26.4 – 3.5.2020 வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

முருகப்பெருமான் துணைஅருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!! ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான்எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்(சார்வரி சித்திரை மாதம் 13ஆம் திகதி முதல் சித்திரை மாதம் 20ஆம் திகதி வரை ஏப்ரல் 26ம் திகதி ஞாயிறு முதல் மே 03ம் திகதி ஞாயிறு வரை)சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A., B.Ed. தயவும் தருமமும் கலந்த #பூமியாம்தன்னிகரில்லா ஞான பூமியாம்#தாயகம் இந்தியா தமிழகம் தன்னில்தக்க சார்வரி தகர் திங்களில்திங்களில் முன்னான்கோர் திகதி மேல் இருபான் திகதிவரை(சார்வரி வருடம் சித்திரை மாதம் 13ம் நாள் 26.04.2020, ஞாயிறு முதல் சித்திரை மாதம் 20ம் நாள் 03.05.2020 ஞாயிறு முடிய)தெரிவிப்பேன் நடக்கும் நிகழ்வாக எதிர்காலபலன் குறித்தஇங்கணமே வார ஆசி தன்னைஇயம்பிடுவேன் அரங்க ஞானி கேட்ககேட்கவே அகத்திய #மகரிஷி யானும் உரைப்பேன்கேடாக #நச்சுக்கிருமி அல்லல்#ஆட்டுவிக்க உலகை பேரிடராகஅணுகியே துன்பம்தர உலக #மாசாகஉலக மாசு ஒழிக்கப்படும் #தவமாகஉள் #இருப்பு சூழல் உருவாகி இருக்க#கலகம் செய்யா கலியுக மக்களே#கட்டுப்பட்டு தனிமைப்படுத்தி உலகோர்உலகோர் #அமைதிபட இருந்துஉயர்வான #சைவ நெறி ஏற்றுபழக்கம்தனை #உயிர்வதை வகை செல்லாபாதுகாப்பான #ஜீவதயவுபட நடக்கநடக்கவே #பேரிடர் துன்பங்களும்நாடெங்கிலும் #பரவா விலகும் இடரை வெல்லும் #முதன்மை தேசமாகஇந்தியா #தமிழகம் இடம்பெற்று பெற்றுமே ஞானத்தலைவன் #முருகன்#பெருமை மிக்க வழிபாட்டை செய்து#ஆற்றல்பட மக்களை நோக்கி#அன்னதான நெறிமுறை தொடரதொடரவே #இயற்கை பாதுகாப்புதிடமாகி சடுதி #மாற்றம் காணும்பேரிடர் #படிப்படியாய் விலகி#பூரண பாதுகாப்பாக மாறும்மாறுதல் தரும் ஞானியாக வந்த#மாதவசி அரங்கன் ஞானவழியேமாறுதலை #உலகுக்கு செய்துமக்களிடை தெளிவு திடம் பாதுகாப்பு கூட்டும்கூட்டவே இந்தியா தமிழகத்தில்#கதிரவன் தன் #அக்கினிபலம் ஏற்றி#கட்டமிலா தணிக்கும் காலம் தொட்டு கண்டுவரும் நச்சுக்கிருமி வழி சோடைசோடை பூரணமாக விலகியே#சுபிட்சம் பாதுகாப்பு இந்தியா தமிழகம் பெறும்பேரிடரில் உலகமெங்கும் #உதவியே பெரும்பேறும் #வளர்ச்சிகளும் இந்தியா தமிழகம் காணும் வார ஆசி முற்றே. -சுபம்முருகப்பெருமான் துணைமகான் அகத்திய மகரிஷி அருளிய வார ஆசி நூலின் சாரம் : சார்வரி வருடம் சித்திரை மாதம் 13ம் நாள் 26.04.2020, ஞாயிறு முதல் சித்திரை மாதம் 20ம் நாள் 03.05.2020, ஞாயிறு முடிய உள்ள கால நிகழ்வுகள் குறித்த ஆசி நூல் : தயவு உணர்வும் தர்மசிந்தையும் உள்ள #மக்களால் நிறைந்து தர்மமும் தயவும் மிக்க பூமியாக #விளங்கக்கூடிய தன்னிகரில்லா #தனிப்பெருமை உடைய இந்தியாவிலும் தமிழகத்திலும் சார்வரி வருடம் #சித்திரை மாதம் 13ம் நாள் 26.04.2020, #ஞாயிற்றுக்கிழமை முதல் சித்திரை மாதம் 20ம் நாள் 03.05.2020, ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ள கால அளவிலே இந்தியாவிலும் தமிழகத்திலும் #நடக்கவிருக்கும் நிகழ்வுகளை வார ஆசிநூலாக அகத்தியர் பெருமான் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் அகத்திய மகரிஷி. இவ்வுலகினில் தற்சமயம் உலகிற்கு வந்த பெரும் #கேடாக நச்சுக்கிருமி தாக்குதல் உண்டாகி அது உலகமெலாம் #பரவி உலகில் பேரிடராக மாறி உலகையே ஆட்டுவிக்கின்றது. அது உலகில் இருந்து #ஒழிக்கப்படவேண்டிய ஒரு #உலகப்பெருமாசாக ஆகி உள்ளது. ஆதலினால் உலக மக்களெல்லாம் #தவம் செய்வதுபோல் அவரவரும் அவரவர் இல்லத்தில் #உள்ளிருப்பு செய்யவேண்டிய சூழல் உருவாகி இருக்கின்றது. ஆதலினால் உலகமக்களே நீங்களெல்லாம் #கலகம் செய்யாமல் #மனிதநேயம் கருதி மக்களை காப்பதற்காக #அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு நச்சுக்கிருமி தாக்குதல் #நீங்கும் வரை #அமைதிபட இருந்து வாருங்கள். அச்சமயத்திலே நீங்கள் உறுதியுடன் நடந்து உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு எல்லா உயிர்களையும் #தம்முயிர் போல் எண்ணி ஜீவதயவுடன் நடந்து முருகப்பெருமானை வணங்கி வர பேரிடர் துன்பங்கள் இனி மேற்கொண்டு பரவாமல் நாடெங்கும் பரவுவது தடுக்கப்பட்டு நோய் #தொற்று முற்றிலும் விலகும். இப்படிப்பட்ட வகையிலே இந்திய மக்கள் #நடந்து வந்திட உலகினில் கிருமியினால் உண்டான இடர்களில் இருந்து #புண்ணியபூமியாகிய இந்திய தேசமும் #ஞானபூமியாகிய தமிழகமும் #முதலில் விடுபட்டு நன்மை பெறும். ஞானத்தலைவன் முருகப்பெருமானின் பெருமைமிக்க #வழிபாட்டை மக்களெல்லாம் செய்து #அன்னதானங்களை பரவலாய் செய்து வரவர இயற்கை பாதுகாப்பு அவர்களுக்கு உண்டாகும். #இயற்கையும் சாதகமான சூழ்நிலையை உண்டாக்கி மக்களுக்கு விரைந்து நல்ல மாற்றங்களை உண்டாக்கும். இயற்கையின் சாதகமான மாற்றங்களினால் நமது தேசத்தை பற்றியுள்ள #நச்சுக்கிருமி corona covid 19 – பேரிடரும் படிப்படியாய் விலகி #பூரண பாதுகாப்பை பெறும். இந்தியாவிலும் தமிழகத்திலும் #சூரியனின் வெப்பம் அதிகமாகி இந்திய தேசத்தின் #வெப்பநிலை உயர்ந்து மக்களுக்கு துன்பமில்லாமல் நோய் பரவலை கட்டுப்படுத்திடும். சூரியனின் வெப்பம் தணியும் காலத்தில் அதாவது ஜுலை மாதம் தொட்டு மக்களை அச்சுறுத்தி வரும் நச்சுக்கிருமி துன்பங்கள் எல்லாம் #பூரணமாக விலகி இந்தியாவும் தமிழகமும் பாதுகாப்புப் பெறும். உலகம் பேரிடர் கண்ட இந்த காலத்திலே உலகமெங்கும் உதவிகள் இந்தியா செய்து இந்தியாவும் தமிழகமும் பெரும்பேறும் நல்ல வளர்ச்சியும் காணும் எனக் கூறுகிறார் மகான் அகத்திய மகரிஷி.– சுபம் –YouTube: https://youtu.be/FBzj5rNYFfE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *