20.05.2020 மகான் கணராமர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

#முருகப்பெருமான் துணை

மகான் கணராமர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
20.05.2020, புதன்கிழமை

1. அப்பனே #தவமாக வந்தநல்
ஆறுமுக #அரங்கமகா தேசிகனே
#காப்பென மக்களை நோக்கி
கருணையாக #வந்த குருராசனே

2. #அரசனே உன்தவபலம் மெச்சி
அருளுவேன் #தவபிரசன்ன ஆசி
வரமென #சார்வரி விடைதிங்கள்
வல்லமைபட சப்தமதிகதி #புந்திவாரம்
(சார்வரி வருடம் #வைகாசி மாதம் 7ம் நாள், 20.05.2020 #புதன்கிழமை)

3. வாரமதில் #கணராமர் யானும்
வழங்குவேன் #உலகோர் நலம்பெற
#குறைவின்றி அருளை வழங்கிடும்
#குருராசன் வழிகாட்டலை ஏற்று

4. ஏற்றுமே #உலகமக்கள் வருக
இணைந்து #சன்மார்க்க நெறியில்
#பற்றுவைத்து கலந்து வர
#பணிந்து முருகக் கடவுளை வணங்கி

5. வணங்கியே #அன்னதானம் அதை
#வையகம் வளம்பெற வழங்கி
வணங்கி மக்களிடை #சமத்துவம்
#வளரவகை செய்து வருக

6. வருகவே இந்த #கலியுகம் தன்னில்
வரமென #தெய்வ சக்திகூடி
#தருமபலம் பெருகி வரவர
#தரணியே பாதுகாப்புமிக்க உலகமாகும்

7. ஆகவே அரங்கஞானி #வாழுகின்ற
#அருட்தயவுமிக்க பிரணவக் #குடிலை
#யுகமக்கள் அனுகி வணங்கிவந்து
#உண்மை வழியாம் ஞான வழியை

8. வழியை #உலகமெங்கிலும் பரப்பி
வணங்கி மக்கள் #வரும்படி
#தெளிவுகாட்டி #அழைப்பு தரும்
தேசிகனிடம் #ஆசிதனை அடைந்து

9. அடைந்துமே #ஆளுமை மக்களும்
#அரங்கா என #மொழிந்து வர
தடையின்றி #தீவினைகள் விலகி
#தருமபலமிக்க ஆட்சியாக #மாறும்

10. மாறுதலை மக்களிடை #உருவாக்கி
#மனத்தூய்மை மனபலம் #அருளும்
ஆறுமுகனார் சரவண #சோதியை
அகிலமெங்கிலும் #ஏற்றி வணங்கிட

11. #வணங்கிட வையகம் தானும்
#வடிவேலனார் தயவே வடிவாகி
ஞானபூமியாக ஞான #ஆட்சி காலமாக மாறும்
நாட்டிவந்த தவபிரசன்ன ஆசி முற்றே
-சுபம்-

முருகப்பெருமான் துணை
மகான் கணராமர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

#எல்லையிலாது தவங்கள் செய்து தவராசனாக வந்த மகா #தவசியே ஆறுமுக அரங்கமகா தேசிகரே மக்களை #காப்பதற்காக கருணையோடு இவ்வுலகினில் #அவதரித்திட்ட #குருராஜனே அரங்கமகா தேசிகனே #அற்புதமான உமது தவபலத்தை மெச்சி உலக #நலம் கருதி தவபிரசன்ன ஆசி நூல் தனையே சார்வரி வருடம் வைகாசி மாதம் 7ம் நாள் 20.05.2020 புதன் கிழமையான இன்றைய தினமதனிலே கணராமர் யானும் #உரைக்கின்றேன் என்கிறார் மகான் கணராமர்.

#உலகநலன் கருதிமக்களுக்கு அருளை #வாரிவாரி வழங்கிடும் #சற்குருநாதன் அரங்கமகானின் #வழிகாட்டலை உபதேசங்களை உலகமக்களெல்லாம் #ஏற்று வாழ்வினில் #கடைபிடித்து வர அரங்கனுடன் இணைந்து #சன்மார்க்கத்தினை கடைப்பிடித்து வருவதுடன் #முழுமுதற் கடவுளாம் முருகப்பெருமானை #பயபக்தியுடன் பணிந்து வணங்கி #அன்னதானத்தினை உலகம் வளம்பெறவேண்டி செய்து உலக மக்களிடையே #சமத்துவம் #சமதர்மம் வளர #வழிவகை செய்து வர இந்த கலியுகத்தினில் #தெய்வீக சக்திகள் வரங்களாக மக்களுக்கு கிடைத்து மக்களுக்கு #தெய்வ பலம் பெருகி #தர்ம பலம் பெருகி இந்த உலகமே அருள் பாதுகாப்பு மிக்க #நல்லுலகமாக மாறிடும்.

#ஆதலினாலே ஆறுமுக அரங்கமகா ஞானி #வாழுகின்ற அருள் தயவுமிக்க #ஓங்காரக்குடிலை உலகமக்களெல்லாம் அனுகி பயபக்தியுடன் வணங்கி வந்து #மெய்ஞான வழியாம் #அரங்கர் கூறும் தூய ஞான #நெறிகளை உலகமெங்கிலும் #பரப்பி மக்களெல்லாம் ஞானிகளை வணங்கிட #வழிவகை செய்து மக்களுக்கு #தெளிவூட்டி அழைப்பு தருகின்ற அரங்கமகா தேசிகரிடம் #ஆசிகளை பெற்று வர வேண்டும்.

#நாட்டை ஆட்சி செய்கின்ற #ஆட்சியாளர்களும் அரங்கமகா தேசிகரை #நம்பி “அரங்கா” என #ஜெபித்து வர அவர்களை பற்றிய #தீவினைகள் விலகி #அறிவில் தெளிவு உண்டாகி #நல்லாட்சியாக தர்மபலமிக்க ஆட்சியாக அவர்களது ஆட்சி மாறிடும்.

#பெருமாற்றங்களை மக்களிடை #உருவாக்கி #மனத்தூய்மையையும் மனோபலத்தையும் #அருள்செய்கின்ற முருகப்பெருமானின் #சரவணஜோதி வழிபாட்டினை #உலகெங்கும் மக்கள் செய்துவர உலகம் முருகப்பெருமானின் #தயவினால் தயவே வடிவான உலகமாக #மாறி ஞானபூமியாக முருகப்பெருமானின் #ஞானஆட்சியாக மாறிடும் எனக் கூறுகிறார் மகான் முருகப்பெருமான்.
-சுபம்-

https://youtu.be/OWxwYSd1NJo

20.05.2020 மகான் கணராமர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *