மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல்
பாகம் : 1139

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,

ஓம் சரவண ஜோதியே நமோ நம

11.11.2022, வெள்ளிக்கிழமை

 1. பிரம்ம ஞானியே அரங்கா வாழ்க
  பிரணவ சக்தி கொண்ட தேசிகா வாழ்க
  வரம்பல பெற்று என் சக்தியாக
  வையகத்தில் அற்புதம் நிகழ்த்தும் குருராஜனே வாழ்க
 1. வாழ்க என வாழ்த்தி ஆறுமுகன் யானும்
  வழங்குவேன் உந்தனுக்கு ஞான அறிவுரை ஆசி
  (சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 25 ம் நாள் 11.11.2022 வெள்ளிக்கிழமை)
  தாழ்விலா அரங்க ஞானி உன் நாமஜெபத்தை
  தரணியோர் தொடர்பூஜையாக செய்துவர
 1. வருகவே அவர்களுக்கெல்லாம் ஞானிகள் பலம்
  வரமாகக்கிட்டி இந்த கலியுகத்தில்
  கலியுகத்தில் அன்னவர்களும் உன் வழி
  கருணைமிக்க ஞானிகளாக ஆற்றல்பெறுவர்
 1. மாற்றம் செய்ய அவதாரம் எடுத்த அரங்கனே
  மகான் உன் நோக்கம் இவை பிறவி பூர்த்தியாகும்
  பூர்த்தியாகி உலகமே ஞானிகள் வழி
  புண்ணியம் நிறைந்த ஞான ஆட்சிக்காலமாக
 2. நேர்த்தியாய் மக்களெல்லாம் மாற்றம் கண்டு
  நிலவுலகில் அரங்கன் உன்னால் அற்புதம் நடத்துவர்
  நடத்தவே உன்னுள் யானிருந்து
  ஞானமும் தர்மமும் தயவுமாக இயங்கிட
 3. ஆற்றல்பட உன் தடம் தேடிவந்து
  அகிலத்தார் சரணாகதி கொண்டுவிட
  மாற்றம் சடுதி உலகம் காணும்
  மகான் உன்னால் ஞான ஆட்சி மலரும்

ஞான அறிவுரை ஆசி முற்றே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *