மகான் இயற்பகை நாயனார் அருளிய ஆசி நூல் 17.11.2012

அவதார ஞானியே அரசா போற்றி
அறம்காத்து வரும் அண்ணலே போற்றி
புவனமதில் சுத்த சன்மார்க்கம்
போதித்துவரும் தவசியே போற்றி போற்றி

மகான் இயற்பகை நாயனார் அருளிய ஆசி நூல்

போற்றி உம்மை நந்தன தேள் திங்கள்
புகலுவேன் உபய திகதிக்கு
(நந்தன வருடம் கார்த்திகை மாதம் 2ம் நாள்)
ஏற்றமுடன் இயற்பகை நாயனாரும்
இயம்பிடுவேன் நித்ய ஆசிதன்னை

தன்னிலே இன்று ஆசானும்
தவசியாக தன்வந்திரி
திருமூலர் அண்ணல் வள்ளலாரின்
ஆற்றல் நிரம்பியே காட்சி தருவார்

தருகவே தவ சக்தி தன்னை
தவராசர் மூலம் அடையவே
குருவாய் ஆசானை ஏற்று
கூடித் தொண்டு செய்பவர் எல்லாம்

எல்லா வளமும் பக்குவமும்
எல்லையில்லா பரிவும் பணிவும்
வல்லமை மிக்க அறிவும் தெளிவும்
வரம் எனக் கண்டடைந்திடுவர்

அடைந்திட பிரணவக் குடிலில் (ஓங்காரக்குடிலில்)
ஆசான் வழியில் நிறைய சூட்சுமம்
சோடையில்லா (வீண்போகா) இருக்குதப்பா
சொன்னேன் கண்டு கேட்டு

கேட்டுமே விரைந்து அணுகி
குருராஜர் பாதம் பணிவீர்
திட்டம் யாவும் வெற்றியடைய
தொடருவீர் அரங்கரை அய்யமற

அய்யமற வணங்கும் அடியவர்க்கே
அனைத்துமாக ஆசான் இருந்து
மெய்யறிவு காட்டி வளர்த்திட
மேன்மை காண்பர் அவரவரும்

அவரவரும் இன்று குடிலை
அனைத்து தர மக்களுமே
புவனமதில் நாடியே பொருளுதவி
புண்ணிய சேவையில் கலந்து இருக்க

இருக்கவே கல்வி கேள்வி
இணையிலா ஞான பலம்
கருத்தாக குடும்ப பொறுப்பாக
கண்டுரைக்க நிலைகள் மாறி

மாறியே இல்லறத் துறவாய்
மகத்துவம் பட வாழ்ந்து சிறப்பர்
அறிவித்தேன் இன்று சூட்சுமம்
அரங்கரைத் தொடருவீர் நித்ய ஆசிமுற்றே.

இன்று சனிக்கிழமை ஓங்காரக்குடிலாசான் ரூபத்தில் மகான் தன்வந்திரி பகவான், மகான் திருமூலதேவர், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய மகான் இராமலிங்க சுவாமிகள் ஆகிய மூன்று ஞானிகளும் குடிலிற்கு வருகின்ற அன்பர்களுக்கு அருள் செய்வதால் பலதரப்பட்ட மக்களும் அதாவது ஜாதி மத துவேசம் இல்லாது எல்லோரும் வந்து ஆசிபெறலாம்

பொருளுதவி செய்கின்றவர்களுக்கும், ஓங்காரக்குடிலில் நடக்கின்ற அறப்பணிகளுக்கு தொண்டு செய்கின்றவர்களுக்கும் ஞானிகள் ஆசி உண்டு. இல்லறத்தில் இருந்தாலும் ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் சைவத்தை மேற்கொண்டவராகவும், சன்மார்க்கத்தில் நாட்டமுள்ளவர்களாகவும் இருப்பவர்கள் ஒங்காரக்குடிலாசான் ஆசி பெற்றால் சகல நலமும் பெற்று ஞானமும் கைவரப் பெறுவார்கள் என்கிறார் மகான் இயற்பகை நாயனார்.

-சுபம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *