22.04.2020 மகான் அசுவினித்தேவர் தவ பிரச்சினை ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் அசுவினித்தேவர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
22.04.2020, புதன்கிழமை

#தயவு கொண்டு கலியில்
#தவசியாக வந்த அரங்கனே
நேயமுடன் மக்களை #நோக்கி
#நீதி வழிகாட்டும் தேசிகனே

தேசிகனே உன் #தவபலம் மெச்சி
தெரிவிப்பேன் #தவபிரசன்ன ஆசி
ஆசிபட #சார்வரி தகரின் திங்கள்
அறிவிக்க நவதிகதி புந்தி வாரம்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 9ம் நாள், 22.04.2020 புதன்கிழமை)

வாரமதில் #அசுவினித்தேவர் யானும்
வழங்குவேன் #உலகோர் நலம்பெற
சோரமில்லா நல்லுலகம் அமைய
சுத்த #சைவ நெறி #ஏற்று வர

வருகவே #மக்களிடை பக்குவமும்
#வளர்ச்சிக்கான செயல் வேகமும்
#குருமார்க்கம் வர ஏற்படக்கூடும்
#குருவரங்கன் ஞானவழிகள் தனை

தன்னிலே #மறையாக ஏற்று
#தவமாக எண்ணி அரங்கன் காட்டும்
#அன்னதானம் சேவை கலந்து
அகிலத்தார் #பொருளுதவி செய்து

செய்துமே #சீடர்களுமாகி இனிதே
சேவை #ஆற்றித் தொடரவே
#மெய்ஞான பலம் அடைந்துமே
மக்களெல்லாம் #ஞானவான்கள் ஆவர்

ஆவரே அரங்கன் #தேடுகின்ற
ஆறுமுகனார் #ஆசி பெற்றவர்களாக
#புவனம் மாற்றம் செய்ய வல்ல
#புதுமையானவர்களாக #புண்ணியவான்களுமாக

ஆகவே சிறந்து #நன்கு
#அரங்கன் வழி #அற்புதம் புரிவர்
#செகம் எங்கும் அரங்கமகான்
சேவைவழி நடைமுறைகளாக

ஆகவே மக்களிடை #தயவு
அளவிலா #பெருகி உலகமே
மிகைப்பட #தருமபலமிக்க பூமியாக
முன்னேறி #அதிசயம் நடக்கும்

நடக்கவே இனியும் தாமதிக்கா
#ஞானதேசிகன் வாழும் குடிலை
#தடையற அனுகி வந்துமே
#தவபலம் தரும் #தீட்சை ஏற்று

#ஏற்றுமே ஆறுமுகனார் வழிபாட்டை
#இடைவிடா தொடர்ந்து செய்ய
#பற்றிய சகல துன்பங்களும்
#விலகி பாதுகாப்பு மிக்க நல்லுலகமாக மாறும்
தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம் –

முருகப்பெருமான் துணை
மகான் அசுவினித்தேவர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

உலக மக்கள்பால் #தாயினும் மிக்க தயவுகொண்டு அவர்களை கலியுகத் துன்பத்திலிருந்து #மீட்க மகா தவசியாக #வந்துதித்த மகா தேசிகரே அன்புடன் மக்களை நோக்கி அவர்கள் #நல்வாழ்வு வாழ #நீதி வழிகாட்டும் ஞானதேசிகரே #வல்லமைமிக்க #உன்தவபலம் மெச்சி உலக நலன் கருதி சார்வரி வருடம் சித்திரை மாதம் 9ம் நாள், 22.04.2020 புதன்கிழமையான இன்றைய தினமதனிலே தவ பிரசன்ன ஆசி நூல் தனையே #அசுவினித்தேவர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் அசுவினித்தேவர்.

#குற்றமற்ற நல்லுலகத்தினை இவ்வுலகினில் #அமைந்திட உலகமக்கள் எல்லாம் #உயிர்கொலை தவிர்த்து #புலால் மறுத்து சுத்த #சைவ உணவை மேற்கொண்டு சுத்த சைவ #நெறியை கடைப்பிடித்து வர வேண்டும். உலகமக்கள் சுத்த சைவ நெறியினில் வரவர மக்களிடையே #பக்குவம் அதிகமாகி அவர்களது முன்னேற்றத்துக்கான #செயல்வேகமும் ஆறுமுக அரங்கமகா தேசிகர் மூலமாக ஏற்படும்.

#குரு ஆறுமுக அரங்கமகா தேசிகரின் #உண்மை ஞான வழிகளை உலகமக்கள் #வேதங்களாக ஏற்று தூய நெறிகளை கடைப்பிடிப்பதை #தவமாக செய்து ஆறுமுக அரங்கர் காட்டும் தானநெறியாம் #அன்னதானத் தொண்டினிலே கலந்து அன்னதானப் பணிகள் #வளர தர்மத்திற்கு #பொருளுதவிகள் செய்து #தொண்டுகள் செய்து ஆறுமுக அரங்கரின் #சீடர்களாக ஆகி தொடர்ந்து #தளர்ச்சி இன்றி தொண்டுகள் செய்து வர அவர்களெல்லாம் #மெய்ஞானபலம் அடைந்து ஞானவான்களாக #ஆகி அரங்கன் #தேடுகின்ற முருகப்பெருமானின் ஆசி பெற்ற மக்களாய் மாறி இவ்வுகையே மாற்றம் செய்ய வல்ல #வல்லமை உடையவர்களாக, புதுமையானவர்களாக, புண்ணியவான்களாக ஆகி சிறப்படைவார்கள். அவர்களெல்லாம் உலகினில் #சிறப்புடன் செயல்பட்டு அரங்கமகாதேசிகரின் #மூலமாக இவ்வுலகினில் பல #அற்புதங்களை நடத்துவார்கள்.

#உலகமெங்கும் ஆறுமுக அரங்கமகான் தொண்டுகள் #நடைமுறைகள் எல்லாம் உலக நடைமுறைகளாக #மாறி மக்களிடையே பரவி மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு உலகமெங்கும் அரங்கனின் தயவுநெறிக் கொள்கைகள் #பரவி உலகமெங்கும் மக்களிடத்து தயவு பெருகி தர்மமும் #பெருகி உலகமே அதிகமான தர்மபலமிக்க தர்மபூமியாக மாறி அதிசயங்கள் நடந்தேறும் ஆதலால் உலகமக்களே #இதுவரை அரங்கரை உணராமல் இருந்தாலும் சரி உலகமாற்ற #சிந்தனை இல்லாமல் இருந்தாலும் சரி எவ்வித ஞான முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை #செய்யாமல் இருந்திருந்தாலும் சரி மக்களே விழித்துக்கொள்ளுங்கள் #இனிமேலாகினும் உலகமாற்றத்திற்காக அமைக்கப்பட்ட #ஏழாம்படைவீடு, ஞானப்பண்டிதன் முருகப்பெருமானின் #அவதாரம் ஆறுமுக #அரங்கர் அருள்புரிந்து நிற்கும் ஏழாம்படைவீடாம் #துறையூர் ஓங்காரக்குடில் எனும் ஞான பீடத்தினில் தாமதிக்காமல் உடன் விரைந்து சென்று கிடைத்த வாய்பை தவறாமல் பயன்படுத்தி அரங்கரின் திருவடி #பணிந்து அரங்கரை #குருவாய் ஏற்றுக்கொண்டு, அரங்கரிடத்து #தீட்சை உபதேசம் அடைந்து, உபதேசவழி #நடந்து, முருகப்பெருமானின் வழிபாட்டினை #தினம்தினம் தவறாமல் செய்து வந்து #மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைக்கு பசியாற்றுவித்து, தர்மங்களை தாராளமாய் செய்து வர உலகமக்களை பற்றியுள்ள #சகலவிதமான துன்பங்களும் அவர்களை விட்டு விலகி இவ்வுலகமே ஞானிகளின் அருள்பாதுகாப்புமிக்க நல்லுலகமாக மாறி விடும் எனக் கூறுகிறார் மகான் அசுவினித்தேவர்.
– சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *