மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 1116

முருகப்பெருமான் துணை

துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு
மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 1116

ஓம் சரவண ஜோதியே நமோ நம

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,

19.10.2022, புதன்கிழமை

 1. அருள் வடிவாக நின்று காத்தருளும்
  ஆறுமுக அரங்கமகா ஞானியே
  பொருள்பட இந்த பேருலகை
  பிரணவ சக்திகொண்டு மீட்டருள
 1. அருளவே அற்புதம் நடத்துகின்ற அரங்கனே
  உந்தனுக்கு சுப்ரமணியர் யானும்
  அருளுவேன் ஞான அறிவுரை ஆசி
  (சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 02 ம் நாள் 19.10.2022, புதன்கிழமை)
  வரமென அரங்கனை தொடர்ந்து
  வையகத்தில் புதுமைகளும் காண இருக்க

இருக்கவே கலியுகத்தில் ஞானியர் கூட்டம்
வல்லமைபட மகா சக்திகளாக உருவாகி
ஆகியே அகிலத்தில் ஞான ஆட்சிக்காலம்
ஆற்றல்பட அரங்கனால் நடக்கும்

 1. மக்களெல்லாம் மகிழவே தேவைகளுக்கு ஏற்ற வண்ணம்
  வளர்ச்சியும் யோகமும் தெய்வீக நிலைகளும் உயரக்கூடும்
  கூடவே அறம் திருப்பணிகளோடு
  குரு அரங்கனின் அன்னதானப் பணிகளை
 1. ஈடேற்றம் செய்து உலகோர் இணைந்து
  அரங்கன் வழி தொடர்ந்து வர
  இனிதே உலகமெங்கும் அரங்கன்ஞானமே ஆளுமையாகி
  ஆற்றல்பட ஞான ஆட்சி உருவாக நேரும் ஞான அறிவுரை ஆசி முற்றே

-சுபம்-

கடன் வாங்கி ஆடம்பர அலங்கார பொருள் வாங்குவது மொய் செய்வது கவுரவத்தை கௌரவம் கௌரவத்தை காப்பாற்றுவது பாவத்தின் சின்னம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *