23.03.2020 மகான் வாயிலார் நாயனார் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்சோதி
#மகான் #வாயிலார் #நாயனார் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T . ராஜேந்திரன் , M . A . , B . Ed . ,
23.03.2020, திங்கட்கிழமை

அன்னதான வள்ளலே அரங்கா
ஆறுமுக சக்தியே ஞான தேசிகா
அண்ணலே உன் பெருமை கூறி
அகிலமதில் விகாரி சேலின் திங்கள்

திங்களிலே தசதிகதி சோம வாரம்
(விகாரி வருடம் பங்குனி மாதம் 10ம் நாள், 23.03.2020, திங்கட்கிழமை)
தேசிகனுக்கு அருள் பிரசன்ன ஆசி
இங்கனமே வாயிலார் நாயனாரும்
இயம்பிடுவேன் உலகோர் நலம்பெற

நலம்பெற அரங்கமகா ஞானி
ஞானமாகத் தருகின்ற வழிகளாம்
பலம்மிக்க சன்மார்க்க நெறியை
பாருலகோர் ஏற்று தொடர்ந்துவர

வருகவே வளமானச் சூழலும்
வல்லமையான பாதுகாப்பும் கூடி
தருமசிந்தை பெருகி மக்களிடை
தனித்துவம் சர்வபலமும் காண்கும்

காண்கவே கலியிடர்களாக வரும்
கண்டம் பிணி சோடைகளெல்லாம்
ஆன்மீக உண்மை நெறி காட்டும்
அரங்கமகான் வழிக்கு வர அகலும்

அகலும் அழிவைத் தருகின்ற
ஆக்கினை #நச்சுக்கிருமிகள் தொல்லை
வகைபடா #உயிர்ப்பலி அல்லலும்
வறுமை துன்பங்கள் அனைத்தும்

அனைத்துமே ஆறுமுகனார் வழிபாடு
அரங்கன் குடில் அணுகி செய்துவர
அனைத்துமே அகன்றுமே மாற்றம்
அகிலமே பாதுகாப்பான நிலை பெறும்

நிலைத்தன்மை மக்கள் அடைய
நிலவுலகில் முருகப்பெருமானின்
பலமான சக்தியாக வந்தநல்
பரமானந்த சிவராஜ குரு அரங்கனை

அரங்கனை அணுகி உலகமக்கள்
ஆற்றல்மிகு #சடாட்சர_தீட்சை
வரங்களென மக்கள் பெற்று
வழுவாது திங்கள் தோறும் பூசை கலந்து

கலந்து நித்ய செபதபமாக
கணக்காய் செய்து வருதலுற
கலந்து அரங்கன் தருமத்தை
கலியுகத்தில் வளர்த்து வருக

வருகவே மக்களிடை நிலைத்தன்மை
வந்தடையும் பூரண ஞானபலம்
முருகப்பெருமான் துணைபட உலகை
முழுமையான ஞானயுகம் ஆகும்

அருள் பிரசன்ன ஆசி முற்றே .
– சுபம்

முருகப்பெருமான் துணை

மகான் வாயிலார் நாயனார் அருளிய நித்ய பிரசன்ன #ஆசி #நூலின் #சாரம்:

அளவிலாது அன்னதானத்தினை #தடையின்றி தொடர்ந்து செய்யும் அன்னதான வள்ளலே ஆறுமுக அரங்கமகா தேசிகா முருகப்பெருமானின் சக்தி வடிவமே, ஞானதேசிகனே, #அண்ணலே, அரங்கமகா தேசிகரே, அற்புதமான உமது பெருமைகளை உலகறியக் கூறியே உலக நலம் கருதி காரி வருடம் பங்குனி மாதம் 10ம் நாள் 23.03.2020, திங்கட்கிழமையான இன்றைய தினமதனிலே அருள் பிரசன்ன ஆசி நூல்தனையே வாயிலார் நாயனார் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் வாயிலார் நாயனார் .

யுகமாற்றத் தலைவன் ஆறுமுக அரங்கமகா ஞானியர் ஞானமாக உலக மக்களுக்கு #தருகின்ற தூயநெறிமுறைகளாம் பலம்மிக்க சன்மார்க்க #நெறிகளை உலகோர் ஏற்றுக் கொண்டு வாழ்வில் கடைப்பிடித்து வரவர, வளமான #சூழல் உருவாகிடும் வல்லமைமிக்க அருள் #பாதுகாப்பு பெருகி மக்களுக்கு தருமசிந்தையும் பெருகி தர்மங்களை செய்வார்கள், மக்களிடையே #தனித்துவம் வெளிப்பட்டு சர்வபலத்தினை இந்த உலக சமுதாயம் பெறும்.

கலியுகத்தின் கொடும் துன்பங்களான மரண #கண்டங்களும், #நோய்களும், நோய் துன்பங்களும் உண்மை ஆன்மீக நெறியினை உலகிற்கு அளிக்கின்ற அரங்கரின் தூயநெறிகளின் வழியில் வந்து கடைப்பிடிக்க துன்பமெல்லாம் அகன்று ஓடும்.

உலகினில் அழிவைத் தந்து கொண்டிருக்கின்ற நச்சுக்கிருமிகளின் #தொல்லை நீங்கும் உயிர்ப்பலிகள் இனி ஏற்படாது வறுமை நீங்கும், மக்களின் துன்பங்களெல்லாம் மக்களை விட்டு அகலும், மக்களெல்லாம் #துறையூர் ஓங்காரக்குலினை அணுகி, ஆங்கே முருகப்பெருமானார் வழிபாடுகளை செய்து வர, உலகினில் உள்ள அனைத்து தீய செயல்களும் அகன்று விரைந்து மாற்றங்கள் உண்டாகி உலகமே பாதுகாப்பான நிலையை அடையும்.

என்றும் மாறாத #நிலையான_வாழ்வினை மக்களெல்லாம் அடைந்திட இவ்வுலகினில் முருகப்பெருமானின் பலம்மிக்க சக்தியாக #அவதரித்துள்ள ஆறுமுக அரங்கமகா தேசிகனாரை அணுகி அண்ணல் அரங்கரிடத்து #தீட்சை உபதேசம் அடைந்து தவறாமல் குடிலில் நடக்கின்ற பௌர்ணமி ஞானியர் சிறப்பு வழிபாடுகளிலே கலந்து ஆசி பெறுவதோடு தினம்தினம் மறவாமல் ஞானிகளை பூஜைகள் செய்து வருவதுடன், ஆறுமுக அரங்கமகானின் அன்னதானப் பணிகளுக்கு #பொருளுதவிகள் செய்து அரங்கரின் தருமத்தை #வளர்த்து வர, மக்களின் வாழ்வு நிலைத்தன்மை உடையதாக ஆகி, #ஞானபலம் பெற்று மரணமிலாப் பெருவாழ்வினை பெறும் வாய்ப்பினை பெற்று முருகப்பெருமானின் ஆசிகளுடன் இவ்வுலகம் முழுமையான ஞானயுகமாக மாறிடும் எனக் கூறுகிறார் மகான் வாயிலார் நாயனார் .

– சுபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *