19.05.2020 மகான் கவுபாலச் சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை

மகான் #கவுபாலச்சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
19.05.2020, செவ்வாய்கிழமை

1. வாழ்க #அகத்தியர் சன்மார்க்கம்
வளர்க #அரங்க ஞானி தருமம்
வாழ்க வாழ்க #அவதார ஞானி
வளர்க வளர்க #அரங்கன் ஞான கூட்டம்

2. கூட்டமாக ஞானிகள் #படை
குருவரங்கன் #பிரணவக் குடிலை
தட்டாது #வரம் அருளி வருக
தாமுரைப்பேன் தவபிரசன்ன #ஆசி

3. ஆசியை #சார்வரி விடை திங்கள்
அறிவிக்க #சஷ்டி திகதி #குசன் வாரம்
(சார்வரி வருடம் #வைகாசி மாதம் 6ம் நாள், 19.05.2020 #செவ்வாய்கிழமை)
ஆசிபட கவுபாலச் #சித்தர் யானும்
அருளுவேன் உலகோர் #நலம்பெற

4. நலம்தரும் #சக்தியாக ஞானமாக
ஞானியாக #வந்த அரங்கமகானை
வலம்வர #உலக மக்களுக்கு
வல்லமையான #பாதுகாப்பு கிட்டும்

5. கிட்டுமே மக்களிடை #எக்காலமும்
கேடான #சிந்தை வஞ்சமில்லா
கட்டமில்லா #வாழ்வுநிலை காணும்
காணவே அரங்க ஞானியரின்

6. ஞானியரின் சுத்த #நெறி முறை
ஞாலமதில் உலக #மக்களும்
இனிமைபட #நம்பகம் கொண்டு
இடைவிடா #தொடர்ந்து ஏற்றுவர

7. வருகவே ஞானிகளின் #ஆசியோடு
#வடிவேலன் தயவும் #அருளும் பெறுவர்
தரும வழிகளை #தொடர்ந்தும் வருக
தரணியோர்க்கு வளமும் #பலமும் கூடும்

8. கூடவே கலிகால #சிக்கலாகி
குவலயமே #அஞ்சி நடுங்கும்
#பேரிடர் மிகுந்த போதும்
#பேராசான் அரங்கன் வணங்குகின்ற

9. வணங்குகின்ற #ஞானிகள் பூஜையோடு
வழுவாது தரும #சிந்தை பெருக
#வணங்கி ஏற்றுத் தொடர
வழுவாது தயவுநெறிபட #நடக்க

10. நடக்கவே பேரிடர் #விலகும்
நாடெங்கிலும் #பாதுகாப்பு கூடி
இடர் இடை #கண்டம் இல்லா
யாவர்க்கும் #ஆயுள்கீர்த்தி காணும்

11. காணவே #கலியுகம் #தீவினை நீங்கி
களங்கமற #ஞானயுகம் ஆகிட
ஞானவான்கள் #வழிக்கு வருகவே
ஞானதேசிகன் வழி #மாற்றம் காணும்
தவபிரசன்ன ஆசி முற்றே
-சுபம்-

முருகப்பெருமான் துணை
மகான் கவுபாலச் சித்தர் அருளிய #தவபிரசன்ன ஆசி நூலின் சாரம்:

வாழ்க அகத்தியர் சன்மார்க்கம்.
வளர்க அரங்கமகாதேசிகரின் தர்மம்.
வாழ்க வாழ்க ஆறுமுக அரங்கமகா தேசிக மகா ஞானி.
வளர்க வளர்க அரங்கரை பின்தொடரும் ஞானக்கூட்டம்.

வல்லமைமிக்க #ஏழாம்படைவீடு #துறையூர் ஓங்காரக்குடிலை ஞானிகளின் #படை பெரும் கூட்டமாக #சூழ்ந்து நின்று அரங்கனை #நாடி வருகின்றவர்களுக்கு #தவறாது வரமளித்து வருகின்றார் மேன்மை மிக்க அரங்க மகானுக்கு சார்வரி வருடம் வைகாசி மாதம் 6ம் நாள் 19.05.2020 செவ்வாய்கிழமையான இன்றைய தினமதனிலே கவுபாலச் சித்தர் யானும் தவ பிரசன்ன ஆசி நூல்தனையே #உரைக்கின்றேன் என்கிறார் #மகான் கவுபாலச் சித்தர்.

எல்லா #நலன்களையும் தருகின்ற #மகா சக்தியாக ஞானமாக ஞானத்தின் #வடிவமாக மகா ஞானியாக #வந்துதித்த அரங்க மகானை #குருவாய் ஏற்று #வணங்கிட உலக மக்களுக்கு #வல்லமைமிக்க அரங்கரின் அருள் பாதுகாப்பு கிடைக்கும். ஆசிபெற்ற மக்களுக்கு #கேடான சிந்தனைகள் #வராது வஞ்சனைகள் நீங்கும், #கஷ்டங்கள் இல்லாத அமைதியான #வாழ்வு கிடைத்திடும்.

ஆறுமுக அரங்க மகாதேசிகரின் #சுத்த நெறிமுறைகளை உலக மக்கள் நம்பிக்கையோடு ஏற்று #இடைவிடாது தொடர்ந்து #நெறிபிறழாது நடந்து வர ஞானிகளின் ஆசியோடு முருகப்பெருமானின் அருளும் தயவும் பெறுவார்கள். தர்மத்தின் வழிகளை தொடர்ந்து நடந்து தர்மங்களை செய்து வர உலகோர்க்கு #சர்வ_வளமும் #சர்வ_பலமும் பெருகிடும்.

உலக மக்களே கலிகாலத்தின் #மிகப்பெரும் சிக்கலாக இந்த #உலகமே அஞ்சி நடுங்குகின்ற #கிருமி வழியிலான #பேரிடர்கள் பெருகி வருகின்ற போதும் அந்த துன்பங்களில் இருந்து #மீள வேண்டுமாயின் மக்களே நீங்களெல்லாம் #அரங்கரை வணங்கி, #ஞானம் பெற்ற #ஞானிகள்_பூஜையை நீங்களும் செய்வதுடன் #தர்மங்களை தளறாமல் செய்து வருவதுடன் தயவுநெறியில் #நடந்து வர உலகை பற்றிய பேரிடர் உலகை விட்டு விலகிடும். #உலகமெங்கும் பாதுகாப்பு #பெருகி துன்பங்களில்லாத #மரணங்களில்லாத வகையிலே உலகம் பாதுகாப்படைந்து உலகமக்களுக்கு நீடிய #ஆயுள் உண்டாகும். கலியுகமானது தீவினைகளெல்லாம் #நீங்கி குற்றமற்ற ஞானயுகமாக ஆகிட மக்களே நீங்கள் ஞானிகளின் வழிக்கு #வந்திட வேண்டும் அப்படி வந்திட்டால் ஆறுமுக அரங்கமகாதேசிகரின் #மூலமாக இந்த உலகம் விரைந்து #மாற்றம் அடையும் எனக் கூறுகிறார் மகான் கவுபாலச் சித்தர்.
-சுபம்

https://youtu.be/egItDgI2FIQ

19.05.2020 மகான் கவுபாலச் சித்தர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *