6 – 13.09.2020 இந்தியா, தமிழகத்தில் எதிர்கால பலன் குறித்த மகான் அகத்திய மகரிஷி அருளிய வார ஆசி நூல்

 முருகப்பெருமான் துணை 

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! 

தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!! 

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் 

#எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த

மகான் அகத்திய மகரிஷி அருளிய வார ஆசி நூல் 

சார்வரி வருடம் ஆவணி மாதம் 21ம் திகதி முதல் ஆவணி மாதம் 28ம் திகதி வரை

(06.09.2020 ஞாயிறு முதல் 13.09.2020 ஞாயிறு வரை) 

சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A.,B.Ed.

உலக நன்மைக்காக தமிழ்நாட்டில்

அவதரித்தான் முருகப் பெருமான்! 

அவன் ஆசி பெற்ற ஒன்பது கோடி ஞானிகளும் சைவத்தை கடைபிடித்து அன்னதானம் செய்து ஆசி பெற்று தான் ஞானியானார்கள்.

முருகப்பெருமான் ஆசி பெற்று ஜென்மத்தை கடைத்தேற்ற விரும்புகின்ற ஆன்மீகவாதிகள் சைவத்தை கடைப்பிடிக்க வேண்டும்! 

1. பாரப்பா அரங்கன் தருமத்தை 

பாருலகை மாற்ற எடுத்த அவதாரத்தை 

கூறப்பா மக்களை நோக்கி

குருவரங்கன் வேலவன் உன் சக்தி என்று 

2. சக்தி மிக்க அரங்க ஞானி கேட்க

சாற்றுவேன் அகத்தியன் யானும் 

பக்திமிகு பாரதம் தமிழகம் தன்னில்

பாடிட சார்வரி யாளி திங்களில் 

3. திங்களில் மூவேழுதிகதிமேல் எழுநான்குதிகதி வரை

தெரியவே நடக்கும் வார நிகழ்வாக 

இங்கனமே வருங்கால பலனாக 

இயம்பிடுவேன் வார ஆசி தன்னை 

தன்னிலே கலித் துன்பமாக 

தலைமைகள் பதவி மாந்தர்கள் வழி 

இன்னலான நச்சுக்கிருமி தாக்கம்

இடராகி உயிர்பலி மிக நேரும் 

5. நேருமே கட்டுப்படா வண்ணம்

நிலவுலகில் கிருமிவழி பலி தொடரும் 

வருமுலகில் பேரிடரை வெல்ல

வரவேணும் மக்களிடை சுய கட்டுப்பாடு 

6. கட்டுப்பாடுடன் சித்தர் வழி வாகடம்

கணக்காய் இயற்கை அவுசதமுறை 

தட்டாது ஏற்று வருகவே 

தமிழகம் இந்தியா பாதுகாப்பு பெறும்

7. காப்புதரும் உயர் சக்தியாக

கந்த வேலனை வணங்கி 

ஒப்பு கொள்ளும் ஆளுமையாக 

உத்தமர்களாக மத்திய மாநில செயல்கள் 8

செயல்கள் சிறக்க கருணைபட

சேவையே முதன்மையாக கொண்டு 

தயவிலா சுயவிளம்பரம் பகட்டை 

தனிநபர் தலைமை செலவுகளை குறைத்து 

குறைத்து பொதுநிதி காக்கப்பட 

குந்தகம் கோளாறு இல்லாமல் 

வரித்துறை நிதித் துறைகளெல்லாம்

வளமுற சுதந்திரமாக செயல்பட 

10. செயல்பட இந்தியா தமிழகம் 

சிக்கலில்லா மீளும் எழும் 

தயவான அரங்கன் வழி ஏற்கவே 

தமிழகம் இந்தியா நிலைஉயரும்

வார ஆசி முற்றே

-சுபம்

முருகப்பெருமான் துணை 

மகான் அகத்திய மகரிஷி அருளிய வார ஆசி நூலின் சாரம் :

உலக மக்களே பாருங்கள் பாருங்கள் அரங்க மகா தேசிகனார் செய்கின்ற அளவற்ற தருமத்தினை தருமத்தின் மூலமாக இவ்வுலகை மாற்றிடவே அவதாரமாக வந்துதித்த அவதார ஞானி அரங்க மகானின் அற்புதங்களை கண்டு கூறுங்கள் உலகிற்கு அரங்கனே முருகப்பெருமானின் சக்தி வடிவமென்று வல்லமை மிக்க அரங்க மகான் இவ்வுலகின் நிகழ்வுகள் குறித்து கேட்கவே அகத்திய மகரிஷி யானும் சார்வரி வருடம் ஆவணி மாதம் 21ம் நாள் 06.09.2020 ஞாயிற்றுக் கிழமை முதல் ஆவணி 28ம் நாள் 13.09.2020 ஞாயிற்றுக் கிழமை முடிய உள்ள காலத்தில் இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை வார ஆசி நூலாக உரைக்கின்றேன் என்கிறார் மகான் அகத்திய மகரிஷி.

கலியுகத்தின் துன்பமாக ஆட்சியாளர்களையும், தலைவர்களையும், பதவி வகிப்போரையும் கூட விட்டு வைக்காமல் நச்சுகிருமிகள் தாக்கி அவர்களுக்கும் துன்பங்களை உண்டாக்கி உயிர்பலிகளும் அதிகமாக ஆகிவருகின்ற சூழ்நிலை நாட்டினில் உண்டாகும்.

உலகமெங்கும் இனி வரும் காலம் நச்சுக்கிருமிகளை கட்டுப்படுத்த முடியாமல் போய் உலகமெங்கும் உயிர்பலிகள் மிகுந்திட நேரும். வரும் காலங்களில் வேகமாக பரவ இருக்கும் நச்சுக்கிருமி தாக்குதலில் இருந்து தப்பித்து பேரிடரை வெல்ல வேண்டுமாயின் உலக மக்களிடையே தனி மனித சுயக் கட்டுப்பாடு அவசியம் வேண்டும். மக்கள் முற்று பெற்ற மரணத்தை வென்ற மாமேருகளான சித்தர்கள் உலக மக்கள் நலம் கருதி கருணையுடன் அருளி சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டு சித்த வைத்திய மருந்துகளையும் இயற்கை வைத்திய முறைகளையும் ஏற்று கடைப்பிடித்து வரவர தமிழகமும் இந்திய தேசமும் பாதுகாப்பை பெற்றிடும்.

நாட்டு மக்களை காக்கின்றவர்களாக இந்த நாட்டினை ஆட்சி செய்வோர் மாறி ஞானத் தலைவன் முருகப்பெருமானை வணங்கி ஒப்புக் கொண்டு முருகப்பெருமானை தலைவனாக ஏற்றுக் கொண்டு முருகப்பெருமானை முன்னிருத்தி தர்மங்களை செய்து உத்தமர்களாக ஆகி ஆட்சி செய்து வருவதுடன் அவர்களது செயல்பாடுகள் எல்லாம் ஜீவதயவையும் மனித நேயத்தையும் அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படுவதுடன் மக்கள் சேவையே முதன்மையாக கொண்டு செயல்பட்டு சுய விளம்பரங்களை தவிர்த்து விட்டு தனி நபர் தலைமை செலவுகளை குறைத்து செலவிட்டு மக்களின் வரிப்பணமாகிய பொதுநிதியை பாதுகாப்புடன் பயன்படுத்தி நடந்து பொது மக்களுக்கோ, பொது நிதிக்கோ எந்த பங்கமும் வாராது நடந்து வரிச்சுமை குறைப்பதுடன் நிதித்துறையும் வரித்துறையும் வளம் பெறும் வகையில் சுதந்திரமாக செயல்பட இந்திய தேசமும் தமிழகமும் எந்த சிக்கலும் இல்லாமல் தேக்க நிலையில் இருந்து விரைந்து மீண்டுவிடும். தமிழகமும் இந்தியாவும் நிலை உயர்வடையும் எனக் கூறுகிறார் மகான் அகத்திய மகரிஷி.

– சுபம் –

https://youtu.be/hvyUcwMK5aA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *