23.04.2020 மகான் அத்திரிமகரிஷி தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் #அத்திரிமகரிஷி அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
23.04.2020, வியாழக்கிழமை

#தவராசனே கலியுக தருமனே
#தரணி வென்று #காத்தருள
#அவதாரம் புரிந்த அரங்கனே
அகிலமதில் உன் #தவபலம் மெச்சி

மெச்சியே #தவபிரசன்ன ஆசி
மொழிகுவேன் #சார்வரி தகர் திங்கள்
#அச்சமற தசதிகதி குரு வாரம்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 10ம் நாள், 23.04.2020 வியாழக்கிழமை)
#அருளுவேன் அத்திரிமகரிஷி யானும்

யானும் உலகநலம்பெற #உரைப்பேன்
#உயர்வாக உலகை மாற்றவே
#ஞானம் அருளி அவதாரமாக
#ஞானபண்டிதன் சக்தியாக வந்தநல்

வந்தநல் ஞானியே வள்ளலே
#வல்லமைபெற உன் நாமசெபம்
#சிந்தைவைத்து மக்களெல்லாம் வர
#சிறப்பறிவு கண்டு தெளிவர்

#தெளிவு தரும் அரங்கன் திருவடி
#தேடி வந்து பணிந்து உலகோர்
#அழியாமை பெற உண்டான ஞானமதை
#ஆசி தீட்சையாக அரங்கனிடம் பெற்று

பெற்றுமே தவமாகத் #தொடர
#பிசகில்லா தருமவழியை கடைபிடிக்க
உற்றதொரு உலகம் #எங்கிலும்
உயர்வாக தருமம் பெருகியே

பெருகியே எங்கும் #பாதுகாப்பு
#பேராசான் அரங்கன் தயவால்
உறுதியாகும் #தென்னகம் தொட்டு
உலகமெங்கிலும் #வாய்க்க நேரும்

#நேருமையிலா சூழல் மிகுந்து
நடப்பில் நிலவுலகே கலிதுன்பமாக
#கிருமிவழி பேரிடர் அல்லல்
#குவலயமெங்கும் உயிர்பலி மிகுந்து

மிகுந்துமே உலக #மக்களுக்கு
மனதுள்ளே #எமபயம் பெருக
தகுந்த #அவுசதம் காப்பு இல்லா
#தரணியோர் அழிவுமிக கண்டுவர

வருகின்ற இந்த சிக்கலான நிலை
வளராது #சடுதி முடிவு காண
கிருமிவழி #பேரழிவு அகல
குவலயத்தார் ஞானியர் #காட்டும்

காட்டும் சன்மார்க்க #நெறிஏற்று
#கந்தவேலன் வழிபாடு செய்து
#வாட்டமற #அன்னதான சேவைபெருக்க
வடிவேலன் #அருளால் பாதுகாப்பான உலகாக மாறும்
தவபிரசன்ன ஆசிமுற்றே
– சுபம்

முருகப்பெருமான் துணை
மகான் அத்திரிமகரிஷி அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

#தவசித்தி பெற்ற தவராசனே #எல்லையில்லா தர்மங்களை செய்திட்ட கலியுக தர்மனே இவ்வுலகை கலியுகத்தினில் இருந்து #வென்று மக்களை காக்கவே இவ்வுலகினில் முருகப்பெருமானின் அவதாரமாக #அவதரித்திட்ட ஆறுமுக அரங்கனே இவ்வுலகினில் அற்புதமிக்க உன் தவபலத்தை #மெச்சி உலகமெல்லாம் உன் பெருமைகூறி உலக நலம் கருதி சார்வரி வருடம் சித்திரை மாதம் 10ம் நாள், 23.04.2020 வியாழக்கிழமையான இன்றைய தினமதனிலே அத்திரிமகரிஷி யானும் தவபிரசன்ன ஆசி நூல்தனையே உரைக்கின்றேன் என்கிறார் மாகன் அத்திரிமகரிஷி.

இந்த உலகத்தினை மேம்பட்ட #நல்லுகமாக மாற்றிடவே உலகோருக்கு ஞானத்தினை அருளி முருகபெருமானின் அவதாரமாக முருகப்பெருமானின் #சக்திவடிவமாக இவ்வுலகினில் அவதரித்திட்ட மகா ஞானியே எல்லையிலா #தர்மம் செய்கின்ற #வள்ளலே, ஆறுமுக அரங்கமகா தேசிகரே அவரவரும் #வல்லமைகளை பெறவேண்டுமாயின் அரங்கரே அற்புதமான உமது #நாமஜெபங்களை ஜெபித்து வந்தாலே போதுமப்பா அவர்களுடைய சிந்தை #தெளிவடைந்து சிறப்பறிவினைப் பெற்று உயர்வடைவர்.

அத்தகைய #உயர்ஞானம் அருளும் அரங்கரின் #திருவடிகளை அவரவரும் தேடி வந்து பயபக்தியுடன் பனிந்து வணங்கி ஆசிதீட்சை உபதேசத்தினை பெற்று அழியாமை பெற #மார்க்கமாகிய அழிவிலாமை ஞானத்தை தருகின்ற #அருளுபதேசங்களை அரங்கரிடத்து உபதேசமாக பெற்று அத்தகைய ஞானமதை #வைராக்கியத்தோடு தவமாக கடைப்பிடித்து வருவதுடன் #புண்ணியம் பெருக்கும் தர்மத்தின் வழிதனை கடைப்பிடித்தும் வரவேண்டும். உலகமெங்கும் இவ்விதமே #மக்களெல்லாம் தர்மங்கள் #செய்திட உலகமெங்கிலும் தர்மம் பெருகி #தர்மபலம் பெருகி உலகமெங்கும் ஆறுமுக அரங்கர் தயவால் ஞானிகளின் #அருள்_பாதுகாப்பு பெருகி நிற்கும். இத்தகைய #சூழ்நிலைகள் ஞானபூமியாம் #தமிழகத்திலிருந்து துவங்கி படிப்படியாக #பாரததேசம் எங்கும் பரவி பின் #உலகெங்கிலும் பரவி உலகமே தர்மபூமியாக ஆகின்ற வாய்ப்பை பெறும்.

ஆனால் தற்சமயம் உலகினில் மக்களிடையே #நேர்மையற்ற சூழ்நிலை மிகுதியாகக் காணப்படுவதால் கலியுகத் துன்பம் மிகுந்து கலியுகத் #துன்பமானது நச்சிக்கிருமிகள் #மூலமாக உலகமெங்கும் பரவி உலகினை அச்சுறுத்தி வருகின்றது மரணத்தை #உண்டாக்கி மக்களை துன்புறுத்துகிறது. உலகமெங்கும் உயிர்பலி #அதிகமாகி வருகிறது. உலகமக்களுக்கு மனதுள்ளே மரண #பயம் பெருகி நிற்கின்றது. கிருமி தாக்குதலுக்கு உள்ளானால் காப்பாற்ற தக்க #மருந்துகள் இல்லாததால் உயிர் பாதுகாப்பு #இல்லாத நிலை உண்டாகி உலக மக்கள் அதிகமாக உயிர்பலியாகி வருகின்றனர்.

இப்படிப்பட்ட இந்த சிக்கலான சூழ்நிலை இனிமேலும் உலகினில் அதிகமாகாமல் #விரைந்து ஒரு முடிவிற்கு வர உலகினில் உள்ள கிருமிதாக்குதல் உலகைவிட்டு #அகல உலக மக்களெல்லாம் மரணத்தை வென்ற #ஞானியர்கள் காட்டும் #சன்மார்க்க நெறியை ஏற்று ஞானத்திற்கு தலைவனான முருகப்பெருமானை #வழிபாடுகள் செய்து மரணத்தையும் வெல்லும் வல்லமையை தருகின்ற ஜீவதயவாகிய அன்னதானத்தினை #அதிகமாக உலகமக்களுக்கு செய்தும் வர முருகப்பெருமானின் தயவினை இவ்வுலகம் பெற்று அருள் பாதுகாப்பைப் பெற்ற உலகமாக மாறிடும் எனக் கூறுகிறார் மகான் அத்திரிமகரிஷி.
– சுபம்
YouTube: https://youtu.be/uCIhtY1pnBo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *