மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம்: 944

முருகப்பெருமான் துணை
முருகப்பெருமான் தலைமையில் உலகம் அனைத்தும் ஞானியர்களின் ஆட்சிக்கு உட்படும்.

துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக மனமுவந்து கைப்பட எழுதிய அருள்வாக்கு இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும்.

சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A., B.Ed., 
ஓம் சரவண ஜோதியே நமோ நம
30.04.2022, சனிக்கிழமை 
1. ஞானசக்தியே அரங்கா வாழ்க
ஞானபண்டிதன் என் மகா சூட்சுமமான
ஞானியே ஆறுமுக அரங்கனே வாழ்க
ஞாலமதில் உந்தனுக்கு சுப்ரமணியர் யானும் 
2. யானுமே ஞான அறிவுரை ஆசி தன்னை
நாட்டிடுவேன் சுபகிருது தகர் திங்கள் தன்னில்
(சுபகிருது வருடம் சித்திரை மாதம் 17ம் நாள், 30.04.2022 சனிக்கிழமை) 
தானதர்மபலம் பெருக்க வேண்டி
தவபலத்தை கலியில் சக்தியாக இறக்கி
3. இறக்கியே உயர் தொண்டர்கள் எனும்
யுகத்தில் ஞானவான்களை தேடிக்கண்டு 
குறைவின்றி அன்னவர்களை ஞானவழி நடத்தி 
குருபரன் என்னை வணங்கச் செய்து இனிதே
4. இனிதே இந்த கலியுகத்தில் தனிப்பெரும் 
கருணைபட இணையிலா ஞானத்தை வளர்க்கின்ற 
கனிவேலன் என் தயவுகொண்ட அரங்கனே
கலியில் உன் சொல் செயல்கள் அனைத்தும்
5. அனைத்துமே வேதமாக்கி உலகமாற்றம் 
கந்தவேலன் யான் நடத்தி அருளுவேன்
அருளாக அறமாக உந்தனுக்கு 
அனைத்துமாக உள்ளிருந்து இயக்குவேன்
6.வரம்தந்து நித்தம் உன்னை காத்துவர 
வையகத்தில் உன்னை கண்டு வணங்குபவரெல்லாம் 
எல்லோரும் ஞானத்தெளிவு கண்டு 
இனிபிறவாத பேற்றிர்க்கு தகுதி பெறுவர்
தகுதி தந்து தக்க வழி நடத்தி தன்னார்வ தொண்டு பெருக்கி உலகோர்க்கு
மிகுதிபட தயவை வளர்க்கின்ற மேலான ஆறுமுக அரங்கனே 
அரங்கனே உன் ஞானம் வெல்லும்
அரங்கனே உன் தர்மம் இந்த உலகை காக்கும்
      ஞான அறிவுரை ஆசி முற்றே
                        -சுபம்-

மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம்: 944

https://youtu.be/bjAGxxb9Dlw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *