19.04.2020 மகான் சகாதேவன் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மகான் #சகாதேவன் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்
சுவடி வாசித்தளித்தவர்  T . ராஜேந்திரன் , M . A . , B . Ed . ,
19.04.2020, ஞாயிற்றுக்கிழமை

தருமனே ஆறுமுக அரங்கனே
தவராசனே ஞான தேசிகனே
#வறுமை போக்கிட கலியுகம் தன்னில்
வள்ளலாய் வந்த ஞானியே

ஞானியே உன் பெருமை கூறி
ஞாலமதில் சார்வரி தகர் திங்கள்
கனிவுபட சஷ்டி திகதி கதிர்வாரம்
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 6ம் நாள் 19 .04.2020 , ஞாயிற்றுக்கிழமை)
கண்டுரைப்பேன் சகாதேவன் யானும்

யானும் அருள் பிரசன்ன ஆசி
உலக நலம் பெற உரைப்பேன்
ஞானமாக அருளாசி தருகின்ற
ஞானிகள் பூஜை நடத்தி அருள்கின்ற

அருள்கின்ற ஆறுமுகனார் அவதார
அரங்கமகான் #திருவடி பணிந்து
அருள் பெறுகின்ற உலக மக்கள்
அனைவரும் ஞானவான்களாகி

ஆகியே அரங்க ஞானியிடம் #தீட்சை
அணுகி #முழுமதி காலம் தன்னில்
அகிலத்தார் ஏற்று வருதல் காண
அனைவருக்கும் ஆயுள் கீர்த்தி காணும்

காணவே அரங்கன் காட்டும் தருமத்தை
கலியுகத்தார் கடமையாக ஏற்று
தானதரும சிந்தை மக்களிடை
தரணியெங்கும் பரவும்படி செய்து

செய்துமே அன்னதான சேவை பெருக
செகமெல்லாம் சைவ நெறியெனும்
மெய்ஞானக் கொள்கை ஏற்கப்பட
மண்ணுலகம் கலித்துன்பங்களை வென்று

வென்று எங்கும் எதிலும்
விரைவான மாற்றம் ஏற்றமும்
நன்றான சமூகச் சூழலுடன்
நாடெங்கிலும் சமத்துவ நிலை பெருகி

பெருகியே கலியுகம் தானும்
பேராசான் அருளால் ஞானயுகமாகும்
முருகப்பெருமான் வழிபாடு தன்னை
முழுமைபட உலகமக்கள் செய்துவர

வருகவே #தெய்வபலம் கூடியே
வையகம் பாதுகாப்பான நிலைக்கு மாறும்
தருமத்துடன் கூடிய வழிபாட்டை
தரணியோர் பின்பற்றி தொடர

தொடரவே மக்களுக்கு இடரில்லா
தேற்றமும் நல்ல மாற்றமும் கூடி
தடையற ஞானயுக வாழ்வு பெறுவர்
தாமுரைத்த அருள் பிரசன்ன ஆசி முற்றே

சுபம்.

முருகப்பெருமான் துணை. மகான் சகாதேவன் அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

தர்மங்களை எல்லையிலாது செய்து தர்மத்தின் தலைவனாக விளங்கும் மாதருமனே, ஆறுமுக அரங்கமகா தேசிகனே, தவராசனே, ஞானதேசிகனே, இந்த கலியுகத்தினுள் நிகழும் கொடுமையான வறுமையை போக்கி, மக்களை காக்கவே வள்ளலாய் முருகப்பெருமானின் அவதாரமாய் அவதரித்திட்ட ஞானியே, ஆறுமுக அரங்கமகாதேசிகனே அற்புதமான உமது பெருமைகளை உலகமெலாம் கூறியே உலக நலம் கருதி சார்வரி வருடம் சித்திரை மாதம் 6ம் நாள் 19.04.2020, ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினமதனிலே அருள் பிரசன்ன ஆசி நூல்தனையே சகாதேவன் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் சகாதேவன்.

உலக மக்கள் கடைத்தேறிட ஞானத்தினை அருளாசிகளாக தந்து உலகமெங்கும் மக்கள் கடைத்தேறிட உண்மை ஞானவழிபாடாகிய ஞானிகள் பூஜைகளை நடத்தி மக்களையெல்லாம் ஞானிகளை வழிபட செய்து அருளாசி செய்து காக்கின்ற முருகப்பெருமானின் அவதார ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் #திருவடி பணிந்து அரங்கரின் அருளாசிகளை தயவை பெறுகின்ற உலக #மக்கள் அனைவரும் ஞானவான்களாவர்.

ஆறுமுக அரங்க மகானிடத்து #தீட்சை உபதேசங்களை பெற்று உலக நலன் கருதி பிரதி மாதம் தோறும் #பௌர்ணமி தினத்திலே அரங்கர் நடத்தும் ஞானிகள் சிறப்பு வழிபாடுகளில் #சித்தர் பூஜைகளிலே கலந்து பூஜைகள் செய்து ஞானிகளின் ஆசிகளை பெற்று வர, அவரவர்க்கு நீடிய #ஆயுள் உண்டாகும், ஆறுமுக அரங்கமகான் மக்கள் நலனுக்காக அருளும் வல்லமைமிக்க தர்ம #நெறிகளை ஏற்று தர்மம் செய்வதை கடமையாக ஏற்று தளராது தர்மங்களை தொடர்ந்து செய்து வருவதுடன் அரங்கரின் தர்ம சிந்தைகளை உலக மக்களிடத்தில் பரப்பி உலக மக்களின் தர்ம சிந்தையை அதிகப்படுத்தி உலகமெங்கும் அன்னதான சேவை பெருகபெருக, உலகமெலாம் மக்கள் உயிர்க்கொலை தவிர்த்து #புலால் மறுத்து சுத்த #சைவ உணவை மேற்கொண்டு #சைவநெறி என்கின்ற மெய்ஞான கொள்கையை ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்துவர, இவ்வுலகம் கலியுகத் துன்பங்களை வென்று உலகமெங்கும் எங்கும் எதிலும் வெகு விரைவான மாற்றங்கள் உண்டாகி நல்ல முன்னேற்றமும் இவ்வுலகம் காணும்.

நாடெங்கிலும் நன்றான சமூக #சூழல் உருவாகி நாடெங்கும் சமத்துவ நிலை பெருகி கலியுகம் தானும் உலகப்பேராசான் ஆறுமுக அரங்கமகா தேசிகரின் அருளால் #ஞானயுகமாகும். ஞானத்தலைவன் முருகப்பெருமானின் வழிபாடுகள் தன்னை உலகமக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு பூஜைகள் செய்து வர, உலகமெங்கும் தெய்வ பலம் பெருகி இந்த உலகமே பாதுகாப்பான நிலைமைக்கு மாறும். தருமத்துடன் கூடிய வழிபாட்டினை உலகோர் ஏற்றுத் தொடர மக்களுக்கு இடரற்ற வாழ்வும் நல்ல முன்னேற்றமும் அற்புதமான மாற்றங்களையும் வாழ்வில் கண்டு தடைகளின்றி ஞானயுக வாழ்வு பெறுவர் எனக் கூறுகிறார் மகான் சகாதேவன்.

– சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *