ஞானத்திருவடி நூலிற்கு
பிறவிக்கடல் கடந்த மகான் கருவூரார் அருளிய ஆசிநூல்

ஞானத்திருவடி நூலிற்கு
பிறவிக்கடல் கடந்த மகான் கருவூரார் அருளிய ஆசிநூல்

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் M.A. , B.Ed. ,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம் ,
டி.வி.எஸ் டோல்கேட் , திருச்சி . செல் : 99655 71837

1 . அருமருந்தாகி நின்று பசி பிணியை
அறுத்தெறியும் வல்லமை கொண்ட அரங்கராசா
கருவூரான் யானும் உன் கருணைபடவரும்
கடைத்தேற்றும் நூலாம் ஞானத்திருவடிக்கு
(ஜென்மத்தை கடைத்தேற்றும்

 1. ஞானத்திருவடிக்கு நந்தன நள்ளி திங்களாசியை
  (நந்தன வருடம் ஆடி மாதம்)
  நாட்டிடுவேன் உலகமக்கள் நன்மை கருதி
  ஞானத்தை தாங்கி வரும் நூலிதனை
  ஞானிகளை வணங்கி மனதில் எண்ணி
 2. எண்ணியே நூல் பெற்று நன்கு
  ஈதூழில் (இந்த ஜென்மத்தில்) மக்கள் அனுதினமும் வாசிக்க
  எண்ணிய எண்ணம் வெற்றியாகும்
  இல்லமதில் திருகடாட்சம் ஓங்கும்
  (ஞானத்திருவடி நூல் இருக்கும் இல்லங்களில் ஞானத்தலைவன் மகான் ஞானபண்டிதராகிய சுப்ரமணியர் ஆசி பெறுவார்கள் என்பது ஆசான் கருவூரார் வாக்காகும்.
 3. ஓங்குமே குருகடாட்சம் அருள் பலமும்
  உயர்ஞானம் சித்திக்கும் அவரவர்க்கும்
  இங்கணமே அவரவர் வினை அகல
  இல்லம் நோக்கி ஆசானே அனுப்பும் கருவிஇது
  (ஞானத்திருவடி நூலானது ஆசான் சுப்ரமணியரால் அனுப்பப்பட்ட வினையகற்றும் கருவியாகும் . ஞானத்திருவடி படிப்பவர்கள் இல்லங்களில் அவர்கள் பாவத்தை அகற்றி வைக்கும் கருவியாகும்.)
 4. ஏதுவான பிரம்மவேளை எழுந்து
  இல்லம் பூசையில் நூல் பத்தியை
  ஆதரவாய் உத்திர திசை நோக்கி
  அமர்ந்துமே ஆசானை எண்ணி வாசிக்க
 5. வாசிக்க வாசிக்க ஆசானவரின்
  வார்த்தைகள் ஞான உபதேசங்கள்
  பூஜிக்க பூஜிக்க கிட்டும் பலனை
  பூவுலகில் சேர்க்குமே உலக மக்களுக்கு
  (அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு பூஜை அறையில் அல்லது தூய்மையான இடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து ஞானத்திருவடி நூலை தலைவன் மகான் முருகப்பெருமான் திருவடிகளாக எண்ணி தொட்டு வணங்கி பயபக்தியோடு படிக்க வேண்டும் . அப்படி பக்தியோடு படித்தால் நூலில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் அனைத்தும் உணர்த்தப்பட்டு அவை தலைவன் ஞானபண்டிதனாகிய முருகப்பெருமானால் சொல்லப்படும் உபதேச வார்த்தைகளாக மாறிவிடும். அதனால் ஒருவன் தலைவன் முருகப்பெருமானை இடையறாது பூசித்த பலனை இந்நூலை பக்தியுடன் படிப்பதனாலேயே பெறலாம் என்பது மகான் கருவூர்தேவர் வாக்காகும்.)
 6. உலகமக்கள் வகையறியா வழி செல்லா
  உத்தமனாய் நல் குரு அடைந்து
  கலகம் துன்பம் இடர் வாரா
  கனிவுபட ஞானிகள் துணைபட
 7. துணைபட மேலான வாழ்வை
  தெரிவிப்பேன் உலக மக்களடைவர்
  (உலகோர் ஞானத்திருவடி நூலை பக்தியுடன் படித்தால் அவர்கள் உண்மைப் பொருளறியாத ஆன்மீக பாதைகளுக்கும், உண்மை பொருளறியாத குருமார்களை அணுகாமலும் உண்மை பொருளறிந்த சற்குருவை அடைந்து அவர்களது துணையினாலும் ஞானிகள் துணையினாலும் மேலான ஆன்மீக வாழ்வை அடைவர் என்பது மகான் கருவூர் தேவர் வாக்காகும்.
  இணை எவருமில்லா சற்குரு
  எண்ணம் செயல் வெளிப்படுத்தும்
 8. வெளிப்படுத்தும் நன்னூலான
  வெற்றி நூலாம் ஞானத்திருவடியை
  தெளிவு வேண்டி தொட்டு வாசிப்பவர்
  திடமடைவர் பக்குவ குணமடைவர்
 9. அடையோகம் கண்ட மகாயோகி
  ஆசான் அரங்கர் ஆசி நூலை
  தடையேதுமிலா தொடர்ந்து வாசிக்க
  தவயோகம் செய்த பலனடைவர்
 10. அடையாளம் காட்டும் நற்குருவை
  அறத்தின் பயனை வெளிப்படுத்தும்
  சோடை போகா சூட்சுமத்தை
  சுமந்து வரும் ஞானத்திருவடியை
 11. ஞானத்திருவடியை கைப்பற்றி உலகோர்
  ஞானியவர்கள் பதம் பணிந்திட
  வானவர்கள் கூட மெச்சும் நிலை
  வையத்தில் அடைவர் சத்தியமே
  (எந்தவிதத்திலும் வீண்போகாத சூட்சுமங்களை அதாவது ஞானத்திருவடி நூலில் சொல்லப்பட்ட ஞானஇரகசியங்களின் தெளிவானது, எந்த காலத்தும் எவ்விதத்திலும் வீண் போகாது. அது இந்த ஜென்மம் மட்டுமல்ல பல ஜென்மங்களுக்கு ஆன்மாவில் தங்கி தொடர்ந்து வரும். அதனால் ஒருமுறை அதை கற்றாலும் போதும், அது வீண் போகாது . அப்பேர்ப்பட்ட கருத்துக்களை அடக்கிய ஞானத்திருவடி நூலை உலகோர் வாங்கி ஞானம் அறிந்து ஞானத்தலைவனாம் முருகப்பெருமான் திருவடியையும் குருமுனியாகிய அகத்தீசர் திருவடியையும் நவகோடி சித்தரிஷி கணங்களையும் அவர்தம் திருவடிக்கு பணிந்துவிட்டால் வானவர்களாகிய தேவர்கள் கூட வியக்குமளவிற்கான உயர்வான வாழ்வை அவர்கள் இப்பூவுலகிலேயே பெறுவார்கள் என்பது மகான் கருவூர்தேவர் வாக்காகும் . இதை அவர் “சத்தியம்” என சத்தியமிட்டு கூறுகிறார்.)
 12. சத்தியமே சுத்த சன்மார்க்கம்
  சமதர்மம் சமத்துவமும் கொண்ட
  தத்துவம் விளக்கி நடந்து காட்டி
  தரணியிலே வலம் வரும் ஆசானை
 13. ஆசானை அவரவர் அகத்துக்கு
  அழைத்துச் செல்லும் ஞானநூலிது
  நேசமுடன் வணங்கி வாசிப்பவர்
  ஞானத்தின் பூரணம் உணர்வரப்பா
 14. அப்பனே பிம்பத்தின் வடிவிலே
  ஆசானை உலகுக்கு காட்டி
  காப்பான செய்தி வழிகளும்
  கருணை ஏடாய் வரும் நன்னூல்இது
 15. நூலிதனை தொடும் போதெல்லாம்
  நூற்றி எட்டு மேலான ஞானிகளும்
  மொழிகுவர் ஆசிதனை கருணைபட
  முழங்குவர் ஞானவான் ஆவீரென
  (ஞானத்திருவடி நூலை தொடும்போதே நவகோடி சித்தரிஷிகணங்களும் நூலை தொடுபவர் மீது ஆசி வழங்குவார்கள். அவர்கள் அந்நூலை பக்தியுடன் தொடுபவரை நோக்கி ” ஞானவான் ஆவீர் ” என்று மனம்மகிழ ஆசி கூறுவர்.)

17 . ஞானவான் ஆக்கும் நன்னூலை
ஞானியர்கள் அருளும் செந்நூலை
தானாக வந்து ஏற்றுப் பதிவு
தவகுடிலில் ஆசானை வணங்கி பின்

 1. வணங்கிபின் ஏற்று செல்பவர்க்கு
  வாராது அல்லல் பிணி கண்டம்
  வணங்கி பின் வாசிப்பவர்க்கு
  வணங்கி செல்லும் நவகோள் இடர்கூட
 2. கூடாத மன மாச்சர்யம்
  கூட்டாளி வஞ்சனை பகையும்
  நாடாது விரட்டும் ஞானநூல்
  நம்பகம் கொண்டு வணங்கி பெற்று
 3. வணங்கி பெற்று வாசிப்பவர்க்கும்
  வாசிக்க வாசிக்க கேட்பவர்க்கும்
  இணக்கமாகி நல் மித்திரர் நிலை
  இணைந்து கேட்கும் குடியவர்கட்கும்
 4. குடியவர்கட்கும் நட்பு ஓர்மை மிகுபட
  குடிலன்பர்களாய் நிறைந்து வாழ்வில்
  தேடிவரும் ஞானசித்தி உங்களுக்கு
  தெய்வநூல் இது அறிந்து ஏற்பீர்
 5. அறிந்தேற்று ஆசானை வணங்கி
  அனுதினம் செபதப சிறப்பு
  தெரிந்து பின்பற்ற வாழ்வில்
  தொடருவீர் அரங்கராசர் வழி ஆசிநூல் முற்றே .
  -சுபம்

துறையூர் ஓங்காரக்குடிலிற்கு வருகை தந்து குடிலாசான் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளிடம் ஆசி பெற்று ஞானத்திருவடி நூலிற்கு சந்தாதாரராக பதிவு செய்பவர்களின் வாழ்வில் நோயும் , துன்பங்களும் , இடையூறுகளும் வராது .

ஆசானை வணங்கி ஞானத்திருவடி நூல் பெற்று அதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு நவகோள்களால் வரும் இடர்கள் நீங்கும் , பொறாமை , வஞ்சனை , சூழ்ச்சி ஆகியவை அணுகாது விலகிவிடும்.

பெருமை வாய்ந்த இந்நூலை பக்தியுடன் வாசித்தால் அதை வாசிப்பவரும் அதை காதால் கேட்பவரும் இணக்கமான நட்பாகி விடுவார்கள். குடும்பத்தினர் நூல் படிக்க கேட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் உள்ள துன்பங்கள் நீங்கும், அனைவருக்கும் ஞானசித்தி உண்டாகும் . அத்தகைய பெருமை வாய்ந்த நூலை உணர்ந்து ஏற்று படிக்கவும், கேட்கவும் செய்ய வேண்டுமென்று மகான் கருவூர்தேவர் உலக மக்களை அழைத்து கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *