மகான் இளையான்குடிமாற நாயனார் அருளிய ஆசி நூல் 18.11.2012

மகான் அகத்திய மகரிஷியின் ஆசியினாலும், மகான் அகத்தியரின் பெயரால் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் அமைக்கப்பட்டுள்ளது

அறுமுகனின் அருள் பெற்ற தவராசா
அரங்கனென பெயர் பெற்ற சிவராசா
குருமுனியார் அவதாரம் பெற்றுமே
குலம் அமைத்தாய் அவர்பேரில் சரிவர

சரிவர சுத்த சன்மார்க்கத்தை
சகலருக்கும் அளிக்கும் ஞானியே
நெறிமாறா நீதி வள்ளலே
நேர்மை குணம் கொண்ட மக்களே

மக்களே உன் புகழை அறிந்து
மண்ணுலகில் சடுதி நாடியே
ஊக்கமுடன் அறத்தில் உதவி
உறுதுணை புரிந்து வந்திடுவர்

வந்திடவே ஆசி நூல் வகை
வல்லமை மிக்க ஞானிகள்
சிந்தைபட ஆழ்வார்களுடன்
செப்புகின்றோம் நாயன்மார்ளும்

நாயன்மார்களுள் இது நாளில்
நந்தனவாம் தேள் திங்கள் சூல
(நந்தன வருடம் கார்த்திகை மாதம் 3 ம் நாள்)
நாயன்மார் இளையான்குடி மாறர் யானும்
நாட்டிடுவேன் நித்ய ஆசி தன்னை

தன்னிலே சேவையில் கலந்து
தருமபலம் தவபலம் உணர
மண்ணுலக மாந்தர்கட்குமே
மறை நூலில் ஆசிவழி பேசுகின்றேன்

பேசவே பிரதியாக உலகினில்
பிசகில்லா அச்சிட்டு வெளிவர
நேசமுள பலரின் கரம் தழுவி
நினைவலை வழி நாங்கள் கலந்து

கலந்து வழி காட்டுகின்றோம்
கவனம் சிதறா குடிலை கண்டு
கலந்து தொண்டிலிருப்பவர்
கலியுகத்தில் பெருஞ் சக்தி பெற்றிடுவர்

பெற்றிடுவர் ஆசான் கருணையையும்
பேதம் கருதா வருமுலகில்
ஏற்றிடுவர் சமத்துவ வாழ்வை
இணைந்திடுவர் சன்மார்க்க நெறியில்

நெறிபட நடக்க நடக்கவே
நிலவுலகில் அரங்கன் புகழை
வரிசைபட மக்கள் தொடர்ந்து
வாசித்தும் கண்டும் கேட்டும் தெளிந்திடுவர்

தெளிவு கொள்ள வேண்டியே
தொடர்ந்தேன் ஆசியை யானும்
தெளிவுபட அணுகி நின்று
தேசிகன் தொண்டில் சிறப்பீர் நித்ய ஆசி முற்றே.

முழுமுதற் கடவுளாம் முருகப்பெருமானின் ஆசியினாலும், மகான் அகத்திய மகரிஷியின் ஆசியினாலும், மகான் அகத்தியரின் பெயரால் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வைணவ சமயத்தை சார்ந்த பன்னிரெண்டு ஆழ்வார்களும், சைவ சமயத்தை சார்ந்த அறுபத்துமூன்று நாயன்மார்களும் ஆசியும் அருளும் வழங்கி வருகிறோம். இக்காலத்தில் ஞானிகள் சூழ்ந்து அருள் செய்யக்கூடிய இடம் ஓங்காரக்குடில் மட்டும்தான். ஆகவே பொருளுதவி செய்கின்றவர்களுக்கும், தொண்டு செய்கிறவர்களுக்கும் சகல ஞானிகளும் ஆசி வழங்குகிறார்கள். அதன் வரிசையில் இளையான்குடி மாற நாயனாராகிய நானும் அன்பர்களுக்கும் , தொண்டர்களுக்கும் ஆசியும் அருளும் வழங்குகிறேன்.

-சுபம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *