மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 659

முருகப்பெருமான் துணை 
இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கைப்பட எழுதிய நூலாகும் 
இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும் 
துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு 

மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 659

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. , 
19.07.2021 , திங்கட்கிழமை 

மாதவராஜனே அரங்கா போற்றி
மக்களை காக்க வந்த தேசிகா போற்றி
பூதலம் உன் அறம் தர்மத்தால்
புண்ணிய லோகமாகி காக்கப்படும் எனக் கூறி

2 கூறியே சுப்ரமணியர் யானும் இனிதே 
கூறிடுவேன் அரங்கனுக்கு ஞான அறிவுரை ஆசி 
தெரிவுசெய்து உலகமக்கள் இடை 
தெளிவு ஊட்டி ஞானிகளாக்கி இந்த உலகை 
3.உலகை ஞானயுகமாக மாற்ற வந்த 
உயர் ஞானியே எந்தன் அவதாரமே 
வளமான ஞான பூமியாக உலகம் 
வள்ளல் உன் கொள்கை வழி மாற்றம் காணும் 
4. காணவே கந்தவேலன் கருணைக்கொண்டு 
கலியுகத்தில் உந்தனோடு இணைந்து நிற்க 
ஞானவான்கள் உன்னால் உலகமெங்கும் ஞானிகளாக தேர்வுசெய்யப்பட்டு இனிதே 
இனிதே கலியுகத்தில் ஞான ஆட்சி இயம்பிடுவேன் அரங்கன் உன்னருளால் நடந்தேறும்

நடந்தேற ஞானசித்தர் ஆட்சிக்காலம்

நாட்டிடுவேன் கலியில் வந்து இனிதே

இடரில்லாத மக்கள் பாதுகாப்பு மிக்க

இயம்பிடுவேன் மேன்மையான யுகத்தின் மாற்றம்

6. மாற்றமதும் அரங்கன் நீயே செய்து முடிப்பாய் 
மகத்துவம்பட மக்களிடை சக்திபல ஊட்டி 
ஆற்றல்பட இந்த யுகத்தை மாற்றும் 
அழியாமை கொண்ட மாதவசி நீயேநீயே 
  1. அரங்கனே உந்தனுக்கு என் சக்தி ஊட்டி
    அனுதினமும் சூட்சும ஞானங்கள் அருளிவர
    வரங்கள் பெருகபெருக இந்த வையகம்
    உன்வழி வருவோர்க்கும் சக்தியாகக் கிட்டி பெருமாற்றம் காணும்
    ஞான அறிவுரை ஆசி முற்றே
  • சுபம்
https://www.youtube.com/watch?v=XBbZB5zUuJ8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *