ஓலைச்சுவடி ஓங்காரக்குடில் ஞானத்திருவடி மாத இதழுக்கு மகான் அகத்தீசர் ஆசிகாண்டம்

ஞானத்தின் திருவுருவே அரங்கா போற்றி
ஞானிகளின் வழிநடக்கும் அரசா போற்றி
ஞானத்தின் சித்தியே தேசிகா போற்றி
ஞானியே நின் திருவடிகள் போற்றி போற்றி          1

போற்றியே அகத்தீசர் யான் ஆசிதன்னை
புகலவந்தேன் சுவடிவழி இன்று நாளில்
பார்காக்க தவம் புரியும் அரங்கா வாழ்க
பாருலகில் உலகமக்கள் நலன்கள் காண           2

காணவே ஞானத்திருவடி என்னும் நூலை
கருணைநீ வெளியிடுவாய் என்று சொல்வேன்
பேணவே ஞானத்திருவடி என்னும் நூல்
புதுயுகத்தை படைத்துவிடும் என்று சொல்வேன்        3

சொல்வேனே நூல்பெற்றோர் அனைவருக்கும்
சிறப்புடனே புண்ணிய பலங்கள் கூடும்
நல் நூலாம் ஞானத்திருவடி என்னும் நூலை
நானிலத்தில் படிப்பவர்கள் ஞானம் பெறுவார்         4

பெறுவதற்கு வழிகாட்டும் நூலிது என்பேன்
பூவுலகில் திங்கள் தோறும் ( மாதந்கோறும் ) பெற்று படிப்போர்
அருளோடு புண்ணியங்கள் கோடி அடைவார்
அகத்தீசர் வாக்கு இது சத்தியம் என்பேன்           5

என்பேனே ஒவ்வொரு இல்லங்களிலும்
இன்னூல் இருந்திட வினைகளை நீக்கும்
நன்மைதரும் ஞானமதை அளித்திடும் என்பேன்
நூலிருக்கும் இல்லமதனுள் ஞானிகள் வந்து          6

வந்துமே திருவடியை பதித்து செல்வார்
வளம்கூடும் ஆசிகளை வழங்கிச் செல்வார்
சிந்தையிலே ஞானமதை ஓங்கச் செய்வார்
சித்திதரும் நூல் ஞானத்திருவடி எனும் நூல்         7

நூல் பெற்று தொண்டர்களும் அகிலமெங்கும் ஈய
நிலமதனில் ஞானிகள் ஆசி அகிலமெங்கும் பரவி
நல்யுகம் ஞானயுகம் ஆகும் உண்மை
நானிலத்தில் அருள்கூடும் அமைதி ஓங்கும்         8

ஓங்கியே ஆனந்தம் அடைவார் மக்கள்
உயர்வாகும் சகல சௌபாக்கியங்கள்
ஓங்கிவரும் அவரவர்க்கும் பூரண ஆயுள்
உயர்வான பேரின்பம் அடைவார் என்பேன்          9

அடைவாரே ஞானத்திருவடி எனும் நூல்
அருள்தரும் நூல் ஞானத்திறவுகோல் நூல்
அடைந்திட்ட அனைவருக்கும் ஞானிகள் திருவடி
அடைந்திடும் பாக்கியங்கள் உண்டு என்பேனே        10

என்பேனே அகிலமாற்றம் தரும் நூலிது
இவ்வுலகில் தெளிவுதரும் நூல் நன்மைதரும் நூல்
உண்மைதரும் நூலிது உயர ஆசியுண்டு
உலகமக்கள் உயர்வுகாண வைக்கும் நூலிது        11

நூலிதனை அனைவரும் வாங்கி உணர்ந்து
நலம்பெற அகத்தியர் யான் அளித்தேன் ஆசி
நூலிதனால் அகிலமாற்றம் சடுதியில் ஓங்கும்
நன்மைதரும் ஞானத்திருவடி நூல்சிறக்கும் ஆசிதந்தேன்
                 இப்பாகம் முற்றே     12

-சுபம் –

ஞானத்திருவடி எனும் ஞான நூலை வெளியிடுவதற்கு ஆசான் அகத்தீசரின் ஆசிகாண்டம் கேட்டோம் . ஆசான் அகத்தீசரும் மனம் மகிழ்ந்து 23.4.2008 புதனன்று திருச்சி சங்கிலியாண்டபுரம் , அகத்தியர் நாடி ஜோதிடர் V.T. பரணீதரன் அவர்கள் ஆசான் அகத்தீசரின் ஆசிகாண்டத்தை வாசித்தருளினார்.

        ஞானத்திருவடி நூலில் பல ஞானிகள் பாடல்களுக்கு ஓரளவிற்குதான் விளக்கம் தந்துள்ளார்கள் . இந்நூலில் முற்றுபெற்ற முனிவர்கள் அருளிய பாடல்கள் இடம்பெற்றுள்ளதால் இந்நூல் எங்கு இருப்பினும் ஞானிகளின் அருள் உண்டாகும்.
 
        எனவே, ஞானத்திருவடி நூலை வீட்டில் உள்ளோர் படித்தால் ஞானவாழ்வும் கைகூடும், இல்லறமும் சிறக்கும். ஞானத்திருவடி நூல் வைத்திருப்பவர் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும், பண்புள்ள புத்திர பாக்கியம் தோன்றும் . வியாபாரம் , உத்தியோகம் , தொழிலில் எவ்வித தடைகளும் ஏற்படாது. மேலும், தீராத கடன்சுமை நீங்கி செல்வம் பெருகும். தகுதியுள்ள நட்பு அமையும். குடும்பத்தில் ஞானிகள் இருந்து அருள் செய்வதால், பகைவர்களாலோ, விஷ ஜந்துக்களாலோ, துஷ்ட்ட தேவதைகளாலோ எவ்வித இடையூறும் வராது. ஆகவே, ஞானத்திருவடி நூல் இருக்கும் இடத்தில் தெய்வீக அருள் உண்டாகும்.
 
        எனவே , ஆன்மீகவாதிகள் ஞானத்திருவடி நூலை வாங்கிப் படித்து, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ ஆசான் அகத்தீசர் திருவடிகளை வேண்டுகிறோம் .
 
        குறிப்பு : உண்மை ஆன்மீகம் இதுவா ? அதுவா ? எனும் ஐயப்பாடு உள்ளவர்களுக்கு , இதுதான் உண்மை ஆன்மலாபம் பெறுவதற்கு வழிவகுக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *