19 முதல் 26.04.2020 முடிய மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

முருகப்பெருமான் துணை

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான்

எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல் (சார்வரி சித்திரை மாதம் 06ஆம் திகதி முதல் சித்திரை மாதம் 13ஆம் திகதி வரை ஏப்ரல் 19ம் திகதி ஞாயிறு முதல் ஏப்ரல் 26ம் திகதி ஞாயிறு வரை)

சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A.,B.Ed.

காக்க காக்க #கனகவேல் காக்க
கலியின் #துன்பம் போக்கி வருக
ஆக்கமுடன் #சைவ நெறி ஏற்று
ஆறுமுகனாரை வேண்டி அழைக்க

அழைக்கவே இந்தியா தமிழகம்
ஆபத்தின்றி பாதுகாப்பு பெறுமெனக் கூறி
காலமதில் #அகத்தியமகரிஷி யானும்
கண்டுரைப்பேன் சார்வரி தகர் திங்களில்

திங்களில் சஷ்டிதிகதி மேல் முன்னான்கோர் திகதிவரை
(சார்வரி வருடம் சித்திரை மாதம் 06ம் நாள் 19.04.2020, ஞாயிறு முதல் சித்திரை மாதம் 13ம் நாள் 26.04.2020 ஞாயிறு முடிய)
தேசமாம் #பாரதம் தமிழகம் தன்னில்
இங்கனமே நடக்கும் நிகழ்வாக எதிர்கால பலனாக
இயம்பிடுவேன் வார ஆசி தன்னை

தன்னிலே #தூரதேசங்கள் எல்லாம்
தன் அழிவை #பேரிடர் வழியில்
இன்னலாக மிகுதி #கண்டும்கூட
இந்திய தமிழக மக்கள் #அச்சமிலா

அச்சமிலா #அலட்சியம் காட்டி
அசைவ வெறி கொண்டு அலைய
அச்சமிலா #உயிர்ப்பலி தந்துமே
ஆன்மாவுக்கு அளவிலா கருமம் சேர்த்துவர

வருகவே இந்த நிலை #தொடர்ந்தால்
வதைஎன கருதா உயிர்க்கொலை #மிகுந்தால்
தருமமில்லா பூமி #அனைத்துமே
தானாக #அழிவு மிகுதி காணநேரும்

#நேருமையிலா இன பேதமுள்ளவர்கள்
நிலவுலகை #கலகமூட்டி பிரிப்பவர்கள்
#வறுமையை பயன்படுத்தி எளியோரை
வசமாக்கி #மதகலகம் செய்பவர்கள்

#செய்கைவழி மக்களிடை தருமமிலா
#சேவை மறந்து #ஊழல் செய்பவர்கள்
#அய்யமிலா தாய் எனக் கருதா
அரிவையென #கலங்கம் தருபவர்கள்

தருமம் மறந்து #சுயநலமுற நடப்பவர்கள்
#தண்டிக்கப்படுவர் கலித் துன்பமாக
#கிருமிவழி மரணம் இடர் காண்பர்
கேட்டிடுவாய் பாதுகாப்பு பெறவே

#காப்புபெற கலியுக ஞானியான
கந்தவேலன் #சக்தியாக வந்த அரங்கனை
#ஒப்புக்கொண்டு தரும வழிக்கு வர
#உயிர்க்கொலை தவிர்த்து சுத்தநெறிக்கு வர

வருவதுடன் #வடிவேலனார் வழிபாடு
வல்லமைபட #சரவணசோதி ஏற்றி
வணங்க முருகப்பெருமான் தயவு பெருகியே
முழுமைபட இந்தியா தமிழகம் பேரிடரை வெல்லும் வார ஆசி முற்றே

– சுபம்

முருகப்பெருமான் துணை
மகான் அகத்தியமகரிஷி அருளிய வார ஆசி நூலின் சாரம்:

சார்வரி வருடம் சித்திரை மாதம் 06ம் நாள் 19.04.2020, ஞாயிறு முதல் சித்திரை மாதம் 13ம் நாள் 26.04.2020, ஞாயிறு முடிய உள்ள கால நிகழ்வுகள் குறித்த ஆசி நூல் :

 உலக #மக்களையெல்லாம் கந்தப்பெருமானின் #கனகவேல் காக்கட்டும், கனகவேலன் #முருகப்பெருமான் உலகமக்களை கலியுக துன்பத்திலிருந்து மீட்டு காக்கட்டும், #உயிர்க்கொலை தவிர்த்து, #புலால் மறுத்து, சுத்த #சைவ உணவினை மேற்கொண்டு, சுத்த சைவநெறியைக் கடைப்பிடித்து, மக்களெல்லாம் முருகப்பெருமானை அழைத்து “காக்க வேண்டும் முருகப்பெருமானே” என பூஜை செய்து வேண்டுகோள் #வைத்தால், இந்தியாவும் தமிழகமும் ஞானிகளாலும் ஞானத்தலைவன் முருகப்பெருமானாலும் #காப்பாற்றப்படும் எனக் கூறியே சார்வரி வருடம் சித்திரை மாதம் 6ம் நாள் 19.04.2020, ஞாயிற்றுக்கிழமை முதல் சித்திரை 13ம் நாள் 26.04.2020, ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ள காலத்தில் இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கவிருக்கும் #நிகழ்வுகளை வார ஆசி நூலாக #அகத்தியமகரிஷி யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் அகத்தியமகரிஷி.

 உலகினில் உள்ள #அயல் நாடுகளில் எல்லாம் பேரிடரினால் அந்தந்த நாடுகள் தம்தம் #அழிவினை வெகுவாக #சந்தித்து வருகின்றன. இதை இந்திய தேசமக்களும் தமிழக மக்களும் நன்கு #உணர்ந்துள்ள போதும், சற்றும் #அச்சமின்றி #அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். உயிர்ப்பலியிட்டால் இயற்கையின் #கோபத்திற்கு ஆளாகி, கொடும் நச்சுக்கிருமி தாக்குதல்களால் #அவதிப்பட்டபோதும் #அசைவ_வெறி கொண்டு மக்கள் அச்சமின்றி அசைவ உணவினை #உயிர்ப்பலி செய்து உண்கின்றனர். தாம் செய்த உயிர்ப்பலி ஆன்மாவிற்கு அளவிலாது #தீய_கர்மவினைகளை உண்டாக்குமே என்ற கவலை சிறிதும் இன்றி மீண்டும்மீண்டும் உயிர்ப்பலியிட்டு அசைவ உணவு உண்பதை தொடர்ந்து செய்து வந்தால், தர்மவழியில் நடக்காத #தயவு உணர்வு #இல்லாத #தேசங்கள் அனைத்துமே தானாகவே #மிகுதியான அழிவினை சந்திக்க நேரும்.

 உலகமக்களே மிகுந்த #கவனம் தேவை, இனிமேலாகினும் #திருந்தி விடுங்கள். அதைவிடுத்து #மீண்டும்மீண்டும் கருமவினைகளை உண்டாக்கும் செயல்களை செய்யாதீர்கள், #நேர்மையற்ற வழியில் நடப்பவர்கள், #இனபேதம் உள்ளவர்கள், மக்களிடையே #பேதாபேதங்களை உண்டாக்கி #சாதியாலும், #மதத்தாலும், #மொழியாலும், #இனத்தாலும் நாட்டில் #கலகத்தை உண்டு பண்ணுகின்றவர்கள் மக்களின் #ஏழ்மையை பயன்படுத்தி #எளியோரை வசப்படுத்தி மத கலகத்தினை உண்டாக்குகின்றவர்கள், #சேவை செய்வதாக நடித்து, #பொய் வேடமிட்டு, மக்களுக்கு சேவை செய்வதாக #கணக்குகளை காட்டி #ஊழல் செய்து, பொருளை #சேர்ப்பவர்கள் தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் #மங்கையரை #களங்கம் செய்பவர்கள், தருமத்தை மறந்து #சுயநலமாக நடந்து கொள்பவர்கள், இந்த #இயற்கை_பேரிடரில் கலியுக துன்பம் அதிகமாகி கிருமிகளின் #தாக்குதலிற்கு ஆளாகி மரணத்தை அடையும் #வாய்ப்புகள் உண்டு.

 ஆதலினால் உலகமக்களே இனிமேலாகினும் திருந்திவிடுங்கள். முருகப்பெருமானின் #அவதாரமாக கலியுக ஞானியாக வந்துதித்த ஆறுமுக அரங்கமகா தேசிகனாரை #குருவாக ஏற்றுக்கொண்டு அரங்கமகான் #கூறும் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவஉணவினை #மேற்கொண்டு தருமங்களை செய்து தரும நெறியினை கடைப்பிடித்து வருவதுடன் முருகப்பெருமானை #வணங்கி #சரவணஜோதி வழிபாடுகளை செய்து வர, முருகப்பெருமானின் தயவு உலகினில் பெருகி இந்திய தேசமும் தமிழகமும் விரைந்து பேரிடரில் இருந்து மீளும் எனக் கூறுகிறார் மகான் அகத்திய மகரிஷி.

– சுபம் –

https://youtu.be/tx9hS7ANeA0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *