30.05.2021 மகான் பெருமிழலை குறும்ப நாயனார் அருளிய யோக பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை 

மகான் பெருமிழலை குறும்ப நாயனார் அருளிய யோக பிரசன்ன ஆசி நூல் 

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
30.05.2021, ஞாயிற்றுக்கிழமை 

தவசியே தரும சக்தியே 
தன்னார்வ தொண்டு பெருக்கி 
அவனியை மீட்க வந்தநல் 
ஆறுமுக அரங்கமகா ஞானியே 
ஞானியே உன்பெருமை கூறி 
ஞாலமதில் யோகபிரசன்ன ஆசி 
இனிமைபட பிலவ விடைதிங்கள் 
இயம்பிடுவேன் மூவையோர்திகதி கதிர்வாரம்
(பிலவ வருடம் வைகாசி மாதம் 16ம் நாள், 30.05.2021, ஞாயிற்றுக்கிழமை) 

வாரமதில் பெருமிழலை குறும்ப நாயனாரும்
வழங்குவேன் உலகோர் நலம்பெற 
சோரமிலா தொண்டர் படையை
சுத்தநெறி கொண்டு உருவாக்கி 

உருவாக்கி உலகமாற்றம் செய்ய
உயர்ஞானம் அருளும் ஞானியே 
குருவாக உனைஏற்று மக்கள்
குவலயம் எங்கும் பெருகிட 

பெருகிட மக்களிடை தெளிவும்
பிரச்சினைகளை வெல்லும் பலமும் 
தரும சிந்தையும் தயவும் கூடி 
தரணியே பாதுகாப்பு அடையும் 

அடையவே ஆக்கமான சேவை 
அறம்வழி அரங்கன் செய்ய 
தடையின்றி மக்களும் இணைந்து 
தரும் சேவை ஆற்றிவர 

வருகவே வையகம் தன்னில் 
வாட்டமான துன்பங்கள் விலகும் 
முருகப் பெருமான் வழிபாட்டை 
முழுமைபட உலகோர் கடைபிடிக்க 

கடைபிடிக்க மக்களை வாட்டும் 
கிருமி வகை பேரிடர் துன்பமும் 
இடர்தரா முடிவுகண்டு மாற்றம் 
இவ்வுலகம் சடுதி காணும் 

காணவே அரங்கன் சீடரென 
கலியில் வாழும் மக்களெல்லாம் 
ஞானவான்களாக தகுதி பெற்று 
ஞானிகள் ஆசிபட வாழ்க்கை நிலை மாறி

மாறியே தேற்றம்பல கூடி
மார்க்கமுடன் அழியாமை எனும் 
தெரிவும் தெளிவும் கிட்டி இனிதே
தேசிகன் மூலம் தெய்வநிலை காண்பர் 

காண்கின்ற இந்த மாற்றம்
கட்டாயம் அரங்கன் ஞானவழி 
உண்மையென உலகோர்வர நடந்தேறும் 
உரைத்திட்ட யோகபிரசன்ன ஆசிமுற்றே
– சுபம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *