9 முதல் 16.08.2020 இந்த வார நிகழ்வு மகான் அகத்தியர் அருளிய வார நிகழ்வு

 முருகப்பெருமான் துணை

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!

தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான்

எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல் 

(சார்வரி ஆடி மாதம் 25ஆம் திகதி முதல் ஆடி மாதம் 32ஆம் திகதி வரை ஆகஸ்ட் 09ம் திகதி ஞாயிறு முதல் ஆகஸ்ட் 16ம் திகதி ஞாயிறு வரை)

சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A.,B.Ed. 

இடர்வெல்லும் #சுடரோனே முருகனே

ஏழாம் படை வீடு கொண்ட #வேலவனே

சடையோனும் மாலோனும் பிரம்மனும் கூட

சடாட்சரனே என உன் பெருமைபாடிட

பாடிட அகத்திய மகரிஷி யானும் போற்றி

பகருவேன் இந்தியா தமிழகத்தில் 

நாடிடும் #சார்வரி நள்ளி திங்களில்

நடக்கும் இருபானை திகதிமேல் முப்பானீர் திகதி வரை நிகழ்வாக 

நிகழ்வாக #எதிர்கால பலன் குறித்த ஆசி

நிகழ்த்துவேன் அரங்கஞானி கேட்க

நிகழ்வெல்லாம் கலித் துன்பமாக

நிலமதனில் #நச்சுக்கிருமி வழி #உயிர்பலி 

உயிர்பலி மிகுந்து மக்களிடை

#உயிர்பயம் எம்பயமாக பெருக

#தயவில்லா மக்களின் போக்கே

#தண்டனையாக கலியில் நடக்குதப்பா

அப்பனே #ஆளுமை #அதிகாரவர்க்கம்

அழிவிலா உயிர்காக்கும் #மருத்துவம்

காப்பில்லா மரணச் சூழலிலும்

கருணை மறந்து #களவாகி நடந்திட

நடந்திட #பேராசை பொருளாசையாக

நடைபோட நாடெங்கிலும் மிகுதிபட

இடரே இயற்கை தாங்க முடியா

இன்னலாய் நச்சுக்கிருமியாகி துன்பம்

துன்பம் உயிர்பலியாகி வர 

தொடர்ந்து அவலம் கூடினால்

துன்பம் கூடி பேருலகே அழியும்

தாயகம் #இந்தியா #தமிழகம் தன்னில்

தன்னிலே எண்ணிக்கை #மிகுந்து

தரணியோரை அச்சுறுத்தக் கூடும்

#இன்னல் விலகி பாதுகாப்புபெற

இயற்கையை #இறைவனை மதித்து

மதித்து சமூக #அவலம் விலகிட

மருத்துவத் துறை #கருணைபட நடந்து

#மேதகு துறைவாரிய சக்திகளும்

முன்வந்து தரும ஞானம்பட ஆளுமை

ஆளுமை நடத்தி மக்களை காத்திட

ஆசை பேராசை நிலை அகற்றி

வலுவான அரங்கமகான் ஞான வழி

வள்ளல் நெறி வழி வந்து செயல்பட மாற்றமும் பாதுகாப்பும் பெறும் வார ஆசி முற்றே.

– சுபம்

முருகப்பெருமான் துணை

மகான் அகத்திய மகரிஷி அருளிய வார ஆசி நூலின் சாரம் :

சார்வரி வருடம் ஆடி மாதம் 25ம் நாள் 09.08.2020, ஞாயிற்றுக்கிழமை முதல் ஆடி மாதம் 32ம் நாள் 16.08.2020, ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ள ஒரு வார கால அளவில் இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கவிருக்கும் நிகழ்வுகள்

உலக மக்களின் துன்பங்களை வென்று காக்கின்ற அருட்ஜோதி #ஆண்டவரே, ஏழாம் படை வீடாம் #துறையூர் ஓங்காரக்குடிலை அமைத்து, உலகை #காக்கும் வேலவனே, சடையோன் சிவபெருமானும், மாலோன் விஷ்ணுவும், பிரம்மனும் கூட, சடாட்சரனே முருகா, முருகா, #முருகா என உமது #பெருமையை பாடிட அகத்திய மகரிஷி யானும் உமது திருவடி போற்றி இந்தியாவிலும் தமிழகத்திலும் சார்வரி வருடம் ஆடி மாதம் 25ம் நாள் 09.08.2020, ஞாயிற்றுக்கிழமை முதல் ஆடி மாதம் 32ம் நாள் 16.08.2020, ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ள ஒரு வார கால அளவில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை வார ஆசி நூலாக உரைக்கின்றேன் என்கிறார் மகான் அகத்திய மகரிஷி.

தற்சமயம் உலகினில் கலியுகத்தின் துன்பமாக நச்சுக்கிருமிகளால் உலகமெங்கும் உயிர்ப்பலி அதிகமாகி மக்கள் எல்லாம் #உயிர் #பயம் கொண்டு எம்பயமாக பெருகி நிற்குதப்பா. சற்றும் தயவில்லாமல் நடந்து கொண்ட மக்களின் #தீமையான போக்கே உலகமக்களுக்கு #தண்டனையாக இந்த கலியுகத்தில் நடக்குதப்பா.

இதுமட்டும் அன்று #இவ்வளவு துன்பங்கள் உண்டான போதும் உலகமெங்கும் மக்களுக்கு #பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வந்தபோதும், எப்பொழுது வேண்டுமானாலும் மக்களுக்கு #மரணம் சம்பவிக்கலாம் என்ற கொடுமையான சூழ்நிலை நிலவிய போதும், ஆளுமை அதிகாரவர்க்கம், அழிவில்லாது உயிர் காக்கும் மருத்துவத்தில் என அனைத்திலும் #கருணையை மறந்து #களவு செய்கின்றனர். பேராசை கொண்டு பொருளை சேர்ப்பதற்காக பலவகையிலும் களவு செய்து வாழ்கின்றனர். நாடெங்கிலும் இப்படிப்பட்டோர் அதிகமாகியபடியால் இவர்களால் உண்டான துன்பம் மிகுதியாகி போனதால் அந்த கொடுமையை இயற்கை தாங்க முடியாமல் உலகை அச்சுறுத்தும் விதமாக நச்சுக்கிருமி வடிவினில் உலகினில் பரவி உயிர்ப்பலியை உண்டாக்கி வருகிறது.

உலக மக்களே இனிமேலாகினும் திருந்தி தர்மத்தின் வழி நடந்திடுங்கள், அதை விடுத்து உலகினில் தொடர்ந்து நச்சுக்கிருமியினால் உயிர்ப்பலி அதிகமாகும்படி நடந்து கொண்டால், இந்த பேருலகமே அழிந்து போகுமப்பா. இந்தியாவிலும் தமிழகத்திலும் கூட உயிர்ப்பலி மிகுந்து மக்களை அச்சுறுத்தும். இத்தகைய இன்னல்களில் இருந்து பாதுகாப்பு பெற்றிட இயற்கையை மதித்து நடந்திட வேண்டும். கடவுள் உண்டென்று நம்பி இறைவனை மதித்து நடந்திட வேண்டும். நாட்டிலுள்ள சமுதாயத்தின் துன்பம் தீர்ந்திட, மருத்துவத்துறை மக்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும். அரசின் மற்ற மேன்மைமிக்க துறைகளும் வாரியங்களும் மற்றும் அரசு சக்திகளும் தாமாக முன்வந்து தர்மத்துடனும் ஞானத்துடனும் ஆட்சி செய்து மக்களை காப்பாற்றிட வேண்டும்.

ஆட்சி புரிவோர் மக்களை காப்பாற்ற வேண்டுமெனில் ஆட்சி புரிவோர் தங்களிடம் உள்ள ஆசையையும் பேராசையையும் விட்டு விட்டு, தர்மத்தின் வழிதனை போதிக்கும் அரங்கமகானின் ஞானவழிகளை ஏற்று வள்ளல் நெறி வழிக்கு வந்து வாழ்வில் கடைப்பிடித்து நடந்திட உலகமெல்லாம் பெருமாற்றமும் அருள் பாதுகாப்பும் பெருகிடும் எனக் கூறுகிறார் மகான் அகத்திய மகரிஷி.

– சுபம் –

https://youtu.be/rWiiQo5Hmwc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *