14.07.2021 | மகான் அழுகண்ணிச்சித்தர் அருளிய துல்லிய ஆசி நூல்

முருகப்பெருமான் துணை

மகான் அழுகண்ணிச்சித்தர் அருளிய துல்லிய ஆசி நூல் சுவடி

வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,

14.07.2021, புதன்கிழமை

தருமனே கலியுக காப்பே
தவசியே ஆறுமுக சொரூபமே
மறுமை வெல்லும் தத்துவத்தை
மக்களுக்கு அருளும் அரங்கனே
2. அரங்கனே உலகமாற்றம் காண
அருளுவேன் பிலவ மிதுன திங்கள்
வரங்களென முப்பான்திகதி புந்திவாரம்
(பிலவ வருடம் ஆனி மாதம் 30ம் நாள், 14.07.2021 புதன்கிழமை)
வழங்குவேன் அழுகண்ணிச்சித்தர் யானும்
3. யானும் துல்லிய ஆசி தன்னை
உயர்வான ஞான சமூகம் படைக்க
ஞானபண்டிதனிடம் வரம்பெற்றுவந்த
ஞானதேசிகன் அருளாசிபெற

4.ஆசிபெற வாழ்க்கை மாறும்
அமைதி பாதுகாப்பு கூடும்
ஆசிபெற எண்ணம் தூய்மை பெறும்
ஆக்கமும் ஆனந்தவாழ்வும் தரும்

5. தருகவே அரங்கன் திருவடி 
தவசித்தி அருளும் மலரடி 
தருமபலம் உருவாக்கிக் கொண்டே 
தரணியோர் பணிந்து தீட்சைபெற 
6. தீட்சைபெற சகலதீட்டும் விலகும் 
திடமும் மனபலமும் தெளிவும் 
தீட்சைவிதியால் கிட்டுமென்பேன் 
தேசிகன் தரும் உபதேசம்
7. உபதேசம் ஓங்காரகன் சூட்சுமமாக
உலகோர்க்கு தரும் உபதேசம்
அபயமென உலகமக்கள் ஏற்று
அரங்கன்பால் சரணடைவு காண
8. காணவே மக்களில் பலரும் 
கந்தமகா சக்தி அடைந்து 
ஞானவழித் தொடருவதுடன் 
ஞானவான்களாகி கலியில்
9. கலியில் அரங்கன் நியமிக்கும்
கந்தப் பெருமான் ஆசிகொண்ட
அழியாமை பெற்று சிறப்பர்
ஆறுமுகன் கண்ட ஞானிகளாக
10. ஆகியே உலகமாற்றம் செய்து 
ஆறுமுகனார் தலைமை கொண்ட 
அகிலத்தில் ஞான ஆட்சி தந்து 
அரங்கன் வழி உலகோர் தேறுவர்
11. தேற்றம் தரும் மாதவசியே 
தெய்வபலம் தரும் யோகியே 
ஆற்றலான உன் தொண்டர்படை 
அகிலத்திற்கு மாற்றம் தரும் துல்லிய ஆசி முற்றே 

-சுபம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *