மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 779

முருகப்பெருமான் துணை

முருகப்பெருமான் தலைமையில் உலகம் அனைத்தும் ஞானியர்களின் ஆட்சிக்கு உட்படும்

இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக மனமுவந்து கைப்பட எழுதிய அருள்வாக்கு இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும்.

துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு
மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 779

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. , 
16.11.2021 , செவ்வாய்கிழமை

1. சூட்சும ராஜனே அரங்கனே 
சுத்தநெறி கொண்ட தேசிகனே 
மாட்சிமைபட இந்த உலகத்துக்கு ஞான ஆட்சி 
மக்களைக்கொண்டே தர மாதவம் புரிகின்ற குருராஜனே
2. அரசனே அரங்கனே உந்தனுக்கு சுப்ரமணியர் யானும் 
அருளுவேன் ஞான அறிவுரை ஆசி 
வரமென அரங்கன் உன் தர்மம் 
வளர்ந்து உலகத்தை காத்து வர
 1. வருகின்ற அரங்கன் சன்மார்க்கம்
  வையகத்தை நல்வழிக்கு மீட்டுவர
  அரங்கா முருகா எனும் ஜெபதபமே
  அகிலத்தை காக்கும் தாரக மந்திரமாகும்
4. ஆகவே அரங்கன் பேரில் உயர் தர்மம் 
அகிலத்தார் தொடர்ந்து செய்தால் போதும் 
வரமென எந்தன் அருள்பலம் கூடி 
வையகத்தில் யாவர்க்கும் அழியாமை உறுதியாகும்
5. ஆகவே அரங்கனின் உண்மை சீடர்களே 
அகிலத்தில் ஞானவான்களாக உருவெடுத்து 
மகிழவே இந்த மண்ணை காத்தும் 
மக்களுக்கு நல் வழிகாட்டியும்
6. வழிகாட்டி உயர் மக்கள் ஆவதோடு 
வல்லமைபட கலியுகத்தின் இடர்கள் அனைத்தையும் வென்று 
இல்லாமை என்கின்ற நிலைகளையெல்லாம் போக்கி 
இந்த உலகில் எல்லா வளமும் தந்தருளும் மகா சக்தியாக மாறி
 1. மாறியே பேரிடர்களையும் வென்று
  மக்களை வதைக்கின்ற கொடும் செயல்பாடுகளையும் களைந்து
  ஆக்கமுடன் உலகோர் ஞானவான்களாகி
  அரங்கன் வழி உலகை மாற்றும் மீட்கும் ஞானிகளாக மாறுவர்
8. மாறுதலை செய்து தீருவேன் என 
மாதவசி என்சக்தியாக இருக்க 
ஆறுதல் கொண்டு வரும் உலகோர்க்கு 
அரங்கனின் ஓங்காரக்குடில் ஞானசக்தி பீடமாக அருள்புரியும்


ஞான அறிவுரை ஆசி முற்றே

-சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *