மகான் திருநீலகண்ட நாயனார் அருளிய ஆசி நூல் (ஓலை சுவடி)

24.10.2012

ஓங்கார சோதியே அரங்கராசா
ஓங்கார குடில் வாழும் தவராசா
ஓங்காரனுன் புகழை பாடியே
ஓதிடுவேன் நந்தன துலை திங்கள்

திங்களிலே அட்டம திகதியதும்
(நந்தன வருடம் ஐப்பசி மாதம் 8 ம் நாள்)
திருநீலகண்ட நாயனார் யானும்
ஓங்காரனுக்கு நித்ய ஆசியுரைப்பேன்
ஓதிடுவேன் இவை நன்னாளில்

நாளதும் அரங்கரை நாடியே
ஞாலமதில் ஆவண ஜீவனம்
கோலமதாய் அட்சர அலுவல் தொண்டு
குவலயத்தில் புரியும் அடியவர்கள்

அடியவர்கள் ஆசானிடத்தில் தீட்சை
அறத் தொண்டில் உதவி ஏற்றிட
தேடி வரும் உயர்வு சிறப்பு
தொழில் கீர்த்தி தனவளம் காணும்

காணுமே போட்டி வஞ்சமில்லா
கலியுகத்தில் செல்வ வளங்களும்
பேணவே அரங்கன் துணைபட
பெருலாபம் வளம் கூடுமப்பா

அப்பனே அரங்கனே அகத்தியமாய்
அவதார மூர்த்தியாய் விளங்கி நிற்க
காப்பு கருதி குடில் வந்தவர்க்கு
கண்டமிடரில்லா ஆயுள் கூடும்

கூடுமே அருள் பொருள் வளம்
குழப்பமுடன் மனச்சலனமகன்று
நாடுமே தெளிவு திடம் வளம்
நன்மக்கள் சிறப்பு தொடர்பும் கண்டு

கண்டுமே முன்னேற்ற வழிகள்
கருணை வள்ளல் அரங்கனருளால்
தொண்டுவழி அணுகி உயர்த்தும்
தொய்வு கொள்ளா நிலை சிறக்கும்

சிறக்க வைக்கும் சிவராஜயோகியை
சிந்தை வைப்பார் அவரவர்க்கும்
மறக்கவிலா ஞாபக சக்தி கூடி
மனோ பலம் மதிநுட்பம் பெருகும்

பெருகுமே ஆற்றல் ஊக்கம்
பெருமைபட ஞானியை கண்டு
உருகியே குருவாய் அடைந்து
உபதேசம் ஏற்பவர் எல்லாம்

எல்லா வளமும் சௌக்யமும்
எல்லையில்லா பெரும் பக்குவமும்
அள்ளக்குறையா தரும சிந்தையும்
ஆன்ம பலமும் அடைவரப்பா

அப்பனே கந்தனே அறுமுகனே
அகத்தியனே அரங்கனே என அழைப்பவர்க்கு
ஒப்புடன் வந்து உடன் அருளும்
ஓங்காரமான ஞானி உலகில் நீயே அப்பா நித்ய ஆசி முற்றே.

-சுபம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *