மகான் குருராஜர் அருளிய அருளாசி நூல் 21-03-2022

முருகப்பெருமான் துணை
மகான் குருராஜர் அருளிய அருளாசி நூல்
ஓம் சரவண ஜோதியே நமோ நம

சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A., B.Ed.,
21.03.2022, திங்கட்கிழமை

 1. தவ பலமிக்க ஞான தேசிகா
  தரணியோர் வினை விரட்ட
  அவதாரம் புரிந்த அரங்கா
  அண்ணலே உன் பெருமை கூறி

2.கூறியே பிலவ சேல் திங்கள்
குறைவிலா சப்தமதிகதி சோமவாரம்
(பிலவ வருடம் பங்குனி மாதம் 07ம் நாள், 21.03.2022 திங்கட்கிழமை)
தெரிவிப்பேன் அருளாசி தன்னை
தேசிகனுக்கு குருராஜர் யானும்

 1. யானும் உலகநலம்பெற உரைப்பேன்
  உண்மை வழிகளை பின்பற்ற
  ஞானம் தானாக சித்திக்கும்
  ஞானிகள் தேடிவந்து அருளுவர்

4.அருள்தரும் ஞான வழியாக
அரங்க ஞானி சன்மார்க்கம்
இருள்போக்கும் சுடர் ஏற்றி
எல்லோருக்கும் சமமாக அருளிவர

 1. வருகவே நிலைமைகள் மாறும்
  வையகம் சம நிலை பெறும்
  முருகா என அரங்கன் திருவடி
  முழுமைதரும் என நம்பிவர
 2. வருகவே மனம் அமைதிபெறும்
  வருங்காலம் என்ன எனும் சூட்சும
  அருமைகள் தானாய் விளங்கும்
  ஆபத்தில்லா வாழ துணைவரும்
 3. வருமுலகில் சைவ நெறியும்
  வரலாறு போற்றும் ஞான நெறியாக
  பேருலகம் ஏற்றுத் தொடரும்
  புண்ணிய காலம் கனிந்து வர

8.வருகவே கலியுக மக்கள்
வழிதெரியா அலைய வேண்டாம்
முருகப்பெருமான் அம்சமாக
முழுமை பெற்ற அரங்க ஞானி

9.ஞானியரின் பிரணவக் குடில்
நம்பிவர சர்வ மாற்றமும்
ஞானிகள் அருளாசி தானும்
நாட்டிடுவேன் கிட்டி இனிதே

 1. இனிதே ஞானவானாக வாழ
  எல்லாத் தகுதியும் வரமும் கூடி
  கனிவேலவன் தரிசணமுடன்
  கலியினில் ஞானி ஆகும் வண்ணம்
 2. வண்ண முடன் நிலை உயர்ந்து
  வையகத்தையே நல்வழி மாற்றும்
  எண்ணம் திடம் செயல்பலன் கண்டு
  எல்லாத் தேற்றமும் பெறுவர்
  அருளாசி முற்றே
  -சுபம்-

1918மகான் குருராஜர் அருளிய அருளாசி நூல் 21-03-2022

https://youtu.be/FxkvuQeuhRs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *