28.04.2020 மகான் அல்லமாபிரபு அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் #அல்லமாபிரபு அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
28.04.2020, #செவ்வாய்கிழமை

தரணி #காக்கும் சக்தியாக
#தவசியாக வந்த அரங்கனே
சரவண #சோதி ஏற்றி மக்கள்
#சடாட்சர வழிபாடு செய்ய அருளிய

#அருளிய அரங்கமகா தேசிகனே
அகிலமதில் #உன்தவபலம் மெச்சி
அருளுவேன் #தவபிரசன்ன ஆசி
அரங்கனுக்கு #சார்வரி தகர்திங்கள்

திங்களிலே மூவைதிகதி குசன்வாரம்
(சார்வரி வருடம் #சித்திரை மாதம் 15ம் நாள், 28.04.2020 செவ்வாய்கிழமை)
தேசிகன் #வழியில் மக்கள்தேற
இங்கனமே அல்லமாபிரபு யானும்
இயம்பிடுவேன் உலகோர் #நலம்பெற

#நலம்தரும் ஞானியாக வந்த
ஞான தேசிகன் #ஆசிபெற்றவர்கள்
வலம்வருவர் சகல பாதுகாப்பாய்
வல்லமைபட தருமவழிகளை ஏற்று

ஏற்றுமே #அகிலம் எங்கிலும்
இணையிலா #தருமம் பெருக்கியே
#உற்றதொரு ஞானிகள் துணைபட
#உயர் பூசை அரங்கன்வழி செய்து

செய்துமே உலக மக்கள்
#செப்பிட ஆன்மீக ஞானவழி தொடர
#மெய்ஞானம் பெருகி உலகோர்
#மீள்வர் பேரிடர் துன்பம் விலகி

விலகியே #கலியுகம் தன்னில்
#வினைபற்றா பாதுகாப்பு பெறுவர்
காலனை வென்ற ஞானியான
#கந்தப்பெருமான் சக்திமிகு #அரங்கன்

அரங்கன் #சன்மார்க்க வழியை
அகிலத்தார் #பணிந்து ஏற்க
#வரங்களாக நிலைகள் கூடி
#வல்லமையும் அழியாமையும் அடைவர்

அடையவே பிரணவக் #குடிலை
#அடையாளம் கண்டு இணைந்தோர்
#சோடை போகா வாழ்வு பெறுவர்
#சுத்தநெறிவழி வரும் மக்கள்

மக்களெல்லாம் #மரணம் வென்று
#மறுமை வென்றும் சிறப்பர்
#தேக்கமின்றி ஞானிகளை வணங்கி
#தீட்சை பெற்று வருபவரெல்லாம்

எல்லோரும் #நடப்புகால பிரச்சினை
#யுகத்தை அழிக்கும் பேரிடரை வென்று
வல்லமையும் #ஆயுள்கீர்த்தியும் பெறுவர்
விளம்பிய தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் அல்லமாபிரபு அருளிய தவபிரசன்ன ஆசி நூலின் சாரம்

இவ்வுலகை காக்கும் #மகாசக்தியாக மகாஞானதவசியாக #அவதரித்திட்ட அரங்கமகா தேசிகரே உலகமக்களெல்லாம் #சரவணஜோதி தனை ஏற்றி சடாட்சர வழிபாடுகளை செய்திட வழிவகை செய்திட்ட அரங்கமகா தேசிகனே உமது #தவபலம் மெச்சியே உலகமெலாம் உமது பெருமையை கூறி தவபிரசன்ன ஆசிநூல்தனையே அல்லமாபிரபு யானும் சார்வரி வருடம் சித்திரை மாதம் 15ம் நாள், 28.04.2020 செவ்வாய்கிழமையான இன்றைய தினமதனிலே உரைக்கின்றேன் என்கிறார் மகான் அல்லமாபிரபு.

இவ்வுலகிற்கு எல்லா நலன்களையும் தந்தருளுகின்ற #வல்லமைமிக்க மகாஞானியாக #வந்துதித்த ஞானதேசிகன் அரங்கரின் #ஆசிபெற்ற மக்கள் சகலபாதுகாப்பையும் பெற்று உலகினில் #வல்லமைபட #வாழ்வார்கள். உலகமக்களெல்லாம் ஈடுஇணைஇல்லாத தர்மங்களை செய்து தர்மபலம் பெருக்கி #நமக்கு என்றும் துணையாய் வருகின்ற #ஞானிகளின் துணையை பெரும் வகையில் அரங்கரின் #உபதேசம் பெற்று அரங்கர் கூறும் #உயர்ஞான பூசைகளை ஞானிகளின் பூசைகளை ஞானிகளின் #திருவடி பற்றி தினம் #தினம் மறவாமல் செய்து வருவதுடன் அரங்கன் கூறும் #தூயநெறிமுறைகளை ஏற்று உயிர்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு அரங்கரின் ஞானநெறிகளை #கடைபிடித்து வர மக்களுக்கெல்லாம் மெய்ஞானம் பெருகி உலகமக்கள் உலகை அச்சுறுத்தும் பேரிடர்களில் இருந்து துன்பமின்றி #மீள்வார்கள் உலகை அச்சுறுத்தி வரும் பேரிடரும் இந்த உலகை விட்டு விலகும். மக்களெல்லாம் வினைபற்றாது பாதுகாப்பை பெறுவார்கள்.

#காலனாகிய மரணத்தை வென்ற #மகாஞானியான முருகப்பெருமானின் #சக்திமிக்க அரங்கமகா தேசிகர் #கூறும் சன்மார்க்க வழியை உலகோர் பணிந்து ஏற்று கடைபிடித்து சன்மார்க்கம் #கிடைத்தது தாம் பெற்ற #வரமாக எண்ணி சன்மார்க்க நெறியினை தவம் போல் கடைபிடித்து வரவர அவர்களது #நிலைகள் உயர்வடைந்து வல்லமையும் அழிவிலா நிலையையும் பெறுவர். மக்களே நீங்கள் #அழிவிலாத நிலையை பெறவேண்டுமாயின் மரணத்தை வென்ற மகான் வாழும் #ஏழாம்படைவீடு ஓங்காரக்குடிலை #பயபக்தியுடன் சென்று வணங்கி அரங்கரை #பின்தொடர்ந்து ஓங்காரக்குடிலுடன் #இணைந்துள்ளவர்கள் குற்றமற்ற வாழ்வை வீண்போகாத வாழ்வை பெறுவார்கள்.

அரங்கரின் தூயநெறி கொள்கைகளை ஏற்று கடைப்பிடித்து வருபவர்களெல்லாம் மரணத்தை வென்று #வெல்லமுடியாத பிறவித்துன்பத்தை வென்று #பிறவாபெரும்பேற்றை அடைந்து சிறப்படைவார்கள். தடையின்றி ஞானிகளை வணங்கி அரங்கரிடம் தீட்சை பெற்று தீட்சை உபதேச வழியில் #நடந்து வருபவர்களெல்லாம் தற்சமயம் உலகைப்பற்றியுள்ள உலகை #அழித்துக்கொண்டிருக்கும் நச்சுக்கிருமி (covid 19) வழியினால் ஆன பேரிடரை வென்றும் வல்லமைகளை பெற்றும் நீடிய ஆயுளை பெற்றும் புகழுடன் வாழ்வார்கள் என கூறுகிறார் மகான் அல்லமாபிரபு.
– சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *