தங்கு தடையிலாது அருளும் மகான் கொங்கண மகரிஷி அருளிய ஆசிநூல்

அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

நித்ய ஆசி நூல்
தங்கு தடையிலாது அருளும் மகான் கொங்கண மகரிஷி அருளிய ஆசிநூல்

சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A., B.Ed.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எஸ் டோல்கேட், திருச்சி. செல் : 99655 71837
10.07.2012

1.அவதார் ஞானியே அரசா போற்றி
அறங்காக்க வந்த தேசிகா போற்றி
புவனமதில் நந்தன மிதுன திங்கள்
புகலுவேன் இருபானாற் திகதியதும்
(நந்தன வருடம் ஆனி மாதம் 26ம் நாள்)

2.திகதியதும் நித்ய ஆசிதனை
தெரிவிப்பேன் கொங்கணன் யானும்
வகைபட அறப்பெருமை
வல்லமை கூட்டி பிரணவகுடிலை (ஓங்காரக்குடிலை)

3.குடிலை அன்பர்கள் குறை போக்கும்
குகை தவ பாசறை ஆக்கி
தேடிவரும் அடியவரை தெளிவுபடுத்தி
தீட்சை அருளும் அரங்கஞானியே

ஞானியே உம் புகழைப்பாட
நாளொன்றும் போதாதப்பா
ஞானியே எங்கள் வழி நடக்கும்
ஞானதேசிகனே உன் அடிபணிந்து

5.பணிந்து பணிவுடன் சேவை
பாருலகில் தொண்டு செய்துவர
துணிவுபட வருமுலகில் யாவர்க்கும்
தொண்டு தேட்டில் வளம் சேரும்

6.சேரவே செல்வ வளமுடன்
செப்பிடுவேன் யோகபலன்கள்
கூறவே ஆசானுன் அருளால்
குவலயத்தில் உலகமக்கள் அடைவரப்பா

7.அப்பனே அடையோகம் கண்ட
ஆசானே உன் வழி நடப்பார்
காப்பான ஞான வாழ்வை
கலியுகத்தில் அடைவர் சத்தியம்

8.சத்திய ஞான சபை உன் சபை
சபை நிரம்ப கலந்து ஆசிபெற
உத்தம் குணம் உயர்நிலை அடைவர்
உலகத்தில் ஞானிகள் மெச்ச

9.மெச்சவே ஞானவான் ஆகும் நிலை
மேலான உன் அடியவர்கட்கே
அச்சமற கிட்டும் பூரண ஆசி
அகிலமதில் அனுதினம் நாமசெபம்

10.செபம் போற்றி சித்தர் ஆசி
செப்பிடுவேன் ஏகவேளையேனும்
அபயமற ஏற்கும் அடியவர்கள்
ஆசானருளால் நிலைஉயர்வர் புகழ்பெறுவர்
நித்ய ஆசி முற்றே.
-சுபம்-

https://www.youtube.com/watch?v=o4dCH589AmE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *