அறுபத்துமூன்று நாயன்மார்கள் மற்றும் பன்னிரண்டு ஆழ்வார்கள் நூலிற்கு மகான் சுப்ரமண்யர் அருளிய முன்னுரை ஆசி நூல்

அருப்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

ஓம் முருகன் துணை

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்
“ஓங்காரக்குடில்” துறையூர் – 621 010. திருச்சி Dt.
போன் : 04327 255184. www.agathiar.org

நிறுவனர் – சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

அறுபத்துமூன்று நாயன்மார்கள் மற்றும் பன்னிரண்டு ஆழ்வார்கள் நூலிற்கு மகான் சுப்ரமண்யர் அருளிய முன்னுரை ஆசி நூல்
(சயன சூட்சும நூல் (ஜீவநாடி)) 14.09.2012

ஓங்காரமாய் விளங்கி உலகம் தன்னை
ஓங்கார உபதேசம் பல விளக்கி
ஓங்கார சொரூபத்தை நிலைநாட்டி
ஓங்காரன் என அழைப்பவர்க்கு

அழைப்பவர்க்கு அக்கணமே அருளும்
அறுபடை வீடு கொண்டு அருளை
சளைக்காது வாரி வழங்கி நின்று
சரவணபவ என்றால் சக்தி வழங்கும்

வழங்கும் வள்ளலே சுப்பிரமண்யா
வணங்குகின்றோம் உலக ஞானிகளுமை
களங்கமிலா ஞான பண்டிதா
கருணை வேண்டி மகரிஷிகள் தேவர்கள்

தேவர்கள் தேவியர்கள் நால்வர்கள்
தேவியோடு ஈசனும் பிரம்மனும்
தேவர்கள் அடியவர்கள் காக்கும் திருமால்
தேவதைகளும் உன் அருள் வேண்டி வணங்குகிறோம்

வணங்குகின்ற யாவர்க்கும் மனமகிழ
வாழ்த்தியே வருகின்றார் அறுமுகனும்
வணங்குகின்ற உலக மக்களுக்கு
வரமருளவே சுப்ரமண்யர் யானும்

யானுமே இப்பூவுலகம் தன்னில்
யாதுமே சைவ வைணவ பேதமிலா
ஞானம்பெற அறம் தொடரும்
ஞானத்தடத்தில் இறங்கி அருள் புரிவேன்

அருளாளன் அரங்கன் ரூபில்
ஆற்றலை உலகோர் அறிய
அருளை செரிந்து வழி நடத்தி
அஞ்ஞானத்தவரையும் ஞானவானாக்கி

ஆக்கியே சிறப்பறிவு ஊட்டி
அரங்கர் மூலம் செயல் புரிந்திடுவேன்
ஊக்கம்பெற உலக மக்களை
ஓர்மைப்படுத்த உலக ஞானிகள்

ஞானிகள் அறுபத்துமூன்று நாயன்மார்கள்
ஞானமுள ஆழ்வார்கள் பஞ்ச பாண்டவர்கள்
இனிமைபட ஏடு வழி உலகுக்கு
இயம்பிய சூட்சுமங்கள் வழி முறைகள்

வழிமுறைகள் அரங்கர் வழி வந்த
வழிமொழிந்த தேவ சூட்சுமங்கள்
தெளிவு கொள்ளவரும் தொகுப்பு நூலிற்கு
தெரிவிப்பேன் முன்னுரையை என் உரையாக

உரைதனில் சில சூட்சுமங்கள்
உயர்வான ஞான விளக்கங்கள்
குறையில்லா பல திரை வடிவம்
குறிப்பால் அறிந்து தெளிவுபட

தெளிவுபட திரை விலகி சோதி
தெரியவரும் ஏகமாய் யாவர்க்கும்
தெளிவு கொள்ள எம்மதத்தவரும்
தீபமே மூலமென அறிவுறுத்தி

அறிவுறுத்தி சமநிலைப்படுத்த
அறுமுகன் என்னை வணங்குபவர்
அறிவு திடமாவர் அய்யமற
அவ்வாறே அரங்க ஞானி தடத்தில்

தடத்தில் சகல மத பேதமிலா
தன்னடக்கபட என் வழியில்
அடக்கமுற நடந்து ஞானத்தை
அவரவரும் அடைய ஆசியுண்டு

உண்டான இன்னூலை வாசிப்பவர்
உயர் ஞானம் கண்டு தெளிவர்
கண்டுவர உலக நடப்புகளை
கைவரப் பெற்று சிந்தை தெளிவு

தெளிவு ஞானம் திடமுற
தெரிவிப்பேன் இவைநூல் ஆழ்ந்து கற்போர்
தெளிவு பெறுவர் சிவன் மாலோன் வேறில்லையென
திடம் பெறுவர் யாவும் ஒன்றென

ஒன்றென உணர்த்த கலியுகத்தில்
ஓங்காரன் என் அருள் பெற்ற
நன்றான அரங்க தேசிகனை
ஞானியாக்கி உலகை சமப்படுத்தி

சமப்படுத்தி சுத்த சன்மார்க்கம்
சமண சைவ வைணவ பேதமிலா
சமப்படுத்தி ஞானசித்தர் லோகம்
சன்மார்க்க வாதியாக உலகோரை ஒன்றிணைக்க

ஒன்றிணைக்க அருள் புரிகின்றேன்
ஓங்காரக்குடில் நாடி நின்று
நன்றான உபதேசம் ஏற்பவர்
ஞானசித்தி உலகில் அடைவரப்பா

அப்பனே இந்தவித தொகுப்பு நூலை
அரங்கரும் என் ஆசிபட கரம்பட ஈய
காப்பென கருதி இல்லம் வைப்போர்
கடைத்தேறுவர் மூப்பில்லா பெரு வாழ்வடைவர்

அடையவே அவசியம் அவரவர்
அறுமுகன் என் அருள்பட வர
தடையற பெற்று பூசையறை
தக்க ஆசனமிட்டு வைத்து
நன்கு

வைத்துபின் இனிதே நீராடி
வாசிக்க வேணும் பயபக்திபட
நத்தியே உலக ஞானிகள்
நாயன்மார்கள் ஆழ்வார்கள் பஞ்ச பாண்டவர்கள்

பாண்டவர்களோடு உமை ஈசனும்
பாடிடுவேன் மாலவனோடு பிரம்மனும்
உண்டான தேவாதி தேவர்களும்
உடன் வந்தருளுவர் அய்யமற

அய்யமறுக்கும் மகா சக்தியாக
அரங்கர் குடிலிலிருந்து தொகுக்கும் நூலை
மெய்யறிவு கூடும் வாசிப்பவர்க்கு
மேலான ஞானம் கிட்டும் வணங்குபவர்க்கு

வணங்கி உலக இயக்கமதில்
வலம் வருபவர்கள் சமநிலை பெற
மனங்குளிர அரங்க ஞான தேசிகர்
மண்ணுலகுக்கு தொகுத்தளித்த இவை நூலுக்கு

இவை நூலுக்கு சுப்ரமண்யர் யானும்
இனிதே முன்னுரை தந்தேன்
அவைமெச்ச இப்புவியதனை
ஆபத்தில்லா காப்பாய் அரங்கா வாழி ஆசிநூல் முற்றே.
-சுபம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *