06.05.2020 மகான் கஞ்சமலைச் சித்தர் தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மகான் கஞ்சமலைச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
06.05.2020, புதன்கிழமை

காத்தருளவந்த ஞான தேசிகா
கந்தனே சக்திவழங்கி துணை
இத்தரையில் அழியாமை விதைக்க
ஏழாம்படைவீடு படைத்து அருள

அருளவே அரங்கன் தவபலம்மெச்சி
அகிலமதில் சார்வரி தகர்திங்கள்
இருபான்சூல திகதி புந்திவாரம்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 23ம் நாள், 06.05.2020 புதன்கிழமை)
இயம்பிடுவேன் தவபிரசன்ன ஆசி

ஆசியை கஞ்சமலைச் சித்தர் யானும்
அருளுவேன் உலகோர் நலம்பெற
ஆசி தந்து மக்கனை #நோக்கி
அன்னதானம் வழங்கி காக்க

காக்கின்ற பிரணவக்குடிலின் அமுது
கலியுகத்தை தருமபலம் ஆக்கி
தேக்கமின்றி மக்களனைவருக்கும்
திருவருள் பலம் தந்தருளும்

அருளவே காப்பாய் இருக்கின்ற
அரங்க ஞானியின் ஆசியும்
அருள் தீட்சையும் பெற்றமக்கள்
அகிலத்தில் ஆபத்தின்றி மீள்வர்

மீள்வரே பேரிடர் வந்தாலும்
முன்வினை வந்து நின்றாலும்
மீள்வரே குருவருள் துணைவர
முதன்மை கடவுள் வழிபாடு தன்னை

தன்னிலே சோதி வடிவாக ஏற்று
தருமமுடன் தவமுறை செய்து
அண்ணல் அரங்கன் காட்டும்
அறநெறி பிறழாது வாழ

வாழவே வையகம் வளமுறும்
வறுமை இல்லா உலகமாகும்
காலனை வெல்லும் சக்திகூடி
கலியில் துன்பம் விரட்டும்

விரட்டும் ஞானிகள் தயவுபட
வினை சேரா மரணம் அண்டா
தரணியோர் அழியாமை பெற்று
தவசி அருளால் சிறப்பர்

சிறப்புதரும் சன்மார்க்க வழி
சிந்தை திடம் தெளிவு ஊட்டும்
அறம் மிக்க உயர் ஞானவழி
அரங்க ஞானியரின் தனி வழி

வழிகள் தனை உலக மக்கள்
வழிமொழிந்து வணங்கி வர
அழியாமை மிக்க ஞானயுகமாற்றம்
அரங்கன் வழி அகிலம் அடையும்
தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் கஞ்சமலைச் சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

     இவ்வுலகினை காத்து அருள் செய்து கடைத்தேற்றிட வந்துதித்த ஞானதேசிகனே உமது இந்த முயற்சிக்கு முருகப்பெருமானே முழுமையாக சக்திகளை வழங்கி உமக்கு துணையாய் செயல்பட்டு இந்த பூமியிலே மரணமில்லா பெருவாழ்வை விதைத்திட சர்வல்லமை பொருந்திய ஞானபீடமாய் ஏழாம் படைவீடாய் துறையூர் ஓங்காரக்குடிலை படைத்து அருள அத்தகு ஞானபீடத்தின் தலைமை ஞானியே யுகமாற்ற ஞானியே கலியுக வாழும் ஞானியே அரங்கமகானே உமது தவபலத்தை மெச்சி உலகமெலாம் உமது பெருமை கூறி சார்வரி வருடம் #சித்திரை மாதம் 23ம் நாள் புதன்கிழமையான இன்றைய தினமதனிலே தவபிரசன்ன ஆசி நூல் தனையே கஞ்சமலைச்சித்தர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் கஞ்சமலைச் சித்தர்.

உலகமக்களுக்கு அன்னதானம் வழங்கி காக்குகின்ற ஓங்காரக்குடிலில் ஞானிகளின் அருளாசிகளோடு சமைக்கப்படுகின்ற அமுதானது ஞானிகளின் அருட்பார்வைகளில் சமைக்கப்படுகின்ற அருளமுதாகும். அரங்கரின் அளவிலாத தர்மபலம் உலகெங்கும் பரவி மக்கள் அனைவருக்கும் திருவருள் பலத்தை தந்தருளும். உலகமக்களுக்கு அருள் பாதுகாப்பாய் இருக்கின்ற அரங்கமகானின் அருளாசியும் அருள் தீட்சை உபதேசத்தையும் பெற்ற மக்கள் உலகத்தில் ஆபத்துகளில் இருந்து மீண்டு மேன்மை அடைவார்கள். பேரிடர் வந்தாலும், அவர் முன் செய்த பாவங்கள் ஊழ் வினையாக வந்தாலும் அவர்களெல்லாம் அரங்கர் எனும் ஞானகுருவின் குருவருள் துணையினால் மீள்வார்கள்.

இந்த பிரபஞ்சத்தின் முதன்மை கடவுளாம் முழுமுதல் தெய்வமாம் முருகப்பெருமானின் வழிபாடுகளை சரவணஜோதி ஏற்றிவைத்து ஜோதி வழிபாடாக தினம் தினம் மறவாமல் செய்துவருவதுடன் தர்மங்களை செய்தும் ஜெபதபங்களை செய்தும் அண்ணல் அரங்கமகான் காட்டுகின்ற தூய அறநெறியை ஏற்று தவறாது பின்பற்றி வாழ்ந்துவர இந்த உலகம் வளம் பெறும் வருமை இல்லாத உலகமாக மாறிடும்.

காலனாகிய யமனை வெல்லும் சக்தி பெருகி கலியுகத் துன்பங்களை விரட்டும் குரு அரங்கனின் திருவருள் ஞானிகளின் தயவை பெற்றுத் தரும். அரங்கரின் குருவருளாலும் ஞானிகளின் தயவினாலும் உலகோர் மரணமில்லா பெருவாழ்வை பெற்று சிறப்படைவார்கள். சர்வசிறப்புகளையும் தந்தருளும் சன்மார்க்க நெறியானது திடசிந்தை உண்டாக்கும் அறிவில் தெளிவை உண்டாக்கும்.

தர்மமிக்க உயர்ஞான வழியே அரங்கமகாதேசிகரின் ஞான வழியாகும். அரங்கரின் வழிகளை ஏற்று கடைபிடித்து வர முருகப்பெருமானை வணங்கி வர அழிவிலாமை மிகுந்த ஞானயுகமாற்றம் அரங்கனின் மூலமாக இவ்வுலகம் அடைந்திடும் எனக் கூறுகிறார் மகான் கஞ்சமலைச் சித்தர் .

– சுபம் –

YouTube:

Ongarakudil olai suvadi
sri agathiar sanmarga sangam olaichuvadi

 
ongarakudil youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *