25.04.2020 மகான் அம்பிகானந்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் #அம்பிகானந்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
25.04.2020, சனிக்கிழமை

ஓங்கார #தவம் நிறைந்த அரங்கனே
ஓங்காரன் ஆசிபட #அவதரித்த
ஓங்கார ஞானியே ஞான #தேசிகனே
உன் தவபலம் #மெச்சி இனிதே

இனிதே சார்வரி #தகரின் திங்கள்
இயம்பிட விய #திகதி காரி வாரம்
கனிவுபட #தவபிரசன்ன ஆசியை
(சார்வரி வருடம் #சித்திரை மாதம் 12ம் நாள், 25.04.2020 சனிக்கிழமை)
கண்டுரைப்பேன் அம்பிகானந்தர் யானும்

யானும் #உலகநலம் வேண்டியே
#உலகமாற்றம் செய்ய வேண்டி
ஞானவானாக வந்த #நல்ஞானி
ஞானவழிகளின் பலம் உரைப்பேன்

#உரைக்கவே உயிர்களை காக்கும்
உன்னதமான #சன்மார்க்க நெறி
#மறைகட்கு மேலான நெறியாகும்
மக்களை #நன்னெறி படுத்தவல்ல

வல்லமையான #அன்னதான மெனும்
#வறுமை வெல்லும் #அறநெறி
இல்லாமை போக்கி உலகினில்
எல்லோர்க்கும் #வளம் சேர்க்கும் நெறி ஆகும்

ஆகவே அரங்க ஞானி வழியை
#அகிலத்தார் பின்பற்றி வர
#மகான் பெற்ற தவபலத்தை
மக்களெல்லாம் #பெற்று சிறப்பர்

சிறப்புதரும் ஆன்மீக #ஞானவழி
#செந்தூரான் ஆசிபட தழைக்க
மறுப்பின்றி #ஏற்கும் தேசங்கள்
மகத்துவம் கூடிநிலை உயரும்

உயர்வான #அருளமுதாக தரும்
உணவாம் அரங்கன் #குடிலமுது
தயவாக முருகப்பெருமான் #அருளி
தரணியோர்க்கு #சக்தியாக வர

வருகவே அருளமுது உண்டு
வழிபாட்டை அரங்கஞானி #வழி
முருகப்பெருமான் #உயர் வழிபாடாக
முழுமைபட சரணடைந்து வருக

வருகவே மக்களுக்கு #பாதுகாப்பு
வல்லமைபட பேரிடர் #வந்தாலும்
முருகப் பெருமான் #அருளாலும்
முழுமைபட செய்யும் #தருமத்தாலும்

தருமத்தாலும் #விலகி பாதுகாப்பு
தரணியோர் #கண்டு சிறப்பர்
பெருமைபட ஞானவழிக்கு #வர
பேருலகம் #ஞானஉலகம் ஆகும்
தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம்

முருகப்பெருமான் துணை
மகான் அம்பிகானந்தர் அருளிய தவபிரசன்ன ஆசி நூலின் சாரம்:

முருகப்பெருமானின் மீது #எல்லையில்லாது தவம் செய்து #முழுமையான ஆசி பெற்ற அரங்கனே முருகப்பெருமானின் ஆசிபட #இப்பூஉலகில் முருகப்பெருமானின் அவதாரமாக #வந்துதித்த ஓங்கார ஞானியே ஞானதேசிகனே உமது தவ பலத்தை மெச்சி சார்வரி வருடம் சித்திரை மாதம் 12ம் நாள், 25.04.2020 சனிக்கிழமையாகிய இன்றைய தினமதிலே தவபிரசன்ன ஆசி நூல்தனையே அம்பிகானந்தர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் அம்பிகானந்தர்.

#உலகமாற்றம் செய்திட வேண்டியே ஞானவானாக எல்லையில்லாது #ஆற்றலுடைய நல்ஞானியாக வந்துதித்த ஆறுமுக அரங்கமகா தேசிகர் உலகோருக்கு அருளிய ஞானவழிகளின் #வல்லமைகளை உரைக்கின்றேன் #அரங்கர் அளித்த #தூயஞானநெறியானது உயிர்களை காக்கும் உன்னதமான சன்மார்க்க நெறியாகும். மக்களை நன்நெறியில் செலுத்தி #நன்மக்களாக ஆக்க செய்திடும் அரங்கர் செய்யும் வல்லமைமிக்க #அன்னதானம் என்கின்ற தர்மத்தின் சக்தியானது #வறுமையை வெல்லும் அறநெறியாகி உலகினில் மக்களிடையே இல்லாமை என்கின்ற ஏழ்மையை போக்கி உலகினில் அனைவருக்கும் வளம் #சேர்க்கும் அற்புத நெறியாகும்.

ஆதலினால் அரங்கமகா தேசிகர் கூறும் தூய ஞானநெறிக் கொள்கைகளை #உலகமக்களெல்லாம் ஏற்று #கடைபிடித்து வரவர மகான் அரங்கன் பெற்ற தவபலத்தினை #பின்பற்றும் மக்களெல்லாம் பெற்று சிறப்படைவார்கள். எல்லாவிதமான சிறப்புகளையும் தருகின்ற #ஆன்மீக ஞானவழியாம் தூய ஞானநெறிக் #கொள்கைகள் தன்னை ஏற்கின்ற தேசங்களெல்லாம் முருகப்பெருமானின் ஆசியை பெற்று தழைக்கும். அவைகளெல்லாம் #மகத்துவம் பெருகி நிலை உயர்வடையும். ஆறுமுக அரங்கர் ஞானிகளை பூஜித்து அருளமுதாக வழங்கப்படுகின்ற குடில் #உணவினை முருகப்பெருமானே #பெரும் தயவுடன் உலகமக்களுக்கு அருளுகின்ற அமுதமாகும். ஆகவே குடிலிலே சமைக்கப் படுகின்ற உணவினை #உண்டு ஆறுமுக அரங்கமகாதேசிகரிடத்து #உபதேசத்தினை பெற்று அரங்க மகானின் #அருளாசிகளோடு முருகப்பெருமானின் திருவடிகளை வணங்கி முருகப்பெருமானின் திருவடிகளிலே முழுமையாக சரணாகதியாக #சரணடைந்து வழிபாடுகளை செய்து வர வருகின்ற மக்களுக்கு ஞானிகளின் அருள் பாதுகாப்பு கிடைத்து இவ்வுலகினில் பெரும் அழிவை உண்டாக்கக் கூடிய #பேரிடர்கள் வந்தாலும் முருகப்பெருமான் அருளாலும் #முழுமனதோடு அவர்கள் செய்த தர்மத்தாலும் அந்த வித பேரிடர்களெல்லாம் விலகி ஞானிகள் #ஆசியோடு அருள் பாதுகாப்பை பெற்று சிறப்படைவார்கள். மக்களெல்லாம் பெருமைமிக்க இவ்வித ஞானவழிக்கு வர இந்த #பேருலகம் ஞான உலகமாக ஆகிவிடும் எனக் கூறுகிறார் மகான் அம்பிகானந்தர்.
– சுபம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *