20.04.2020 மகான் அகத்தியர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மகான் அகத்தியர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
20.04.2020, திங்கட்கிழமை

#தவசக்தி கொண்டு கலியுகத்தில்
தனிப்பெருங் கருணை காட்டி
#அவதாரம் புரிந்தநல் ஞானியே
ஆறுமுக அரங்கனே உன் #தவபலம் கூறி

கூறியே #தவபிரசன்ன ஆசி
குறைவிலா சார்வரி தகர் திங்கள்
இருமூன்றோர் திகதி சோம வாரம்
இயம்பிடுவேன் அகத்தியர் யானும்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 7ம் நாள் 20.04.2020, திங்கட்கிழமை)

யானும் அரங்கன் கேட்க அருள்வேன்
எல்லா மக்களும் தன் #பிறவிப்பயனை
ஞானமாக தவசித்தியாக அடைய
ஞானிகளை வணங்கும் #மார்க்கம் தந்து

தந்துமே பிரணவக் குடிலமைத்து
தருமம் தனை #ஜீவகாருண்யமாக
தந்துமே #அன்னதானம் தொடர
தரும வழியை ஏற்று வந்து

வந்துமே தருமத்தில் #பொருளுதவி
வழங்கி ஆசிதனை ஏற்று
சிந்தைபட ஞான #தீட்சை பெற்று
செபதபம் #நித்தம் செய்து வர

வருகின்ற உலக மக்களுக்கு
வல்லமையான #தவபலமாக மாறும்
தருகின்ற #தருமபலம் தன்னால்
தரணியில் #பாதுகாப்பு பெருகும்

பெருகவே கலியுகம் தன்னில்
#பேரிடர் துன்பமாக பரவிவர
வருமுலகில் #மக்கள் இன்னும்
வள்ளல் #நெறிக்கு வாரா காலம் கடத்தினால்

கடத்தினால் #கிருமி வழி துன்பம்
#கணக்கிலா அழிவாக மாற நேரும்
இடர்கள் இனியும் கூடா வண்ணம்
இருக்க மீட்பு கொண்டு தேற

தேறவே சன்மார்க்க நெறி #வழியை
#தேர்வு செய்து உலக மக்கள்
ஆறுதல் #தேடி அரங்க ஞானி
#அருட்குடில் அணுகி தஞ்சம் பெற

பெறுவதுடன் பேராசான் தவநெறிமுறை
பிசகில்லா தீட்சையாக ஏற்று
ஆறுமுகனார் #நாமசெபம் போற்றி
அன்னதானமதை #உலகளாவிய வண்ணம்

வண்ணம் செய்து வருதலுற
வடிவேலனார் ஆசி #அருள்கூடி
மண்ணுலகே பேரிடர் விலகி
மரணமில்லா பாதுகாப்பு காண்கும் தவபிரசன்ன ஆசி முற்றே.
-சுபம்

#முருகப்பெருமான் துணை
மகான் #அகத்தியர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

பலபல ஜென்மங்களாக தாம் செய்திட்ட தவத்தின் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி அதை தர்மபலமாக மாற்றி உலக மக்களுக்கு தனிப்பெருங் கருணை காட்டி தர்மங்களை செய்து உலக மக்களை கலியுகத் துன்பத்திலிருந்து காக்கவே முருகப்பெருமானின் அவதாரமாக அவதரித்திட்ட ஆறுமுக அரங்கனே உமது தவ வலிமையை உலகமெலாம் கூறியே #தவபிரசன்ன ஆசி நூல்தனையே #சார்வரி வருடம் சித்திரை மாதம் 7ம் நாள் 20.04.2020, திங்கட்கிழமையான இன்றைய தினமதனிலே அகத்தியர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் அகத்திய #மகரிஷி.

எல்லா மக்களும் அவரவரின் பிறவிப்பயனை ஞானத்தின் வடிவிலும் தவசித்தியாகவும் அடைந்து கடைத்தேறிட அவர்களுக்கு வல்லமைமிக்க மார்க்கமான உண்மை ஞானமார்க்கமான ஞானிகளை வணங்கும் அற்புதமான தூயநெறி மார்க்கத்தினை தந்து உலகை காக்க ஞானபண்டிதன் தலைமையில் ஞானிகள் துணையுடன் ஏழாம் படை வீடாக #துறையூர் ஓங்காரக்குடிலை அமைத்து அளவிலாது தர்மங்களை உலக மக்களுக்கு ஜீவகாருண்யமாக தந்து அன்னதானத்தினை தொடர்ந்து செய்து வருகின்றார். அத்தகைய வல்லமைமிக்கதும் உலகத்தையே மாற்றி அமைக்கும் சக்தி மிக்கதுமாகிய அரங்கரின் தர்மவழிகளை ஏற்று தர்மங்களை செய்து வருவதுடன் #அரங்கர் ஆற்றும் தர்மப்பணிகளிலே பொருளுதவிகளை செய்து அரங்கமகானின் தயவையும் அருளையும் பெற்று மனமுவந்து அரங்கர் திருவடிகளை பயபக்தியுடன் #பணிந்து வணங்கி அண்ணல் அரங்கரிடத்து தீட்சை உபதேசம் அடைந்து அரங்கரின் உபதேச வழி நடந்து தினம்தினம் மறவாமல் ஞானிகளை பூஜை செய்து வரவர அவர்கள் செய்யும் பூஜையும் தர்மமும் அரங்கன் அருளால் #செய்தற்கரிய தவபலமாக மாறும். #அன்பர்கள் செய்கின்ற தர்மத்தின் பலன் உலகமெங்கும் பரவி இந்த உலகையே காக்கும் மகா சக்தியாக மாறும், உலகம் தர்மத்தின் பாதுகாப்பை பெறும்.

தற்சமயம் உலகமெங்கும் கலியுகத்தின் கொடுமையான துன்பத்தினால் மக்கள் செய்த உயிர்க்கொலையினாலும் உலகமெங்கும் இயற்கை பேரிடராக கிருமிவழி துன்பம் பரவி மக்களை வாட்டி வதைக்கிறது. உலக மக்களே இனிமேலாகினும் திருந்தி விடுங்கள். தாங்கள் செய்கின்ற உயிர்க்கொலையை நிறுத்துங்கள், புலால் உண்பதை நிறுத்துங்கள், ஜீவதயவை அடிப்படையாகக் கொண்ட வள்ளல் பெருமான் ஜீவகாருண்ய நெறிக்கு வாருங்கள். அவ்வாறு ஜீவதயவிற்கு வாராமல் இனியும் காலம் கடத்தினால் உலகை தற்சமயம் பற்றியுள்ள கிருமிவழி துன்பம் மேலும் மேலும் அதிகமாகி உலகையே உலுக்கி கணக்கில்லா அழிவாக மாற நேரும். ஆகவே இனியும் உலகினில் துன்பம் அதிகமாகாமல் இருக்கவும் கிருமிவழி துன்பத்திலிருந்து மீண்டு உலகம் தேறிடவும் உலக மக்களே அரங்கர் கூறும் அற்புத தயவுநெறியாம் வள்ளல் பெருமான் அளித்த தயவுநெறியாம் சன்மார்க்க நெறிமுறையை உலகோர் தேர்வு செய்து அவரவரும் நம்பிக்கையோடு கடைப்பிடித்து வருவதுடன் அவரவர் துன்பம் நீங்கும் பொருட்டு அவரவரும் ஆறுதல் தரும் அரங்கஞானி ஆறுமுகப்பெருமானின் ஏழாம்படை வீடு ஓங்காரக்குடிலை அணுகி அரங்கன் திருவடிகளே கதி என தஞ்சம் அடைந்து உலகப்பேராசான் அரங்கனிடத்து தவ நெறிமுறைகளை தீட்சைகளாக ஏற்று முருகப்பெருமானின் திருநாமங்களை தவறாமல் நாமஜெபங்களாக ஜெபித்து பயபக்தியுடன் பூஜைகளாக செய்து வருவதுடன் அரங்கரின் தர்மநெறியாகிய அன்னதானத்தினை உலகமக்களெல்லாம் #உலகளாவிய வண்ணம் செய்து வர உலகமெங்கும் முருகப்பெருமானின் அருளாசிகள் பெருகி இந்த உலகை பற்றியுள்ள கிருமி வழியினால் ஆன இயற்கை பேரிடர் துன்பங்கள் உலகை விட்டு விலகி உலகமே மரணமிலாது ஞானிகளின் அருள் பாதுகாப்பை பெறும் எனக் கூறுகிறார் மகான் அகத்திய பெருமான்.
-சுபம்

(3945 அகத்தியர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல் 20.04.2020)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *