மகான் சுப்ரமணியர் அருளிய ஞான ஆசி நூல் பாகம் – 1

முருகப்பெருமான் துணை
மகான் சுப்ரமணியர் அருளிய ஞான ஆசி நூல் பாகம் – 1


சுவடிவாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed., திருச்சி
23.09.2019 திங்கட்கிழமை

அருட்குருவே அரங்கா போற்றி
அறம் காத்து வருகின்ற அரசா போற்றி
அருட்சுடராய் சரவணஜோதி ஏற்றி
அகிலத்தை காக்க அவதாரம் புரிந்த

புரிந்தநல் ஞானியே அரங்கா வாழ்க
புண்ணியம் பெருக்கும் தேசிகனே வாழ்க
அறிவுரை ஞான ஆசி விளக்கமாக
ஆறுமுகன் யான் அரங்கனுக்கு இதுகாலம் உரைப்பேன்

உரைக்கவே உன் தவபல சிறப்பே
உலக மாற்றம் செய்யக் கூடும்
குறைவில்லாத உன் தர்மமே இந்த
குவலயத்தை காக்கக் கூடும்

கூடவே சுப்ரமணியன் யான்
குறையில்லா ஞான சக்தியாய் இருக்க
நாடவே உன் தடத்தில் ஞானியர் கூட்டம்
நன்மை புரிந்து துனையாய் இருந்து வர

வருகவே உன் ஞானமும் தவமும்
வல்லமைபட உலகை வெல்லக்கூடும்
வருகவே உன் தர்மமும் தொண்டர்கள் பலமும்
இந்த வையகத்தை மாற்றம் செய்யக்கூடும்

கூடிநின்று சுப்ரமணியர் யானும்
குறையில்லா ஆற்றல் கூட்டி
அரங்கன் உனக்கு நாடியே சர்வபலம் தந்து உடன் இருக்க
ஞானவான் உன் சொல்லும் செயலும் அனைத்துமே

அனைத்தும் இந்த கலியுகத்தில் ஆக்கமாக
அளவில்லா பெரு ஞானமாக
இணையில்லா சர்வ சூட்சும சக்தியாக
இயங்கி இந்த கலியுகத்தை மாற்றுமப்பா

அப்பனே ஞானபண்டிதன் யான் உன்னுள்
ஆற்றல்மிக்க ஞானமாக நிரம்பி இருக்க
ஒப்புகொண்டு உன்னை வணங்கிவரும் உலகோர்
இந்த உலகில் கடைத்தேறுவர் ஞானியாவார்

ஞானிகளின் ஒட்டுமொத்த சக்தியாக
ஞான சூட்சுமமாக விளங்கும் அரங்கனே
ஞானமும் நீயே ஞானபண்டிதனும் நீயே
நாட்டிய ஞான அறிவுரை ஆசிவிளக்கம் முற்றே

  • சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *