே எல்லா தீவினைகளையும் அகற்றி கலியுகத்தின் கோரப்பிடியிலிருந்து உலகை காத்து இரட்சித்து மக்களை நன்னெறி செலுத்தி காத்திடவே ஆறுமுகப் பெருமானாராம் முருகனே இவ்வுலக நன்மைகருதி அரங்கனாய் வடிவெடுத்து அவதாரமாகி நின்று ஓங்காரக்குடிலமைத்து அதை உலகிற்கு இன்றைய காலமதிலே முருகா, தாம் அமைத்த ஆறுபடை வீடுகளுக்கு மேலானதாய் அறுபடை வீடுகளின் சக்தியெல்லாம் ஒன்று கூட்டிட்ட ஏழாம் படைவீடாய் உலகோர்க்கு அறிவித்து ஆறுமுக அரங்கமகா தேசிக ஞானயோகியாய் நின்றருள் புரிந்து காத்து வருகின்றாய்.
  முருகனே அரங்கனாய் தோன்றி அருள்பாலிக்கின்றதனாலே உலக மக்களே திருமுருகனை, அரங்க முருகனை தவறாது அவர்தம் குடில் நாடிச் சென்று பயபக்தி விசுவாசத்துடன் வகைப்பட முறையாக பணிந்து போற்றி வணங்கி அரங்கரிடத்து காப்பு பெறுதலான தீட்சைகளை அடைந்து விடுதல் வேண்டுமப்பா.
  தீட்சை அடைந்த அவரவரும் கட்டாயம் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ நெறிமுறையினை ஏற்று வழுவாது சைவ உணவினை மேற்கொண்டு நடந்திடல் வேண்டுமப்பா. சைவநெறி நின்றால் தான் மக்களே நீங்களெல்லாம் திருமுருகனால், திருமுருக அரங்கமகா தேசிகனால் காக்கப்படுவீர்கள் என்பதை பிருகு மகரிஷி யானும் உறுதிபட கூறுகிறேன். சைவநெறியை கடைப்பிடிக்காவிட்டால் ஆசி பெறுதல் எளிதன்று.
  தீட்சை உபதேசம் பெற்றும், சைவநெறி நின்றும் அவர்களெல்லாம் ஞானியர்தம் ஆசிகளை முழுமையாக பெறுகின்ற வழியான அரங்கன் நடத்தும் ஞானியர் சிறப்பு வழிபாடுகளான பௌர்ணமி சிறப்பு பூசைகளிலே தவறாது மாதந்தோறும் ஏழாம்படைவீடாம் ஓங்காரக்குடிலினை அணுகி அரங்கனை வணங்கி ஆசிகளை பெற்றுவர, வருகின்றோர்க்கெல்லாம் அவரவர் வாழ்வினிலே உண்டான துன்பங்களும் தடைகளும் கண்டங்களும் விலகி கண்டமிலா வாழ்வு உண்டாகும்.
  ஞானம் பெற்று மரணமிலாப் பெருவாழ்வை அடைய வேண்டுமென்ற நல்நோக்கம் கொண்டுமே உலகினில் அலைந்து திரிந்து முன்னூழ் காரணத்தாலோ, அவரவர் செய்திட்ட பாவவினைகளின் உந்துதல்களாலோ, தவறான பல போலி குருமார்களிடத்து சிக்கி தவறான நெறிகளை பின்பற்றி வீணாகி போனவர்களும், தவறான பாதை நடந்து ஞானம் மறந்தோறும், தகுதியற்ற பயிற்சிகளை செய்து உடல் நலிந்து, மனம் சோர்ந்து, உயிரும் சோர்ந்து வீணாகிப் போனவர்களும், பலபல தீயமுயற்சிகளை, ஒவ்வாத யோகப்பயிற்சிகளை பயின்றோரும், பிறர் உங்களை ஏமாற்றி சொல்லிக் கொடுத்த தவறான பயிற்சி முறைகளை உண்மையென்று நம்பி பலகாலம் பயின்று எந்த ஒரு நற்பயனும் இல்லாது வாழ்வை வீணடித்து பொருளை இழந்து வாழ்விலே விரக்தியுற்று கடவுள் நம்பிக்கை கூட இல்லாமல் ஜீவதயவு இல்லாமல் எதை நம்புவது எதை விடுவது என்றே மனம் கலங்கி மனம் குழம்பி கண்டதையெல்லாம் சந்தேகமாக பார்த்து ஞானவழி செல்லாது புறம் சென்று வாழ்விலே விரக்தி அடைந்தோறும், பொய்ஞான வழி சென்று ஏமாந்தவர்களும், தீயநெறி புகட்டப்பட்டு ஏமாந்தவர்களும் கவலை வேண்டாம், நீங்களும் கடைத்தேறலாம். வருகின்ற காலங்களிலே தேறிவிடலாம். நீங்கள் இதுவரை நடந்து சென்ற பாதை தவறாயினும் திருந்தி கடைத்தேற மார்க்கமுண்டு. இத்தகையோரும் நன்மை அடைந்திடவே ஞானிகள் நாங்கள் மனமிரங்கி உங்கள் பால் கருணை கொண்டே ஏழாம்படை வீடென திருமுருக அரங்கன் குடிலதனை உலகோர்க்கு அறிவித்து காத்து இயக்குகின்றோம் ஞானிகள் நாங்களெல்லாம்.
  ஆதலின் மக்களே எத்தகையராயினும் சரி. இனியேனும் திருந்தி வாருங்கள். காலம் உள்ள போதே அரங்கனை பிடித்து கரையேறிக் கொள்ளுங்கள். கலங்கியது போதும் கவலை வேண்டாம். அரங்கனை குருவாய் ஏற்று பணிந்திட இனி துன்பம் ஏதுமில்லை அவர்களுக்கெல்லாம். தயங்க வேண்டாம் அரங்கனிடத்து விரைந்து வந்து அரங்கன் பொன்னார் திருவடிகளிலே சரணாகதி அடைந்திடுங்கள்.
  அருள்மிகு ஆறுமுக அரங்கமகா தேசிக ஞான யோகியரிடத்து சரணாகதி அடைந்திட்ட மக்களுக்கு பிறப்பு இறப்பு இல்லை. பிறப்பு இறப்பில்லா மரணமிலாப் பெருவாழ்வை அடையும் மார்க்கம் அவர்களுக்கு கிட்டும், கவலை வேண்டாம், கடைத்தேறி விடலாம், ஞானம் பெறலாம், ஞானம் பெற்று மரணமிலாப் பெருவாழ்வை அடையும் மார்க்கமும் செல்லலாம் என்றே ஊக்கமுடன் உங்களுக்கு உறுதிபட உரைக்கின்றேன் பிருகு மகரிஷி யானும்.
  உலக மக்களே உங்களை அழைக்கின்றேன் பிருகுமகரிஷி யானும். விரைந்து வாருங்கள் ஏழாம்படை வீடாம் துறையூர் ஓங்காரக்குடிலிற்கு.
  உலக மக்களே விரைந்து வாருங்கள் உங்கள் தீவினை அகல ஓங்காரக்குடிலிற்கு.

உலக மக்களே விரைந்து வாருங்கள் அரங்கன் திருவடிகளிலே சரணடைய.
உலக மக்களே விரைந்து வாருங்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள ஓங்காரக்குடிலிற்கு.
உலக மக்களே விரைந்து வாருங்கள் ஓங்காரக்குடிலிற்கு, உங்கள் பாவமெல்லாம் நீங்கி நன்மையான வாழ்வை பெற.
உலக மக்களே அரங்கனின் குடிலதனை சாதாரணமாக எண்ணி விடாதீர். யுகமாற்ற ஞானபீடமே துறையூர் ஓங்காரக்குடில்.
ஆறுமுகப் பெருமானாம் முருகப்பெருமானின் ஏழாம் படைவீடுதான் துறையூர் ஓங்காரக்குடில். திருமுருகனே அவதாரமாக அரங்கன் உரு கொண்டிட்ட திருத்தலமே துறையூர் ஓங்காரக்குடில்.
உலக மகா சக்திளெல்லாம் குடிகொண்ட ஞானாலயமே ஓங்காரக்குடில்.

  ஜீவதயவின் ஊற்றே துறையூர் ஓங்காரக்குடில்.

ஞானம் அளிக்கும் ஞானபண்டிதன் அமர்ந்த சபையே துறையூர் ஓங்காரக்குடில்.
ஞானிகள் கூடிய திருக்கூட்ட மரபின் திருச்சபை தான் துறையூர் ஓங்காரக்குடில்.

பாவத்தை பொடிப்பொடியாக்கி பாவிகளையும் புண்ணியவான்களாக்கி ஞானம் அளிக்கும் நல்சபையே துறையூர் ஓங்காரக்குடில்.

மரணத்தை வெல்லும் மார்க்கம் உரைக்கின்ற இவ்வுலகின் ஒரே சபை துறையூர் ஓங்காரக்குடில் மட்டுமே.

உண்மை ஞானம் உரைக்கவல்ல ஒரே இடம் துறையூர் ஓங்காரக்குடில் மட்டுமே.
உலகமாற்றம் நிகழ்த்தி கலியுகத்தை ஞானயுகமாக ஆக்கிட அமைத்த ஞானசபையே துறையூர் ஓங்காரக்குடில்.


துறையூர் ஓங்காரக்குடிலிற்கு வந்திட்டால் ஆங்கே இழப்பதற்கு ஒன்றுமில்லை பெறுவதற்கு உண்டு ஏராளம்! ஏராளம்!!
குடிலதனிலே ஞான, யோக, மகா சூட்சுமங்கள் அநேகம் அநேகம் உண்டு. அவரவரின் தொடர்பின் வலிமை பொறுத்து அந்தந்த சூட்சுமங்கள் தானே விளங்கி நிற்கின்ற திருமுருகனின் மகாயோக ஞான சபைதான் துறையூர் ஓங்காரக்குடில்.

  காலதாமதம் வேண்டாம், காலமில்லை, விரைந்து வாருங்கள் ஆறுமுகனாரின் ஏழாம்படைவீடாம் ஓங்காரக்குடிலிற்கு வந்து பெற்றுச் செல்லுங்கள். அளவிலாத அருளையும், வரங்களையும், இன்பமான வாழ்வையும், இகவாழ்வின் பயன்களோடு பரவாழ்வின் பயன்களையும் அதன் சூட்சும விளக்கமும் பெற்றுச் செல்லுங்கள், இகபர வாழ்வின் பயன்களையெல்லாம் என்றே உலகோருக்கு குடில் தன்மையுரைத்து விரைந்து வந்து பயன்பெற அழைப்பு விடுக்கிறார் மகான் பிருகு மகரிஷி தமது யோக சூட்சும நூல் மூலம்.

-சுபம்

முருகனை வணங்கிட :
பிறஉயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும் உதவி செய்கின்ற வாய்ப்பையும் பெறலாம்.
கோடியுகம் தவம் செய்த குகனைப் போற்றி
பாடிப் பணிவதே பண்பு.
ஆற்றலாம் முருகனின் அடியைப் போற்றவே
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *