27.04.2020 மகான் அருள்நந்தி சிவாச்சாரியார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் #அருள்நந்தி #சிவாச்சாரியார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
27.04.2020, திங்கட்கிழமை

#அறமாக வந்த அண்ணலே
ஆறுமுகப் பெருமான் #சக்தியாக
#வரமாக வந்த வள்ளலே
#வாழும் ஞானியே ஆறுமுக அரங்கனே

அரங்கனே உன் #தவபலம் மெச்சி
அருளுவேன் சார்வரி தகர்திங்கள்
வரங்களென முன்னான்கீர்திகதி சோமவாரம்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 14ம் நாள், 27.04.2020 திங்கட்கிழமை)
வழங்குவேன் தவ பிரசன்ன ஆசி

#ஆசியை அருள்நந்தி சிவாச்சாரியார் யானும்
அரங்கன் #கேட்க அருளுவேன்
#வாசி வென்ற ஞானிகள் கூட்டம்
#வலம் வர பிரணவக் குடிலை

குடிலை #நாடி வரும் மக்களுக்கு
கிருமி #பிறவகை அல்லலில்லை
குடிலில் #தொண்டு செய்யும் மக்களுக்கு
குருவருளால் பாதுகாப்பு #கூடும்

கூடுமே எங்கும் எதிலும்
#குருவரங்கன் தவபலம் துணைவர
#நாடெங்கும் பேரிடர் கண்டாலும்
ஞானிகளை வணங்கிவரும் அன்பர்கள்

அன்பர்கள் #சன்மார்க்க வழி தொடரும்
அனைத்து #தொண்டர் பெருமக்களுக்கும்
துன்பம் #அனுகா பாதுகாப்புடன்
தெரியவரும் #ஆயுள் கீர்த்தி பலம்

பலமான #பாதுகாப்பு தன்னை
#பரிந்து கொண்டு அரங்கன் தருமம்
#வலம்வர தொண்டர் பெருமக்களை
#வையத்துள் எந்த #தீவினை வழியும் இடரண்டா

இடரண்டா காப்பாக மாறும்
எந்நாளும் ஞானிகள் #நாமசெபம்
தடையற #செய்துவரும் மக்கள்
தரணியில் எவ்வித #குறையுமில்லா

குறையுமில்லா #வளர்ச்சி மாற்றம்
குந்தகமில்லா வாழ்வும் பெறுவர்
#அறம்வழியே ஆற்றல் கூட்டி
அகிலத்தையே காத்து வருக

வருகின்ற #அரங்கன் தருமம்
#வளர்ந்தாலே போதும் உலகில்
#கிருமி வழி பேரிடர் ஒழியும்
#குவலயமே பாதுகாப்பு பெறும்

பெருமை மிக்க #சன்மார்க்க நெறி
பேருலகமே #ஏற்றால்தான் பேரிடர்
#பெருகா விலகி #சடுதி ஒழியும்
#புகன்றிவந்த தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் அருள் நந்திசிவாச்சாரியார் அருளிய தவபிரசன்ன ஆசி நூலின் சாரம் :

உலகினில் அறத்தினை காக்க அறசக்தியாக அறத்தின் தலைவனாக #அவதரித்த #அண்ணலே முருகப்பெருமானின் சக்திவடிவமாக முருகப்பெருமானின் #வரமாக வந்துதித்த #வள்ளலே வாழும் ஞானியே ஆறுமுக அரங்கமகாதேசிகரே அற்புதமான உமது தவபலத்தினை #மெச்சியே உலகநலம் கருதி #சார்வரி வருடம் #சித்திரைமாதம் 14ம் நாள், 27.04.2020 திங்கட்கிழமையான இன்றைய தினமதனிலே #அருள்நந்திசிவாச்சாரியார் யானும் தவபிரசன்ன ஆசி நூல்தனையே உரைக்கின்றேன் என்கிறார் மகான் அருள்நந்திசிவாச்சாரியார்.

உலகமாற்றத்திற்காக முருகப்பெருமானால் #ஏழாம்படைவீடாக உருவாக்கப்பட்ட #துறையூர் ஓங்காரக்குடிலை வாசியை வென்ற ஞானியர் #கூட்டம் சூழ்ந்து #அருள் செய்து வருகின்றனர். ஆதலினாலே குடிலை நாடி வருகின்ற மக்களுக்கு கிருமிகளாலோ இன்னும் பிற வகையினாலோ #எந்தவித துன்பமுமில்லை. பெருமைமிக்க ஓங்காரக்குடிலை #நம்பி தொண்டு செய்யும் மக்களுக்கு #குரு அரங்கமகாதேசிகரின் அருள் பாதுகாப்பு பெருகிடும் எங்கும் எதிலும் குரு அரங்கரின் தவபலம் அவர்களுக்கு #துணைவரும். நாடெங்கும் #பேரிடர் கண்டாலும் #ஞானிகளை

வணங்கி வருகின்ற #மக்களுக்கும் அன்பர்களுக்கும் #சன்மார்க்க வழிதொடரும் தொண்டர் பெருமக்களுக்கும் எவ்வித துன்பமும் #அனுகாது பாதுகாப்புடன் அவர்களுடைய ஆயுள் பலமும் அதிகரிக்கும்.

ஆறுமுக அரங்கமகா தேசிகர் #தன்னலமற்று செய்திட்ட அளவிலாது #தர்மங்கள் எல்லாம் #ஒன்றுகூடி தர்மசக்தியாக அரங்கரை #சார்ந்தோரை சூழ்ந்து இருப்பதினாலே அரங்கனை பின்தொடர்ந்த தொண்டர் பெருமக்களை தர்மசக்தியானது #வலிமையான அருள்பாதுகாப்பு தன்னை #பரிவுடன் அமைத்துள்ளது. ஆதலினாலே இவ்வுலகினில் இந்த #தீவினைகளாலும் தொண்டர்களுக்கு எவ்வித #இடர்களும் அண்டாது வந்த இடர்களும் மாற்றமடைந்து அவர்களுக்கு பாதுகாப்பாய் மாறிவிடும். தினம்தினம் மறவாமல் ஞானிகளின் திருநாமங்களை சொல்லி பூஜித்து வருகின்ற மக்களுக்கு இந்த உலகினில் எந்தவித குறைகளும் இல்லாமல் வளர்ச்சி அடைந்து நல்ல முன்னேற்றங்களை காண்பார்கள். துன்பமற்ற வாழ்வை வாழ்வார்கள்.

ஆறுமுக அரங்கரின் தர்மம் #வல்லமை மிக்கதாகும் அதனுடைய #ஆற்றல் அளவிலாதது அப்படிப்பட்ட ஆற்றலுடைய #தர்மமே இவ்வுலகினை #காத்துவருகின்றது ஆதலாலே ஆறுமுக அரங்கரின் தர்மம் #வளர்ந்தாலே போதும் இவ்வுலகினில் உள்ள கிருமிவழி வந்த பேரிடரெல்லாம் #ஒழிந்து விடும். இந்த உலகமே பெரும்பாதுகாப்பைப் பெறும்.

உலகமக்களெல்லாம் #பெருமை மிக்க சன்மார்க்க நெறியை #ஏற்றுக்கொண்டு உயிர்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ நெறியில் நடந்து #வந்தால் தான் உலகைப்பற்றிய பேரிடர் விலகி உலகை விட்டு #விரைந்து ஒழியும் எனக் கூறுகிறார் மகான் அருள்நந்திசிவாச்சாரியார்.
– சுபம்
YouTube: https://youtu.be/5PdsjEiB2Rc

27.04.2020 மகான் அருள்நந்தி சிவாச்சாரியார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *