26.04.2020 மகான் அருணகிரிநாதர் தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் #அருணகிரிநாதர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
26.04.2020, #ஞாயிற்றுக்கிழமை

எங்கே #போகுது மானிட குலமே
எதனை #மறந்தது மானிட குலமே
#பங்கமுற கிருமிவழி துன்பம்
#பலி கூடமே கலியின் துன்பமாக

துன்பத்தை #விட்டு விலக வேண்டுமா
துன்பத்திலிருந்து #பாதுகாப்பு வேண்டுமா
இன்பம் தந்து அறம் #வேலியிட்டு
#ஏழாம் படைவீடு படைத்து காத்தருளும்

அருளும் #அரங்கஞானி வழிவர
அகிலத்தார் #பாதுகாப்பு உண்டெனக்கூறி
அருளுவேன் #தவபிரசன்ன ஆசி
அறிவிப்பேன் #சார்வரி தகரின் திங்கள்

திங்களிலே முன்னாகோர்திகதி #கதிர் வாரம்
(சார்வரி வருடம் #சித்திரை மாதம் 13ம் நாள், 26.04.2020 ஞாயிற்றுக்கிழமை)
தேசிகனும் #கேட்க அருணகிரிநாதர் யானும்
#பங்கமான துன்பமகல உரைப்பேன்
பாருலகை பற்றிய கிருமிவழி துன்பம்
(covid-19 #corona virus)

துன்பமதும் கலியுக #மக்கள்
தன்னலமுற #சுயநல அளவிலா
இன்பம் #தீவழி நடந்த குற்றம்
ஏமாற்றம் #பித்தலாட்டம் #கொலை #களவு

களவுடன் #காம விகாரங்கள்
#கன்னியர்கள் கற்புக்கு பங்கம்
அளவிலா பொருளாசை #மண்ணாசை
அதிகார #துஷ்பிரயோகம் வஞ்சம்

#வஞ்சம் சூழ்ச்சி #வக்ர கொடூரம்
#வரிச்சுமை #ஊழல் #கொள்ளை
#வஞ்சமுற மதவெறி கலக கேடு
வதை உயிர்கொலை #புலால் உண்ணல்

உண்ணலுடன் #சாதி மத #பேதம்
உண்மையிலா செயல் #வெறி
எண்ணம் #கூட்டி உலகமக்கள்
இறைவனை #மறந்து வந்ததாலே

வந்ததாலே #வல்லரசு பொல்லா அரசென
#வசைபாடி ஆதிக்கம் கொண்டதாலே
வந்ததே கிருமிவழி பேரிடர்
வதையென #தீவழி மக்கள் #மடிவர் என்பேன்

என்கவே இந்தநிலை விலக
#எல்லோர்க்கும் பாதுகாப்பு பெற
#சண்முகனார் வழிபாட்டை செய்து
#சடாட்சர சக்தி மிகு அரங்க ஞானி #வழி

வழிதனில் சைவ நெறி #ஏற்று
வணங்கி #வந்தாலே இடர்விலகி
#அழிவிலா பேருலகே பாதுகாப்புபெறும்
அறிவித்த தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம்

முருகப்பெருமான் துணை
மகான் அருணகிரிநாதர் அருளிய தவபிரசன்ன ஆசி நூலின் சாரம் :

உலக #மக்களே மானிட குலமே எங்கே போகின்றீர்கள், #செய்ய வேண்டிய தர்மங்களை செய்ய #மறந்து ஜீவதயவின்றி வாழ்ந்ததால் கலியின் துன்பமாக கிருமிவழியினால் ஆன #துன்பம் அதிகமாகி உலகினில் உயிர்பலி பெருகிடும். இப்படிப்பட்ட துன்பத்திலிருந்து பாதுகாப்பை பெற வேண்டுமா? வேண்டுமாயின் #அறவேலியிட்டு மக்களை காத்து அவர்கள் #மனமகிழ வாழ்வளித்து #ஏழாம்படைவீடாம் துறையூர் ஓங்காரக்குடிலினை அமைத்து அவர்களை #வழிநடத்தி காக்கின்ற அரங்க மகான் கூறும் உத்தம ஞான நெறியினை #கடைபிடித்து வர உலகோர்க்கு பாதுகாப்பு உண்டாகும் எனக் கூறியே உலக நலம் கருதி தவபிரசன்ன ஆசி நூல்தனையே சார்வரி வருடம் சித்திரை மாதம் 13ம் நாள் 26.04.2020 ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினமதனிலே அருணகிரிநாதர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் அருணகிரிநாதர்.

உலகினை உயிர்பலிக்கு #ஆளாக்கி மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் #கிருமி வழியினால் உண்டான துன்பம் அகல வேண்டுமாகின் #மார்க்கம் உரைக்கின்றேன். இந்த கலியுகத்தினிலே கலியுகமக்கள் #தன்னலமாய் நடந்துக்கொண்டதாலும் சுயநலத்தில் அளவிலாது நடந்து #சுயநலவாதிகளாகவும் இன்பமான வாழ்வை வாழ வேண்டுமென எண்ணி தீய வழிகளில் #சென்று தீய செயல்களை #செய்ததால் வந்த #குற்றங்கள் ஏமாற்றுதல், பித்தலாட்டம், கொலை, களவு, காமவிகாரங்கள், கன்னியர்கள் கற்ப்புக்கு பங்கம் விளைவித்தல் அளவில்லாத பொருளாசை கொண்டும் நிலத்தின் மேல் ஆசைகொண்டும் செயல்பட்ட தீவினையாலும் தமக்கு கிடைத்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வஞ்சித்து சூழ்ச்சி செய்து வக்ரமாய் கொடூரமாய் நடந்துக்கொண்ட கொடூர செயல்களால் #விளைந்த பாவங்களும் #ஊழல் செய்தல் கொள்ளை அடித்தல், மக்கள் மீது #வரிச்சுமையை அளவிலாது திணித்தல், மக்களிடையே பிளவு உண்டுபண்ணுமாறு மக்களிடையே #மதவெறியை உண்டுபண்ணுதல், மனித சமுதாயத்தினரிடையே #கலகங்களை உண்டாக்குதல், போன்ற வற்றால் விளைந்த பாவத்தாலும் பிற உயிர்களை #கொன்று அதன் புலாலை உண்ணுகின்ற உயிர்கொலை பாவத்தால் விளைந்த பாவத்தாலும் அவரவர் செய்கையின் #பயனால் சாதி மத பேதம் கொண்டு உண்மையிலாது நடந்து கலகம் விளைவித்தல் இறைவன் என்னும் #அற்புத சக்தியை மறந்து மனிதன் #தன்னை முழுமையாக நம்பியதாலும் தம்மிடம் உள்ள படைபலத்தினால் நானே #வல்லரசு நானே பொல்லாத அரசு என ஆதிக்க வெறியுடன் நடந்துக்கொண்டதாலே இந்த உலகினில் கிருமி வழி பேரிடர் பரவி மக்களை வதைக்கும் #தீயவழி சென்ற மக்கள் எல்லாம் கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாகி #மடிந்து போவார்கள் என்பேன் அருணகிரி யானுமே.

இந்தவிதமான துன்பநிலைகளெல்லாம் #விலக உலக மக்கள் எல்லாம் பாதுகாப்பை பெற வல்லமைமிக்க முருகப்பெருமானின் #பூஜைகளை செய்து முருகப்பெருமானின் ஆற்றல்மிக்க அரங்க ஞானியை #குருவாய் ஏற்றுக்கொண்ட அரங்க ஞானி கூறுகின்ற தூய நெறியில் சென்று #சைவ நெறியை ஏற்று ஞானிகளை வணங்கி வந்தாலே போதுமப்பா உலகை பற்றியுள்ள இடர்களெல்லாம் விலகி அழிவில்லாத பேருலகமாக அருள்பாதுகாப்பை பெற்றிடும் எனக் கூறுகிறார் மகான் அருணகிரிநாதர்.
– சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *