lord subramaniyar murugar gnana upadessam to mahan arangar part 786

 முருகப்பெருமான் துணை
முருகப்பெருமான் தலைமையில் உலகம் அனைத்தும் ஞானியர்களின் ஆட்சிக்கு உட்படும் .

இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக மனமுவந்து கைப்பட எழுதிய அருள்வாக்கு இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும்.
துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு

மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 786

பாகம் : 786 | மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் | lord subramaniyar murugar gnana upadessam to mahan arangar part 786

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. ,
23.11.2021 , செவ்வாய்கிழமை

1. ஒங்கார பிரம்மமே அரங்கராசா
ஓங்காரக்குடில் படைத்த ஞானதேசிகா
ஓங்காரன் சுப்ரமணியர் யானும் உமக்கு
ஓதிடுவேன் ஞான அறிவுரை ஆசி

2. ஆசிதனை பிலவ தேள்திங்களில்
( பிலவ வருடம் கார்த்திகை மாதம் 07 ம் நாள் , 23.11.2021 செவ்வாய்கிழமை )
அரங்கன் நீ கேட்க அருளுவேன்
வாசிவென்ற ஞானியர் படைகள்
வலம்வந்து அரங்கனை காத்துவர

3. வருகின்ற அரங்கன் முழுமதி பூஜையெல்லாம்
வையகத்தில் மேலவர்கள் ஆசியால் நடந்தேறும்
தருகின்ற அரங்கன் தர்மமெல்லாம்
தவசியர்கள் தரும் அருளமுதாகும்

4. ஆகவே அரங்கன் தொடர்பு கூட்டி
அகிலத்தார் வருகின்ற காலமெல்லாம்
பெருமைபட ஆறுமுகன் என் அருளோடு
பேருலகில் பெரும் சக்திகள் சூட்சுமமாய் இறங்கி

5. இறங்கியே அற்புதங்கள் நடத்துவரப்பா
இதுகாலம் அரங்கன் சக்திவழி
வரமென ஆறுமுகன் யான் பலசூட்சுமம்
வையகத்தில் அதீதமாக நடத்தி வர

6. வருகின்ற அரங்கன் குடிலுக்கு
வல்லமையும் மேன்மையும் மிகுதி உண்டுஉண்டு
தருகின்ற அரங்கன் அருளமுதிற்கு
தகுதியும் மேல்கதியும் உண்டுஉண்டு

7. உண்டான இந்த அற்புதத்தில்
உயர்வாக அரங்கனோடு ஆறுமுகன் யான்
தயவாக இருந்து நடத்தி வர
தவசி அரங்கன் கொள்கையே

8. கொள்கையே இந்த உலகத்தை ஆளும்
தவசி அரங்கன் தர்மமே இந்த உலகத்தை வெல்லும்
தட்டாது அரங்கன் வழி வர
தரணியில் உலகமாற்றமாக சடுதி இனிதே நடந்தேறும்
ஞான அறிவுரை ஆசி முற்றே

-சுபம்
பாகம் : 786 | மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் | lord subramaniyar murugar gnana upadessam to mahan arangar part 786

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *