மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 660

 முருகப்பெருமான் துணை

இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கைப்பட எழுதிய நூலாகும்

இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும்

துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 660

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. ,

20.07.2021 , செவ்வாய்கிழமை

1 ஓங்கார தவசியே அரங்கா போற்றி 
ஓங்கார குடில்படைத்த தேசிகா போற்றி
ஓங்காரன் என் சக்தியாகவே இந்த உலகில்
ஓங்கார ஞானம் உலகோர்க்கு அருளும்
2 அருளுகின்ற அரங்கனே ஞானதேசிகனே 
ஆறுமுகன் யான் உந்தனுக்கு ஞான அறிவுரை
ஆசி அருளுவேன் பிலவ நள்ளி திங்கள் தன்னில்
அரங்கனின் தர்மமும் சன்மார்க்கக் கொள்கையும்
3. கொள்கையும் கலியுகத்தை மீட்கும் காக்கும் 
குறைகளான இடர்பாடுகள் அனைத்தையும் நீக்கி
ஆளுமையில் ஞானவழிகளை உருவாக்கி
அகிலமே ஞான ஆட்சிதனை உருவாக்கக்கூடும்
4. கூடவே அரங்கனின் சக்தியும் 
குறையில்லாத அரங்கன் தொண்டர்களின் சேவையும்
நிறைவான ஞான சமூகத்தை படைத்து
நிலவுலகை ஞான சித்தர் ஆட்சிக் காலமாக மாற்றும்

5. மாற்றத்தை பெற வந்தமகா தவசி
மக்களை காக்க வந்த மகா யோகி
ஆற்றல் மிக்க என் சக்தியான அரங்கன்
அகிலத்தில் என் அவதார மகா சூட்சுமமாகும்

6. சூட்சுமத்தை கண்டு தேறி சுத்த நெறி
ஏற்று வந்த மக்களெல்லாம் மாட்சிமைபட
இந்த கலியில் மரணத்தை வென்று
மகா ஞானிகளாக உருவெடுப்பர்

7 ஆகவே அரங்கன் சக்தியாகவும் அகிலத்தில்
ஆறுமுகன் என் ஆசிபட உலகோர் சிறந்து
யுகமாற்றம் என்கின்ற உயர்வான ஞானயுகத்தை
உலகோர் ஒன்றிணைந்து அரங்கன் வழிவழி வந்து ஞானிகளாகி

8 ஆகியே அற்புதங்கள் படைப்பர்
ஆக்கமான ஓங்காரக்குடிலின் சக்தி
தேக்கமின்றி உலகோர் அறிவுக்கும் உணர்வுக்கும் வர
தேசிகன் கொள்கையும் தர்மமும் உலகமெங்கும் பரவ

 9. பரவவே கலியுகம் பேராற்றல்பட
பரமானந்தசதாசிவ சற்குருவின் தயவாக
அறமெனும் சூட்சும ஆளுமைகள் பரவி
அகிலமே ஞான ஆட்சிதனை பெறக்கூடும்
ஞான அறிவுரை ஆசி முற்றே

-சுபம்

 

https://youtu.be/S0_9ujWWhQw

மாற்றத்தை பெற வந்தமகா தவசி

மக்களை காக்க வந்த மகா யோகி

ஆற்றல் மிக்க என் சக்தியான அரங்கன்

அகிலத்தில் என் அவதார மகா சூட்சுமமாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *