29.08.2020 மகான் அதிபத்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை

மகான் அதிபத்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல் சுவடி


வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், MA., B.Ed, 29.08.2020, சனிக்கிழமை 1.ஞானியர் படைகள் துணைபட ஞானவாழ்வு தந்தருளும் ஞானதேசிகனே ஆறுமுக அரங்கனே ஞானியர்களை தொடர்ந்து நாயன்மார்களும் 2.நாயன்மார்களும் தவபிரசன்ன ஆசியை நாட்டிடுவோம் சார்வரி யாளி திங்கள் நேயமுடன் முன்னான் கோர் திகதி காரிவாரம் (சார்வரி வருடம் ஆவணி மாதம் 13ம் நாள், 29.08.2020 சனிக்கிழமை) நாயன்மாருள் அதிபத்தர் யானும் 3.யானும் உலக நலமுற உரைப்பேன் உயர் சைவ நெறி ஏற்று ஞானமாக அரங்கன் தரும் நன்னெறி ஏற்று நடந்து மக்கள்வர 4.வருகவே மக்களிடை பக்குவம் வள்ளல் தன்மையாக மாறும் தரும சிந்தைகளும் வளர்ந்து தரணியோர்க்கு தருமபலம் கூடும் 5. கூடும் எல்லா மக்களையும் குறிப்பாக சமமாக கருதும்படி நடந்தேறும் சமத்துவ ஞானம் நடைமுறையில் மக்களை வதைக்கும் 6. வதைக்கும் பேதமை மாச்சர்யம் வஞ்சனை வக்கிர கொடூரம் பதுக்கும் ஊழல் முறை கேடுகளும் பலியிடும் உயிர் கொலை துன்பங்களும் 7. துன்பங்களும் தேசிகன் கொள்கை தேசமெல்லாம் பரவ விலகி ஓடும் இன்பமான சமூகச் சூழல் பரவி இறைசக்தியாக அரங்கன் அருளும் 8.அருளும் தீட்சையும் மக்களிடை ஆற்றலாக பரவி வளர்ந்திட இருளான கொடுமைகள் விலகி இந்த யுகமே மாற்றம் காணும் 9.காணுமே மக்களின் தன்மை மாறி கந்த வேலனை வணங்குவதால் ஞானமாக ஞானவானாக மாறி ஞானயுகம் படைக்கும் சக்தியான 10.சக்தியான ஞானிகள் எனும் நிலை சற்குரு அரங்கன் தயவால் அடைவர் சக்தி கூடி எல்லா மக்களும் சரவண சுடரில் சூட்சுமம் கண்டு 11. கண்டுமே உலகமாற்றம் செய்து கலியுகத்தை ஞானயுகமாக்கி தொண்டுவழி அற்புதம் புரிபவர் தெரிவித்த தவபிரசன்ன ஆசி முற்றே -சுபம்-Website : http://www.arangartv.com

Facebook: https://www.facebook.com/arangartv/

twitter: https://twitter.com/arangartv Watsapp : +916383965618 tmblr: https://www.tumblr.com/blog/arangartv Linkedin: http://www.linkedin.com/in/arangartv Instagram:https://www.instagram.com/arangartv/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *