மகான் காலாங்கிநாதர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல் | 23.05.2020 | mahan Kalangi Nathar Sidhar Jeevanadhi palm leaf news

முருகப்பெருமான் துணை

மகான் காலாங்கிநாதர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல் சுவடி

வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
23.05.2020, சனிக்கிழமை

பார் போற்ற வந்த ஞானியே
பரோபகார சக்தி பெருக்கமருளி
பாருலகை தரும வழி நடத்த
பரமானந்த குருவாய் வந்த அரங்கனே

அரங்கனே உன் தவபலம் மெச்சி
அருளுவேன் தவபிரசன்ன ஆசி
வரங்களென சார்வரி விடைதிங்கள்
வல்லமைபட தச திகதி காரி வாரம்
(சார்வரி வருடம் வைகாசி மாதம் 10ம் நாள், 23.05.2020 சனிக்கிழமை)

வாரமதில் காலாங்கிநாதர் யானும்
வழங்குவேன் உலகோர் நலம்பெற
தரமான சமூகச் சூழலையும்
தருமவான்களையும் உருவாக்கும் வண்ணம்வண்ணமுடன் அரங்க ஞானி
வள்ளல் நெறியை பரப்பி
எண்ணம் தூய்மைப்படும்படியும்
எண்ணியதை மக்கள் அடையும்படியும்

அடையும்படியும் ஞானமருளி
அருளாசி தந்து வழிநடத்தும்
நடைமுறையில் உள்ள சன்மார்க்க
ஞான வழிகளை மக்கள் தொடர

தொடரவே எல்லா திக்கிலும்
தெய்வபலம் ஆற்றலாக வந்து
பேரிடரை வென்று உலகமக்களை
பிரச்சினை இல்லா காத்தருளும்

அருள்மிக்க மாதவசியான தேசிகன்
அறம்வழி தொண்டு கூட்டி
அருள்பெற்று உலகமக்கள் வர
அனைவருக்கும் நலன்கள் கூடும்

கூடவே கலிகால மக்களின்
குறைகள் யாவும் விலகியே
ஈடேறும் உயர்குணம் திடமும்
எல்லா ஞானமும் வந்தடையும்

அடையவே மக்களிடை தேற்றமும்
அளவிலா அழியாமை ஞானமுமாக
தடையற கிட்டி சிறப்பு தரும்
தவசி அரங்கமகானிடம் தீட்சை

தீட்சை பெற்று செபதபங்கள்
தொடருகின்ற மக்கள் வாழ்வில்
மாட்சிமைபட ஞான ஆளுமையாக
மக்களில் சிறந்த தலைமை உருவாகி

ஆகியே ஞான ஆட்சி காலமாக
அரங்கனால் மாற்றம் காணும்
அகிலத்தார் பிரணவக்குடிலை அனுகி
அருள் பெற சரணடைவுபெற சடுதி மாற்றம் காணும்
தவபிரசன்ன ஆசி முற்றே

-சுபம்-

முருகப்பெருமான் துணை
மகான் காலாங்கிநாதர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

இந்த உலகமே போற்றி புகழும்படி மகா அவதாரமாக வந்திட்ட மகா ஞானியே உலகின் பரோபகார சக்தி பெருகிடவே இவ்வுலகினை தர்மவழியினில் நடத்தி காத்திட பரமானந்த சற்குருவாய் வந்து உதித்த அரங்க மகானே உமது தவபலத்தினை மெச்சி தவபிரசன்ன ஆசி நூல்தனையே சார்வரி வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் 23.05.2020 சனிக்கிழமையான இன்றைய தினமதனிலே காலாங்கிநாதர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் காலாங்கிநாதர்.

இவ்வுலகினில் தரம் மிக்க சமூக சூழ்நிலையும் தர்மங்களையும் பேரளவில் உருவாக்கிட வேண்டி உலகமெங்கும் வள்ளல் பெருமானின் ஜீவகாருண்ய நெறியை கலியுக ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகர் பரப்பிவருகின்றார். மக்களின் எண்ணங்கள் தூய்மையை அடையவும் மக்கள் எண்ணியதை அடையவும் அவர்களுக்கு ஞானத்தினை அருளி அருளாசிகளை தந்து குருவாய் நின்று வழிநடத்தி காக்கின்ற ஆறுமுக அரங்கமகா தேசிகரின் சன்மார்க்க ஞான வழிகளை மக்களெல்லாம் ஏற்றுத் தொடர உலகின் அனைத்து திசைகளிலும் தெய்வ பலத்தின் ஆற்றல் பெருகி உலகின் பேரிடரை வென்று உலக மக்களை பிரச்சினைகள் ஏதுமில்லாமல் காத்தருளும்.

அருள் பலம் மிக்க மகா தவசியான ஆறுமுக அரங்கமகா தேசிகரின் தர்மத்தில் உதவி தொண்டுகள் செய்து அரங்கரின் ஆசிகளை உலகமக்களெல்லாம் பெற்று வர அவர்களுக்கு எல்லா நலமும் தாமே வந்தடையும். கலிகால மக்களின் குறைகள் யாவும் விலகிடும். உயர்வான குணங்களும் மனோதிடமும் உண்டாகி எல்லாவிதமான ஞானங்களும் உண்டாகிடும். மக்கள் தங்கள் வாழ்வை கடைத்தேற்றிக்கொள்ளுகின்ற வல்லமையும் அழிவிலாமையை தருகின்ற உயர்ஞானமும் அவர்களுக்கு தடையின்றி கிடைத்து எல்லாவிதமான சிறப்புகளையும் தந்தருளும். மாதவசி ஆறுமுக அரங்கரிடத்து தீட்சை உபதேசம் அடைந்து உபதேசவழி நடந்து தினம்தினம் மறவாமல் ஞானிகளை பூஜை செய்து வருகின்ற மக்கள் வாழ்வில், பலவிதமான நலன்களும் உண்டாகி இந்த நாட்டை ஆளுகின்ற தலைமையானது சிறப்புடன் உருவாகி இந்த தேசத்தில் ஞான ஆட்சிக்காலமாக உருவாகிடும். உலகமக்களே விரைந்து ஓங்காரக்குடிலை அனுகி அருள்பெற்று அரங்கன் திருவடிகளிலே சரணடைந்துவிட விரைந்து உலகமாற்றம் உருவாகிடும் எனக் கூறுகிறார் மகான் காலாங்கிநாதர்.

-சுபம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *