3.5 முதல் 10.5.2020 வரை இந்தியா, தமிழகத்தில் வார நிகழ்வு – மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை
கண்டவர் முருகப்பெருமான்

எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த
மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

சார்வரி வருடம் சித்திரை மாதம் 20ம் திகதி முதல் சார்வரி சித்திரை மாதம் 27ம் திகதி வரை
(03.05.2020 ஞாயிறு முதல் 10.05.2020 ஞாயிறு வரை)

சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A.,B.Ed.

#அலட்சியமாக எண்ணும் மனிதா
#அவசியம் நீ உலகை கவனி
அலட்சியமாக தருமம் #மீறியே
அகிலமே அதர்ம பாதை கொண்டதால்

கொண்டதால் கலியின் #துன்பமாகி
#கிருமிவழி பேரிடர் உயிர்பலி
கொண்டுமே அகிலம் #முடங்கிவர
குறிப்பாக இந்தியா #தமிழகம் தன்னில்

தன்னிலே சார்வரி தகர் திங்கள் தன்னில்
தக்க இருபான் திகதிமேல் இருபானேழ்திகதி வரை
இன்னாளில் நடக்கும் #வாரநிகழ்வாக
#எதிர்கால பலன் குறித்த ஆசி தன்னை

ஆசிதனை #அகத்தியகமகிஷி யானும்
#அரங்கஞானி கேட்க அருளுவேன்
#வாசிவென்ற ஞானிகள் சூழ்ந்த
வரம்பெற்ற இந்தியா தமிழகம் தன்னில்

தன்னிலே #நச்சுக்கிருமி corona virus வழி அல்லல்
தடைகள் கட்டுப்பாடுகள் #ஊரடங்குகள் என
#நன்னயமாய் செயல்பாடுகள் கண்டாலும்
நச்சுக்கிருமியோ #அழிவை தந்துவர

வருகவே மக்களிடை #விழிப்புணர்வு
#வலுவாக உருவாகா சூழலாலும்
தருமபலமில்லா #தன்னல பெருக்கமோடு
தன்னைவிட ஏதும் #பெரிதில்லை எனும் அலட்சியமே

அலட்சியமே #அளவில்லா அழிவாக
அனுகி பேரிடராகி #பரவிவர
அலட்சியம் இனியும் கொள்ளா
மக்களே #அவசியம் உங்களை தனிமைபடுத்தி கொள்ளா

கொள்ளாது #ஊர்சுற்றி திரிந்தால்
கொள்ளை போகும் நச்சுக்கிருமியால் #உயிர்
அல்லல்பெருகி #அழிவு எண்ணிக்கை
#அதிகரித்து இந்தியா தமிழகம் முடங்கநேரும்

நேருமைபட #அரச உத்தரவை
நிலமதனில் ஆறுமுகனார் #உத்தரவாக எண்ணி
தருமபடி நடந்து தனிமைபடுத்தியே
தவசி அரங்கன் #சைவநெறி ஏற்றால்தான்

தன்னிலே #பேரிடர் துன்பம்
தமிழகம் இந்தியாவை #விட்டு
இன்னல்தரா படிப்படியாய் #விலகி
இயற்கையோடு இறைவன் பாதுகாப்பாக மாறும்

#மாறுதலை செய்யவந்த ஞானி
மாதவசி அரங்கன் #சன்மார்க்கத்தை
ஆறுதலாக #பின்பற்றி வருக
அகிலமே அழிவிலா #பாதுகாப்பு பெறும்
வார ஆசி முற்றே
– சுபம் –

மகான் அகத்திய மகரிஷி அருளிய வார ஆசி நூலின் சாரம் :
சார்வரி வருடம் சித்திரை மாதம் 20ம் நாள் 03.05.2020 ஞாயிற்றுக்கிழமை முதல் சார்வரி வருடம் சித்திரை மாதம் 27ம் நாள் 10.05.2020 ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ள காலத்தில் நிகழவிருக்கும் நிகழ்வுகள்:

கடவுள் மீது #நம்பிக்கை இல்லாமலும் #பாவபுண்ணியத்தின் மீது நம்பிக்கை இல்லாமலும் அலட்சியமாக எண்ணி தன்னை வியந்து தனது வலிமையை புகழ்ந்துகொள்ளும் மனித வர்க்கமே அவசியம் நீ இவ்வுலகை #கவணிக்க வேண்டும் உலகினில் மக்களெல்லாம் #கடவுள் நம்பிக்கையின் மீதும் பாவபுண்ணியத்தின் மீதும் #கவனம் கொள்ளாமல் அலட்சியமாய் நடந்ததால் தர்மத்தை #மீறி அளவிலாது நடந்துவிட்டனர். இந்த உலகமே அதர்மபாதையை கொண்டதால் அந்த பாவ #வினைகளெல்லாம் கலியுகத்தின் துன்பங்களாக மாறி தற்சமயத்தினிலே உலகினிலே #நச்சுக்கிருமிகளின் மூலமாக பேரிடர் உண்டாகி எண்ணற்ற உயிர்களை #பழிவாங்கி வருவதோடு இந்த உலகையே #நடமாட்டம் இல்லாத உலகமாக மாற்றி #முடக்கி வைத்துள்ளது. இதனில் #குறிக்பாக இந்தியாவிலும் தமிழகத்திலும் சார்வரி வருடம் #சித்திரை மாதம் 20ம் நாள் 03.05.2020 ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் முதல் சித்திரை மாதம் 27ம் நாள் 10.05.2020 #ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ள கால அளவில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை வார ஆசி நூலாக அகத்திய மகரிஷியானும் கலியுக ஞானி அரங்க #மகான் கேட்க உரைக்கின்றேன் என்கிறார் மாகன் அகத்திய #மகரிஷி.

#வெல்லற்கரிய வாசியை வென்றிட்ட ஞானிகள் சூழ்ந்ததும், #வரம்பல பெற்ற இந்தியாவிலும் தமிழகத்திலும் நச்சுக்கிருமிகளின் மூலமாக வருகின்ற துன்பங்கள், #தடைகள், #கட்டுப்பாடுகள், #ஊரடங்குகள் என #ஆட்சியாளர்கள் நல்லமுறையில் செயல்பாடுகளை செய்திட்டாலும் நச்சுக்கிருமியோ கட்டுப்படாமல் #நாட்டினுள் பரவி அழிவுகளை தந்து வருகிறது. நாட்டு மக்களிடையே #விழிப்புணர்வு வலுவான சூழ்நிலைகள் #உருவாகாமல் இருப்பதால் நாட்டின் #தர்மபலமில்லாமல் போனதாலும் மக்கள் #தன்னலமாய் நடந்துக்கொண்டதாலும் தன்னைவிட #பெரியது ஏதுமில்லை என மக்கள் தம்மை தாமே #வியந்துக்கொண்டதாலும் அலட்சியமாய் நடந்து கொண்டு அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி நடந்ததால் மக்களின் இந்த #அலட்சிய போக்கே பேரிடராக #மாறி அழிவுகளை தந்து வருகின்றது மேலும் #பரவிவருகின்றது. ஆதலினால் மக்களே இனிமேலாகிலும் அலட்சியம் கொள்ளாமல் அவசியம் உங்களை #தனிமை படுத்திக் கொள்ளுங்கள் அவ்வாறு இல்லாமல் அலட்சியமாய் நடந்து ஊர்சுற்றி திரிந்தால் #கொள்ளை போகும் நச்சுக்கிருமியால் உயிர்கள் படும் துன்பங்கள் அதிகமாகி #உயிர்பலி அழிவு எண்ணிக்கை அதிகரித்து இந்தியாவும் தமிழகமும் #முடங்க நேரிடும்.

ஆதலினால் மக்களே #அரசு இடுகின்ற #உத்தரவுகளை #முருகப்பெருமான் எனது உத்தரவாக #எண்ணி ஏற்றுக்கொண்டு #தர்மத்தின் வழிதனிலே நடந்து உங்களை #தனிமை படுத்திக்கொண்டு உயிர்பலி தவிர்த்து #புலால் மறுத்து #சைவநெறி மேற்கொண்டு தர்மநெறிபடி நடந்து வந்தால் தான் #பேரிடர் துன்பம் இந்தியா தமிழகத்தை விட்டு அகலும். படிப்படியாய் விலகி #இயற்கை பாதுகாப்பும் உண்டாகி #இறைவன் பாதுகாப்பும் கிடைத்து முழுமையாக அகலும்.

#யுகமாற்றம் செய்ய வந்த ஞானி #மாதவசி ஆறுமுக அரங்கனின் #சன்மார்க்கத்தை மக்களெல்லாம் ஏற்று #பின்பற்றி வர இவ்வுலகமே அழிவில்லாத நிலையை எட்டி அருள் பாதுகாப்பை பெறும் எனக் கூறுகிறார் #மகான் அகத்திய மகரிஷி.
– சுபம் –

YouTube:
https://youtu.be/ucX8vNNzvzA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *