31.05.2021 மகான் மங்கையர்கரசியார் அருளிய யோக பிரசன்ன ஆசி நூல் | ஓங்காரக்குடில் ஓலைச்சுவடி

முருகப்பெருமான் துணை

மகான் மங்கையர்கரசியார் அருளிய யோக பிரசன்ன ஆசி நூல்

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A

31.05.2021 , திங்கட்கிழமை

அறமாக மக்களிடை பரவி 

அற்புதம் நிகழ்த்தும் ஞானியே

வரமாக உன் ஆசி பெற்றமக்கள்

வையகத்தில் வாழ்வாங்கு பெறுவர் எனக் கூறி

 

கூறியே யோகபிரசன்ன ஆசி

குறைவிலா பிலவ விடைதிங்கள்

கருதியே மூவையீர்திகதி சோமவாரம்

(பிலவ வருடம் வைகாசி மாதம் 17 ம் நாள் , 31.05.2021 , திங்கட்கிழமை)

கண்டுரைக்க மங்கையர்கரசியார் யானும்

யானும் உலகநலமுற உரைப்பேன்

உயர்வான நீதிவழி காட்டுகின்ற

ஞானதேசிகனை குருவாக ஏற்று

நம்பிக்கை வைத்து மக்கள் வருக

வருகவே உலகில் நடக்கும்

வக்கிர கொடூர செயல்கள் அகலும்

தருமசிந்தை வளர்க்கும்

தவசி தயவை பெற்று வரும் மக்கள்

மக்களுக்கு மனத் தூய்மையோடு

மறுமை வெல்லும் உபாயம் அறியும்

ஆக்கமும் சூட்சுமம் அறிந்து தெளிந்து

அரங்கன் வழி அனைத்தும் அடைவர்

அடையயே கலியின் துன்பமாக

அனுகி வாட்டும் பேரிடரும்

இடரின்றி சடுதி அகன்றுமே

இவ்வுலகம் அமைதி பாதுகாப்புபெற

 

காப்புபெற ஞானவழியை நாடி

கட்டாயம் சைவநெறி ஏற்று

ஒப்புகொண்டு முருகப் பெருமானின்

ஓங்கார நாதம் எழுப்பியே

எழுப்பியே சரவணச் சுடரேற்றி

எந்நாளும் தொடர் வழிபாடு

வழுவாது செய்து வருக

வந்தடையும் பெரும் பாதுகாப்பு

காப்பான சக்தியாக வந்த கருணை வடிவான

ஞானியரை காப்பென மக்கள் ஏற்றாலே

கலியின் துன்பங்கள் விலகி

விலகி எல்லா வகையும் வெற்றியும்

மாற்றமும் ஆகி வளமான வாழ்வும்

கீர்த்தியும் வந்தடையும் உயர்வும் சிறப்பும்

சிறப்பான தருமமும் ஞானமும்

சித்தி தரும் வழிகளாக இருக்க

மறுப்பின்றி ஏற்று வருக மரணத்தையும்

வென்று உயர்வர் யோகபிரசன்ன ஆசி முற்றே

-சுபம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *