24.04.2020 மகான் அநுமான் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

#முருகப்பெருமான் துணை #அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி #தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மகான் #அநுமான் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல் #சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed., 24.04.2020, வெள்ளிக்கிழமை அன்புடன் #அறம்மிகுந்த தவசியே அரங்கனே ஆறுமுகனாய் #வந்த ஐயனே #துன்பமிலா வாழ்வு மக்களுக்கருள தேசிகனாக #வந்த தவராசனே #ராசனே உன் தவபலம் மெச்சி உரைப்பேன் #அருள்மிக்க அரங்கனுக்கு நேசமுடன் #தவபிரசன்ன ஆசி நிலமதனில் சார்வரி தகரின் திங்கள் திங்களிலே லாபதிகதி #புகர் வாரம் (சார்வரி வருடம் சித்திரை மாதம் 11ம் நாள், 24.04.2020 #வெள்ளிக்கிழமை) தேசிகனுக்கு அநுமான் யானும் #ஓங்கார உலகம் அமைய உரைப்பேன் ஓங்கார #குடில் அமைத்த ஞானியே ஞானியே மக்களை #காத்திடநீ ஞானமெனும் #அட்சய_பாத்திரம் #ஞானபண்டிதன் தயவால் கொண்டு ஞானமருளிவரும் #மாதவசியே தவமெனும் #உன்சக்தி யெல்லாம் #தருமமாக மண்ணில் பரவ #புவனத்தார் உன்னை வணங்கி புண்ணிய #வழிகளை ஏற்றுவர வருகவே அரங்கமகான் நீ வந்த #நோக்கம் ஆகவே தருமபலம் எங்கும் #மிகுந்து தரணி எங்கிலும் தயவு #சிறந்து சிறந்துமே முருகப்பெருமான் அருளாக சிறப்பான உலக வெளிப்பாடாக #பரந்த உலகே ஞான உலகமாகும் பணிந்து சன்மார்க்க நெறியை நெறியை #உண்மை ஆன்மீகமாக ஞானமாக ஏற்று மக்கள் #வறுமை வெல்ல தொடர்ந்து வர வணங்கி #குருவாய் ஏற்றுவர வருகவே எந்தவித கட்டமான #வைரசு கிருமி அழிவும் ஆன பேரிடர்கள் அனைத்தும் விலகி பேருலகமே #பாதுகாப்பு அமைதிகாணும் காணவே கலியுக #மக்கள் #கட்டளையாக வரும் #தனிமைப்படுத்தலை ஞானமாக #தவமாக எண்ணி #நம்பகம் கொண்டு கடைபிடித்து #கடைபிடித்து #சைவநெறி முறையை கணக்காய் மக்கள் #ஏற்று தடைவெல்லும் அரங்கஞானி வழி தட்டாது வர #உயிர்பாதுகாப்பு பெறுவர் தவபிரசன்ன ஆசி முற்றே – சுபம் – முருகப்பெருமான் துணை மகான் அநுமான் அருளிய தவபிரசன்ன ஆசி நூலின் சாரம் : #அன்பும் #அறமும் மிக்க மகாதவசியே ஆறுமுக அரங்கனே முருகப்பெருமானின் #அவதாரமாக வந்து உதித்த ஐயனே கலியுகத்தினில் #வாடுகின்ற மக்களின் துன்பங்களை #நீக்கி அவர்களுக்கு துன்பமில்லாத #நல்வாழ்வை அளித்திட வேண்டி அரங்கமகா தேசிகராக முருகப்பெருமானின் அவதாரமாக வந்துதித்த தவராசனே அரங்கமகா தேசிகனே அற்புதமான உமது தவபலத்தை மெச்சி உலகமெலாம் கூறியே உலக நலம் கருதி அருள்மிக்க அரங்கனுக்கு அநுமான் யானும் இவ்வுலகினில் முருகப்பெருமானின் #ஞான உலகம் அமைய வேண்டி #தவபிரசன்ன ஆசி நூல்தனை சார்வரி வருடம் சித்திரை மாதம் 11ம் நாள் 24.04.2020 வெள்ளிக்கிழமையான இன்றைய தினமதனிலே உரைக்கின்றேன் என்கிறார் மகான் அநுமான். உலகமக்களை #காத்தருள வேண்டி #ஏழாம்படைவீடாய் துறையூர் ஓங்காரக்குடிலமைத்த #ஓங்கார ஞானியே உலகமக்களை காக்க #ஞானம் என்கிற அள்ள #அள்ள குறையாத #அட்சய பாத்திரத்தை முருகப்பெருமான் தயவால் உலக மக்களுக்கு ஞானமாக #அருளி வருகின்ற ஆறுமுக அரங்கனே மகாதவசியே தாம் பல்வேறு ஜென்மங்களில் செய்திட்ட தவத்தின் #பயனை எல்லாம் இந்த ஜென்மத்திலே தர்மபலமாக #மாற்றி உலகமக்களுக்கு அருளி #காத்து வர உலகமக்களெல்லாம் உத்தம ஞானி உம்மை #வணங்கி தாம் கூறும் #உபதேச புண்ணிய வழிகளை ஏற்று #கடைபிடித்து வர உலகமெங்கும் #தர்மபலம் பெருகி அரங்கமகான் தாம் வந்த அவதார நோக்கம் நிறைவேறி உலகமெங்கும் தயவு உணர்வு பெருகி முருகபெருமானின் அருளினால் முருகப்பெருமான் #தாமே நேரில் தோன்றி #உலகவெளிப்பாடாக வெளிப்பட்டு யுகமாற்றம் நிகழ்த்தி இந்த பரந்த உலகமே #ஞான உலகமாகும். உலகமக்களெல்லாம் அரங்கன் உபதேசித்து அருளிய #சன்மார்க்க நெறியை #உண்மை_ஆன்மீக நெறியாக ஞானமாக ஏற்று கடைப்பிடித்து வருவதுடன் அரங்கமகானை குருவாக ஏற்றுக் கொண்டு #பின்தொடர்ந்து வர உலகைப்பற்றிய வறுமைத் துன்பம் விலகும் உலகினில் #தற்சமயம் உயிர்பலிகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்ற வைரஸ் கிருமிகளினால் #உண்டாகும் பேரிடர்களை அனைத்தும் விலகி இந்த பேருலகமே முருகப்பெருமானின் அருள் பாதுகாப்பை பெறும் உலகமே #அமைதி பெறும். உலகமக்கள் அரசின் #கட்டளையாக வருகின்ற தனிமைப்படுத்துதலை அவரவரும் #விரும்பி ஏற்று தனிமை சூழ்நிலையை #ஞானமாக தவமாக ஏற்று நம்பிக்கையோடு கடைப்பிடித்து உயிர்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த #சைவ நெறியை ஏற்றுக்கொண்டு அரங்க மகானின் #தூய நெறிகளின் வழி சென்று அரங்கனை பின் தொடர அவரவரும் உயிர் பாதுகாப்பினை பெறுவார்கள் எனக் கூறுகிறார் மகான் அநுமான். – சுபம்

Youtube: https://youtu.be/Ayo91FRVIT4


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *