30.04.2020 மகான் இடைக்காடர் அருளிய தவபிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் #இடைக்காடர் #idaikadar அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
30.04.2020, #வியாழக்கிழமை

#புசுண்டரும் வியந்த புண்ணியனே
#பூமித்தாய் மகிழ்ந்த தருமவானே
#அகண்ட அகிலம் எங்கிலும்
#அறநெறி போதித்து காத்தருளும்

#காத்தருளும் ஆறுமுக அரங்கனே
கந்தவேலன் #சக்தியான ஞான தேசிகனே
#உத்தமமாய் உன் தவபலம் மெச்சி
#உயர்வாய் சார்வரி தகர் திங்கள்

திங்களிலே மூவையீர் திகதி #குருவாரம்
(சார்வரி #வருடம் சித்திரை மாதம் 17ம் நாள், 30.04.2020 வியாழக்கிழமை)
தேசிகனுக்கு #தவபிரசன்ன ஆசி
இங்கனமே இடைக்காடர் யானும்
இயம்பிடுவேன் உலகோர் #நலம்பெற

#நலம்தரும் ஞானிகள் பூசை
நாட்டிடுவேன் தவசியரும் #நடத்தி
#பலம்கூட்டி மக்களிடை வரம்
பாதுகாப்புடன் #தந்து அருளிவர

வருகவே ஞானியரின் #கரம்தனில்
வல்லமையான #சடாட்சர_தீட்சை
#குருவென அடைந்து பெற்றமக்கள்
#குறைகள் இடர்கள் அனுகா வண்ணம்

வண்ண முடன் #சர்வ பாதுகாப்பும்
வளமும் #ஆயுள் கீர்த்தியும்
எண்ணம்வழி #திடம் கண்டுயர்வர்
எல்லையிலா #தருமசக்தி கொண்ட

கொண்டநல் #ஞானியர் காட்டும்
குறைவிலா #அன்னதான வழியை
தொண்டென உலகோர் #பின்பற்றி
#தொடர் சேவையாக செய்து வருக

வருகவே தரும #பலத்தால்
#வையகம் இயற்கை பலம் கூடி
தரும பலத்தால் பேரிடரை வென்று
#தரணிக்கே பாதுகாப்பு உண்டாகும்

ஆகவே ஆறுமுகனார் #சக்தியான
அரங்க ஞானி #காட்டுகின்ற
#யுகமாற்ற உயர் சேவையில்
உலகோர் #பங்களிப்பு பெற வேண்டி

வேண்டியே ஞானமாக அருளி
#வேலவன் வழிபாட்டை துவக்கி
#தொண்டர்படைகளை உருவாக்கி
#திருவருள் பெற அருளி வர

வருகவே அரங்க ஞானியரின்
#வல்லமை அறிந்து தெளிந்து
முருகா அரங்காஎன #செபதபம்
முழங்கிவர உலகோர் #காப்புபெறுவர்
தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம்

முருகப்பெருமான் துணை
மகான் இடைக்காடர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

மாமேருவாம் #புஜண்டமகரிஷி pujanda maharishi #வியந்து போற்றும் #புண்ணியவானே பூமித்தாயே உமது #தர்மம் பார்த்து மகிழ்ந்து போற்றும் தர்மவானே பரந்த உலகெங்கிலும் மக்களுக்கு #அறநெறியை #போதித்து அவர்களை தர்மவழியில் செலுத்தி காத்து ரட்சிக்கும் ஆறுமுக அரங்கமகா தேசிகரே ஞானத்தின் தலைவனாம் முருகப்பெருமானின் சக்தியாக அவதாரமாக வந்துதித்த ஆறுமுக அரங்கமகா தேசிகனே #உத்தமமான உமது #தவத்தின் பலத்தை மெச்சி உலகமெலாம் உமது பெருமைகூறி உலக நலம் கருதி விகாரி வருடம் சித்திரை மாதம் 17ம் நாள், 30.04.2020 வியாழக்கிழமையான இன்றைய தினமதனிலே தவபிரசன்ன ஆசி நூல் தனையே இடைக்காடர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் இடைக்காடர்.

எல்லா நலன்களையும் தருகின்ற வல்லமைமிக்க #ஞானிகள்_பூசையை ஆறுமுக அரங்கமகானும் உலக நலன் கருதி நடத்தி உலகின் அருள் #பலத்தை பெருக்கி மக்களுக்கு #வரங்களையும் அருள் #பாதுகாப்பையும் தந்து காத்துவருகின்றார். அத்தகைய வல்லமைமிக்க மகா ஞானி ஆறுமுக அரங்கரின் திருக்கரங்களினால் சடாட்சர தீட்சை பெற்று அரங்கரை குருவாக ஏற்றுக்கொண்டு அரங்கரை பின்தொடரும் மக்களுக்கு எந்தவித இடையூறுகளும் வாராதவாறு ஞானிகள் அருள்பாதுகாப்பும், வளமும், நீடிய ஆயுளும், சிந்தையில் திடமும் பெற்று உயர்வடைவார்கள்.

எல்லையிலாத #தர்மசக்தி கொண்ட மகாஞானி ஆறுமுக அரங்கர் #காட்டும் தயவு செயலான #அன்னதான நெறியை உலகமக்களெல்லாம் ஏற்று அன்னதானங்களை தாம் கடைத்தேற கிடைத்த #வாய்ப்பாக எண்ணி #தன்னலமற்று இடைவிடாது தொடர்ந்து தொண்டாய் செய்து வர மக்கள் செய்கின்ற தர்மத்தின் பலத்தால் உலகின் தர்மபலம் பெருகி உலகின் #இயற்கை பலமிக்கதாகி தற்சமயம் உலகினில் நிலவும் பேரிடரை வென்று இந்த உலகமே பாதுகாப்பு பெறும்.

ஆதலினால் முருகப்பெருமானின் சக்தியான ஆறுமுக #அரங்கமகா தேசிகர் #காட்டுகின்ற உலகமாற்ற உயர் சேவைகளில் உலக மக்களெல்லாம் பங்குபெற்று அவரவரும் #மேல்நிலை அடைய முருகப்பெருமானின் வழிபாட்டை ஞானமாக மக்களுக்கு அருளி உலகை #கடைத்தேற்ற ஞானயுகத்தை #உருவாக்க தொண்டர் படைகளை உருவாக்கி மக்களெல்லாம் கடவுளின் #திருவருளை பெற அருள் செய்து வருகின்றார் அரங்க மகான். ஆதலால் அரங்கமகா #தேசிகரின் வல்லமைகளை தவபலத்தை ஞானபலத்தை மக்களெல்லாம் #அறிந்து தெளிந்து “முருகா” “அரங்கா” என செபதபங்களை #மனமுருகி செய்துவர உலகமக்களெல்லாம் அருள் பாதுகாப்பை பெறுவார்கள் எனக் கூறுகிறார் மகான் இடைக்காடர்.
– சுபம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *