18.07.2021 மகான் இராமானந்தர் அருளிய துல்லிய ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
மகான்

இராமானந்தர் அருளிய துல்லிய ஆசி நூல்

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. ,
18.07.2021 , ஞாயிற்றுக்கிழமை

1 இராமனாய் ராகவனாய் வேலனாய்
இரகசிய வரங்கள் பெற்றுவந்த
அரங்கனே கலியுக அவதாரமே
அண்ணலே உன் தயவால் பேருலகம்

2. பேருலகம் ஞானவழி மீளுமென
புகன்றியே இராமானந்தர் யானும்
பெருமைபட பிலவ நள்ளி திங்கள்
புகலுவேன் ஈரானதிகதி கதிர்வாரம்
(பிலவ வருடம் ஆடி மாதம் 2 ம் நாள் , 18.07.2021 ஞாயிற்றுக்கிழமை)

3. வாரமதில் துல்லிய ஆசிதனை
வழங்குவேன் உலக நலம்வேண்டி
பாரப்பா கலிமுற்றிய கொடுமை
பார்த்துமா மனம் பதறவில்லை

4.மனம் பதறா பாதகர்கள் செய்யும்
மகா பாவங்கள் பெருகியதாலே
சினம் கூடி இயற்கை சீற்றமும்
சிறுமைபட நச்சுக்கிருமி பேரிடரும்

5. இடராக கூடி கலிகரம்நீட்டி
எல்லா தேசங்களையும் வாட்டி
மடமையுற உயிர்பலி கூட்டிட
மண்ணுலகே மயானநிலையை கண்டிட

6 . கண்டுமா மனம் மாறவில்லை
கண்டுமா தயவு பிறக்கவில்லை
உண்டாக்கி உயிர் வதை செய்யும்
உணவு பழக்க வழக்கங்களை மாற்றி

7. மாற்றியே சுத்த சன்மார்க்கம் ஏற்று
மற்ற உயிர்களை தன்னுயிராய்
போற்றியே ஞான வழிக்கு வர
புண்ணியம் கூட்டும் தரும் வழிகளை

8. தருமவழிகளை கடமையாக ஏற்று
தவறாது அன்னதானம் செய்து
கருமவினைகளை வென்றுவர
கலியரசன் கொடுமைகள் விலகி

9. விலகியே மக்களை நோக்கி
விசாலமான நேசக்கரம் ஆக்கி
உலகம் எங்கிலும் பாதுகாப்பு
உண்மை நிறைந்த ஞான ஆட்சி

10. ஞான ஆட்சியாக மாறியே
நன்மைகள் பெருக ஏற்றம்கண்டு
ஞான பூமியாக உலகம் தேறி
ஞான தேசிகன் அவதார நோக்கமாக

11. ஆகவே ஞானசித்தர் ஆட்சி காலமாகி
அற்புதம்பட கலியுகம் ஞானயுகமாகும்
வகையான இவை மாற்றம் காண
வணங்கி வாரீர் அரங்கன் சபை நோக்கி
துல்லிய ஆசி முற்றே

-சுபம்-

4398 மகான் இராமனந்தர் துல்லிய ஆசி நூல் 18.07.2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *