29.04.2020 மகான் அழகண்ணிச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் #அழுகண்ணிச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
29.04.2020, #புதன்கிழமை

தருமராசனே கலியின் #காப்பே
தவசியாக வந்து #அழியாமை
ஆறுமுகனால் #பெற்ற ஞானியே
அரங்கனே உன் தவபலம் #மெச்சி

மெச்சியே சார்வரி தகரின் திங்கள்
மேலான மூவையோர் திகதி #புந்தி வாரம்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 16ம் நாள், 29.04.2020 புதன்கிழமை)
#அச்சமற தவபிரசன்ன ஆசி
அருளுவேன் அழுகண்ணிச்சித்தர் யானும்

யானும் உலகநலம்பெற உரைப்பேன்
உயிர்கொலை தவிர்த்து #மீளுகின்ற
#ஞானம் அருளும் #அரங்கமகான்
ஞானமே உலகை மீட்கும் ஞானமாகும்

ஆகவே #துறையூர் மண்வாழ்
அழியாமை தந்தருளும் #ஞானி
வகையான #சன்மார்க்க வழியை
வல்லமைபட #ஏற்று வருதலுற

வருகவே மக்களுக்கு #தெளிவும்
வள்ளுவப் பெருமான் #மறைசார்பு
தருமப்படி நடக்கும் #பெருந்தன்மை
தக்க #மாற்றமும் கூடி சிறப்பர்

சிறப்பான #தருமபலம் அமைத்து
சிந்தைக்கு பலமாய் #ஜீவ தயவை
அறமாக அருளி வழிகாட்டும்
அரங்கன் #கொள்கை ஏற்றுவர

வருவதுடன் #உலகளாவிய பரவல்
#வல்லமைபட செய்து நன்கு
தருமம் #மீறாது நடந்து வர
தரணியில் எவருக்கும் அழிவில்லை

அழிவில்லா #பெருவாழ்வு கண்டு
#அறம் தொடர தரும #பலமாகி
பழி #பாவம் நெருங்கா வண்ணம்
#பாருலகோர் சகல வரம் பெற்று

பெற்றுமே #வாழ்வாதாரம் வழி
#பிரச்சினை தடைகள் ஏதுமிலா
ஆற்றலும் #மாற்றமும் கண்டுமே
அரங்கன் #தயவால் உயர்வர்

உயர்வான நிலை #ஞானவழி இருக்க
#ஊழதுடன் கலித் துன்பமாக
தயவிலா #நச்சுக்கிருமி அல்லல்
தரணியை #மிரட்டி உயிர் பலி தருக

தருகவே #இந்தவித பேரிடர் துன்பத்தை
#தகர்த்தெறிய பாதுகாப்பு பெற
முருகப் பெருமான் #வழிபாட்டுடன்
முழுமைபட தரும #பாதை ஏற்றுவாரீர் சடுதி
தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் அழுகண்ணிச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்:

எல்லையிலாது தர்மங்களை செய்து உலகின் தர்மபலம் #பெருக்கிய தர்மராசனே #கலியுகத்தின் காப்பாளனே மகா தவசியாக வந்து அவதரித்து அழிவிலாமை எனும் மரணமிலா #பெருவாழ்வை முருகபெருமான் அருளால் பெற்றிட்ட #மகாஞானியே அரங்கனே அற்புதமான உமது தவபலத்தினை மெச்சி சார்வரி வருடம் சித்திரை மாதம் 16ம் நாள் 29.04.2020 புதன்கிழமையான இன்றைய தினமதிலே அழுகண்ணிச்சித்தர் யானும் #தவபிரசன்ன ஆசி நூல் தனையே உலக நலம் கருதி உரைக்கின்றேன் என்கிறார் மகான் அழுகண்ணிச்சித்தர்.

#உயிர்கொலை செய்தல் #பாவம் என்பதைக்கூட #அறியாமல் உயிர்கொலை செய்து புலால் உண்டு பெரும்பாவம்தனை #பலஜென்மங்களாக #சேர்த்து மக்களெல்லாம் உயிர்கொலை கொலை செய்த பாவத்தினால் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். #அத்தகைய பெரும்பாவமான உயிர்கொலையை தவிர்த்து #புலால் உண்பதை #நீக்கி உயிர்கொலை பாவத்திலிருந்து #மீளுகின்ற அற்புதமான ஞானத்தினை அருளுகின்ற ஆறுமுக அரங்கமகா தேசிகரின் #உண்மை ஞானமே இவ்வுலகை மீட்கும் வல்லமைமிக்க ஞானமாகும்.

ஆதலினாலே #ஞானபூமியாம் தென்னகத்திலே துறையூரிலே #ஏழாம்படைவீடமைத்து #உலகப்பெருமாற்றத்தை நிகழ்த்திவரும் மகா ஞானியும் #நம்பி வந்தவர்தமக்கு அழிவிலாமை எனும் மரணமிலா பெருவாழ்வை அளிக்கும் வல்லமைமிக்க #யுகமாற்ற ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகர் அருளுகின்ற சன்மார்க்க வழியை உலகமக்கள் #உறுதியுடன் ஏற்று கடைபிடித்து வர மக்களுக்கு அறிவில் #தெளிவு உண்டாகும். வள்ளுவப்பெருமான் அருளிய #வேதநூலாம் திருக்குறளில் வள்ளுவப்பெருமான் கூறிய #தர்மநெறிப்படி நடந்து அற்புதமான வாழ்வை வாழும் பெருந்தன்மையை அரங்கனருளால் பெற்று சிறப்படைவார்கள். சிறப்புமிக்க #வல்லமையான தர்மபலத்தை உலகினில் உண்டாக்கி மக்களின் அறிவினை சிந்தனையை பலப்படுத்தும் விதமாய் மக்களுக்கே உரித்தான #ஜீவதயவை அறமாக அருளி நல்ல ஞானவழியினை #காட்டும் ஆறுமுக அரங்கரின் கொள்கையை ஏற்று #கடைபிடித்து வருவதுடன் இந்த அற்புதமான #அறநெறிக் கொள்கையை உலகமெங்கும் #பரவிட செய்து தர்மங்கள் செய்து தர்மநெறிமீறாமல் நடந்து வர உலகினில் எவருக்கும் #அழிவு என்பதே இல்லை.

அழிவிலாத பெருவாழ்வினை அடையும் வல்லமைபெற்று தர்மங்களை #தாராளமாய் செய்து அறவழியில் தொடர்ந்து செல்ல #தர்மபலம் பெருகி பழிபாவங்கள் இல்லாத நல்வாழ்வை சகல வரங்களுடன் பெற்று சிறப்படைவார்கள். அவர்களுடைய #வாழ்வாதாரமானது எந்த வித தடையுமில்லாமல் சிறப்புடன் அமையும். ஆற்றல்மிக்கவராய் நல்ல முன்னேற்றங்களை பெற்று அரங்கன் ஆசியையும் பெற்று அரங்கன் தயவினால் #உயர்ந்த நிலையை அடைவார்கள்.

#எல்லாவிதமான துன்பங்களையும் #நீக்கும் அற்புதமான அரங்கர் கூறும் தூயஞானவழி இருக்க #அந்தவிதமான ஞானவழியில் மக்கள் செல்லாததனால் மக்களின் #ஊழ் வினை பெருகி ஊழ் வினைத்துன்பம் கலியுகத்துன்பமாக #மாறி உலகினில் நச்சுக்கிருமி மூலமாக இவ்வுலகையே மிரட்டி #உயிர்பலிகளை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட பேரிடரின் துன்பங்களிலிருந்து விடுப்பட்டு பேரிடர் துன்பத்தை #தகர்த்தெறிந்த முழுமையான பாதுகாப்பை பெற்றிட வேண்டுமாயின் உலகமக்களெல்லாம் ஞானத்தலைவன் முருகபெருமானை #வழிபடு தெய்வமாக ஏற்று தினம் #தினம் மறவாமல் முருகப்பெருமான் திருநாமங்களைச் சொல்லி ஜெபதபங்கள் செய்வதுடன் அரங்கன் கூறும் #தர்மநெறிப்படி நடந்து வரவர இவ்வுலகைப் பற்றிய அனைத்துத் துன்பங்களும் #படிப்படியாக முற்றிலும் விலகிடும் எனக் கூறுகிறார் மகான் அழுகண்ணிச்சித்தர்.
– சுபம் –
YouTube: https://youtu.be/5H5rr9E4B1o

 Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *