22.07.2020 மகான் பரமானந்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

 முருகப்பெருமான் துணை

மகான் பரமானந்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல் சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed., 22.07.2020, புதன்கிழமை சரவணச் சுடரே ஆறுமுகா சற்குருவாய் கலியுகம் தன்னில் ஆறுமுக அரங்கனாக வந்த முருகா அகிலமதில் உன்தவபலம் மெச்சி மெச்சியே தவபிரசன்ன ஆசி மொழிகுவேன் சார்வரி நள்ளி திங்கள் அச்சமற #சப்தமதிகதி புந்தி வாரம் (சார்வரி வருடம் ஆடி மாதம் 7ம் நாள், 22.07.2020 புதன்கிழமை) அறிவிப்பேன் #பரமானந்தர் யானும் யானும் உலகநலமுற உரைப்பேன் உயர்வான #தருமவழி காட்டும் ஞான தேசிகன் சன்மார்க்க நெறியை நம்பிக்கை கொண்டு உலகமக்கள் வர வருகவே யாவர்க்கும் #பாதுகாப்பு வரமாக கலியுகத்தில் கிட்டும் தரும வழிகளை மக்கள் ஏற்று தானதருமம் மிகுதி செய்து வர வருகவே வையகம் எங்கிலும் வல்லமையான தருமபலம் பெருகி பெருமைபட கலியுகம் தானும் பேராசன் தலைமையில் ஞானயுகமாகும் ஆகவே அருட் தொண்டர்களாம் அரங்க ஞானி சீடர் பெருமக்கள் யுகமாற்ற உயர் சேவை தன்னில் உயர் பங்களிப்பு செய்து நன்கு செய்துமே உலகளாவிய சேவையை சிறப்பான அறம் தருமமாக மெய்ஞான சுத்த நெறிமுறையோடு மேலான தயவை பெருக்கி வர வருகின்ற இந்த மகா சேவை வளர உலகெங்கிலும் பரவ ஆறுமுகப் பெருமான் வெளிப்பாடு அவசியமாகி உலகமெங்கிலும் மாற்றம் மாற்றம் மக்களை காக்க வல்ல மகத்துவமிக்க மாற்றம் ஆகி ஆற்றல்பட பாதுகாப்பு பெருகும் அனுகிய பேரிடர் துன்பம் விலகி விலகியே உலகம் எங்கிலும் வேலவன் சக்தி பரவிட கலகம் துன்பம் எதிர்மறையான கண்ணியமிலா செயல்முறைகள் யாவும் யாவும் விலகி எங்கும் தருமம் எதிலும் நீதி நேர்மை குன்றா அவனி ஞான ஆட்சியை பெறும் அறிவித்த தவபிரசன்ன ஆசி முற்றே – சுபம்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *