21.04.2020 மகான் அகப்பைச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மகான் அகப்பைச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
21.04.2020, செவ்வாய்கிழமை

#தவசியே ஆறுமுக அரங்கனே
#தருமவேலி கொண்டு கலியில்
#அவதாரம் புரிந்த ஞான தேசிகனே
அரங்கமகானுன் #தவபலன் கூறி

கூறியே #சார்வரி தகர் திங்கள்
குறைவிலா #அட்டமாதிகதி #குசன்வாரம்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 8ம் நாள், 21.04.2020 செவ்வாய்கிழமை)
அறிவிப்பேன் #தவபிரசன்ன ஆசி
#அகப்பைச்சித்தர் யானும் அருள்வேன்

அருள்மிக்க #அரங்கன் வழி
#ஆற்றல்மிக்க ஞான வழி
#அருள்பலமுடன் உலக மக்கள்
அன்னதான சேவை செய்து

செய்து தரும்பலமும் பெருக்க
#செகம் எங்கும் ஞானவழிகள்
#அய்யமற முருகப்பெருமான் வழிபாடாக
ஆன்மீக #உண்மைவழிகளாக பரவி

பரவியே இந்த பேருலகே
பலமான ஞானபூமியாக மாறும்
#துறவியாக அரங்க ஞானி
#துறையூர் மண்ணில் செய்துவரும்

செய்துவரும் ஞானிகள் #பூஜையை
சிறப்பு பெற #ஏற்று உலகோர்
அய்யமற கலந்து வணங்கி
அரங்கமகானிடம் #தீட்சை ஆசி பெற

ஆசிபெற மக்களுக்கு #அருள்பலம்
அனுகிடுமே #தவபல சக்தியுமாக
வாசிவென்ற #மகான்கள் துணையும்
#வரமும்கூடி உலகோர் சிறப்பர்

சிறப்புதரும் பிரணவக் குடிலை
#சிந்தைவைத்து உலக மக்கள்
#மறுப்பின்றி அனுகி தொடர்பை
மண்ணுலகில் #கூட்டி வருக

வருகவே அரங்கன் அருளும்
#வல்லமைதரும் சைவ நெறியை
#தருமமுடன் உலக மக்கள்
#தட்டாது ஏற்றுத் தொடர

தொடரவே ஆன்ம பலமுடன்
தெய்வபலம் கூடி உலகோர்
#இடரில்லா வாழ்வு காண்பர்
எல்லா வகையிலும் ஏற்றம் அடைவர்

அடையவே #ஆறுமுகா அரங்கா என
அனுதினம் செய்யும் செபதபமே
தடையின்றி தவபலமாக மாறும்
தரணியில் பாதுகாப்பும் கூடும்

தவபிரசன்ன ஆசி முற்றே
– சுபம்

முருகப்பெருமான் தணை
மகான் அகப்பைச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

எல்லையிலாது #தவங்கள் செய்து வெற்றிபெற்ற மகாதவசியே ஆறுமுக அரங்கனே அளவிலாது தர்மங்களை செய்து #அந்த தர்மபலனை தர்மவேலியாகக் கொண்டு இக்கலியுகத்தினில் முருகப்பெருமானின் அவதாரமாக #அவதாரம்புரிந்த ஞானதேசிகனே, ஆறுமுக அரங்கமகா தேசிகனே அற்புதமான உமது #தவபலனை உலகெலாம் கூறியே உலக #நலம் கருதி சார்வரி வருடம் சித்திரை மாதம் 8ம் நாள், 21.04.2020 செவ்வாய்கிழமையான இன்றைய தினமதனிலே #அகப்பைச்சித்தர் யானும் தவ பிரசன்ன நூல்தனையே #உரைக்கின்றேன் என்கிறார் மகான் அகப்பைச்சித்தர்.

#அருள்பலம் மிக்க அரங்கனின் #ஞானவழியானது அளவிலாது ஆற்றல் உடைய ஞானவழியாகும். அரங்கனின் ஞானவழியை #பின்பற்றி அருள் பலம் பெற்று அரங்கன் கூறும் அறநெறியாம் #அன்னதானச்சேவைகளை செய்து உலகமக்கள் #தர்மபலம் பெருக்குவதுடன் உலகமெங்கும் ஞானத்தலைவன் முருகப்பெருமானின் வழிபாடுகளெல்லாம் உண்மை ஞானவழிபாடுகளாக #உலகமெங்கும் பரவி உலகமெங்கும் #சரவணஜோதி வழிபாடினை செய்து வர இந்த உலகமே ஞானபூமியாக மாறும்.

#பற்றற்ற துறவியாக அவதரித்து #துறையூர் மண்ணில் #ஏழாம்படைவீடு துறையூர் ஓங்காரக்குடிலை அமைத்து அரங்கன் செய்துவருகின்ற ஞானிகள் பூஜையை உலகமக்களெல்லாம் #உத்தம பூஜையாக உண்மைஞான பூஜையாக ஏற்றுக்கொண்டு அரங்கன் நடத்தும் பூஜைகளிலே கலந்து ஞானிகளையும் ஞானத்தலைவன் முருகப்பெருமானையும் #வணங்கி முருகப்பெருமானின் அவதாரமாக வீற்றிருக்கும் ஆறுமுக அரங்கமகானின் திருக்கரங்களினால் #தீட்சை உபதேசம் அடைந்து ஆசி பெற ஆசிபெற்ற மக்களுக்கு அருள் பலம் பெருகும் அந்த அருள் பலமே தவபலமாகவும் அளவிலாத #சக்தியாகவும் மாறி அருள் செய்யும். #வாசியை வென்ற மகான்கள் துணையும் அவர்களது #வரமும் பெற்று உலக மக்கள் சிறப்படைவார்கள்.

சகலவிதமான சிறப்புகளையும் தந்தருளும் துறையூர் ஓங்காரக்குடிலை உலக மக்கள் #மறுப்பின்றி அனுகி #ஓங்காரக்குடில் தொடர்பை #அதிகரித்து வர அரங்க தரிசனத்தை #செய்து வர ஆறுமுக அரங்கமகான் கூறும் #சைவநெறியாம் உயிர்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவஉணவு மேற்கொண்டு வருவதுடன் தர்மங்களை தாராளமாய் செய்துவர அவர்களெல்லாம் ஆன்பலம் பெருகி தெய்வ பலமும் பெருகி #துன்பமற்றவாழ்வை வாழ்வார்கள். எல்லா வகையிலும் #முன்னேற்றத்தை அடைவார்கள்.

ஆறுமுகா அரங்கமகா தேசிகா என தினம் தினம் தவறாமல் செய்கின்ற ஜெபதபமே உங்களுக்கு #உறுதியாக #தவபலமாக மாறும் உங்களுக்கு இவ்வுலகினில் அருள் #பாதுகாப்பு பெருகிடும் எனக் கூறுகிறார் மகான் அகப்பைச்சித்தர்.
– சுபம் –

YouTube: https://youtu.be/aIUcOgf-sbY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *